Monday 31 December 2018

புத்தாண்டு வாழ்த்துகள்

புதிய ஆண்டு பிறந்தது /
புதுமைகள் காணவே மலர்ந்தது /
புரட்சி எங்கும் மங்கட்டும் /
புனர்வாழ்வு என்றும் தொடரட்டும் /

உள்ளங்கள் இணையட்டும் /
உறவுகள் வளரட்டும் /
உழவு நிலம் செழிக்கட்டும் /
உழவர் வாழ்வும் மனமும் சிரிக்கட்டும் /

பழமை கசப்பான நிகழ்வைக்
கசக்கிப் போட்டு /
பிறந்து  வரும் புத்தம் புதிய
ஆண்டை இனிப்பாக்கிட முயன்றிடுவோம் /

அனைவருக்கும்  இனிய ஆங்கிலப் புத்தாண்டு  வாழ்த்துகள் 😊❤❤🌹🌹🌹

Sunday 30 December 2018

என் அன்பே

உன்னைப் பார்க்க நான்
ஏக்கத்தோடு வாழ்ந்த நாட்களோ
ஏகப்பட்ட நாட்கள்.
ஏக்கம் தொலைத்து
உனைப் பார்க்க வந்த வேளையிலே
உன் வரவேற்பு  உண்மையிலே
அடடா பிறமாதம்   பிரமித்தது என் கண்கள்....!

ஊமத்தம்  பூ தூவி வரவேற்றாய்.
அரளிப்  பூ மாலை
போட்டு வாழ்த்துரைத்தாய்.
தீப்பொறியாலே
கோலங்களும் போட்டிருந்தாய்
கள்ளிச் செடி  முற்களால் 
இருக்கை அமைத்திருந்தாய்  
அதிலே பாசத்தோடு
அமர்த்தியும் விட்டாய்
கள்ளிப்பால்  அருந்தக் கொடுத்தாய். ....!

அத்தனையும்  புன்னகையோடு
ஏற்றுக் கொண்டேன்  நான்
ஏன் எதற்காக உன் பிரிவின் வலியை
விட இவை ஒன்றும் பெரிது
இல்லை என்பதற்காக....!

உன் நினைவால்
வருந்தி இறப்பதை விட
நீ விரும்பிக் கொடுக்கும்
விசத்தாலே இறப்பது மேல் என்று
உன் அன்புக் கரம் கொடுத்த  கள்ளிப்பால்
கிண்ணத்தைக் காழியாக்கினேன் ....!

மறு ஜெம்மத்திலாவது
ஏற்றுக் கொள்வாய்
என் அன்பை என்னும் 
நம்பிக்கையில்
உயிர் திறக்கிறேன் என் அன்பே  ....!

      

கொடுமை

கண்ணைக் கொடுத்து 
ஒளியைப் பறிப்பது   -கொடுமை.
வாய்யைக்  கொடுத்து
மொழியைப் பறிப்பது  -கொடுமை.

உறவைக் கொடுத்து 
உரிமையைப் பறிப்பது - கொடுமை.

நட்பைக்  காட்டி  தடை
விதிப்பது  -கொடுமை  .
பாசம்  காட்டி  பாதியில் 
பறிப்பது  -கொடுமை.

பேச விட்டு  முடிக்கும்  முன்
மீதியை  நிறுத்துவது  -கொடுமை.
ஆசை  காட்டி   மோசம்
செய்வது  -கொடுமை

ஆதரவு  காட்டி  அகம்
முறைப்பது-கொடுமை.
இனிமையான வார்த்தை 
தடிப்பாக மாறினால்  -கொடுமை.

இன்பம்  காட்டி 
துன்பம்  கொடுப்பது  -கொடுமை.
இரவு  பகல்  பாராது  இதய
உறவாடல்   செய்து இடை  வெளி 
கொடுப்பது  -கொடுமை.

நினைவு  இழந்து 
நடை  பிணம்  போல்  'நான் 
இருப்பது  -கொடுமை.

இந்தனையும்  புரிந்து  விட்டு
நீ  எட்டி  நின்று வேடிக்கை 
பார்த்துச் சிரிக்கின்றாயே
அதுதான்  கொடுமையிலும்
கொடுமையெடா   பெரும்-கொடுமை.

    

Saturday 29 December 2018

காதலடா

நெஞ்சோடு கலந்த
உன்னை  நஞ்சோடு
பால் அருந்தினாலும்
மறக்க முடியுமா ?

உயிரோடு
கலந்த உன்னை
உதறிய பின்னும்
வெறுக்க முடியுமா?

மஞ்சத்திலே கொஞ்சிட
நினைத்த உன்னை
பஞ்சோடு போட்டு 
எரித்தாலும்
பிரிக்கத் தான் முடியுமா?

உள்ளத்தால் வாழ்ந்தேன்
நீ உதட்டோடு
முடித்துக் கொண்டாய்
உயிரற்றுப் போனது என் காதலடா?

   

எண்ணத்தின் ஏற்பு

பிடிப்பான காதல்
வெடிப்பாகிப் போனால் /
மனம் விரும்பிய காதல்
பிரிவின் வழி ஏறிப் போனால் /

இதயத் துடிப்போடு நகர்ந்த காதல்
துடிப்பு இழந்து போனால் /
குருதியிலே நிறைந்த காதல்
குறுகிய காலத்தில் முடிந்து போனால் /

பாசப் பறவையென பெயரிட்ட
நேசக் காதல் தொலைந்து போனால் /
ஆசை வெள்ளத்தில் உள்ளத்தினிலே
தாமரைப்பூ போல்
மலர்ந்த காதல் வாடிப் போனால் /

நெஞ்சாங் கூட்டில் பஞ்சணை
போட்டு தூங்க விட்ட பருவக்
காதல் மாண்டு போனால் /
இளமை வயதிலே கரும்பாக அரும்பிய காதலிலே கறையான் தங்கிப் போனால் /

எஞ்சிய நாளிகையில் மிஞ்சிய நாட்களில் /
உண்மைக் காதல் உதிப்பதில்லை/
கரம் பிடிக்க வரும் துணையை
ஆழ் மனம் ஏற்பதில்லை /

அன்பாக இருப்பதாய் ஒரு நாடகம் /
அக்கறையுள்ளவனாய் (ளாய்) ஒரு நடிப்பு/
பிடிப்பு இல்லாத வாழ்வைப் பிடித்து படிப் படியாக வயதைக் கடப்பதுதான் எண்ணத்தின் ஏற்பு /

Friday 28 December 2018

மனிதனாக

கடன் கார வாழ்க்கையை
மாற்ற வேண்டும்./
கடமையில் உயரவேண்டும் ./
கேள்விகளுக்கு விடை அளிக்க
வேண்டும் /
கேள்விகளைத் தொடுக்க வேண்டும். /

அன்பால் அணைக்க வேண்டும் /
அன்னை  நாட்டிலும் தலை
குனியாது வாழவேண்டும். /
ஆற்றாமைகளை அழிக்க வேண்டும்./
ஆற்றலைப் பெருக்க வேண்டும். /

பொறுமை காக்க வேண்டும் /
பொது உடமைகளைப் பாது
காக்க வேண்டும். /
இன்னல்களை ஏற்றுக்க  வேண்டும் /
இன்பத்திலும் நுழைய வேண்டும்./

தாழ்த்தப்படுவதில்
இருந்து மாறவேண்டும். /
தாழ்வு மனப்பாங்கை கை
விடவேண்டும்./

அழுவதற்காகவும் /
விழுவதற்காகவும் /
மண்ணில் மனிதனாகப் 
பிறக்கவில்லை/
ஆழ்வதற்காகவும் /
வாழ்வதற்காகவும் /
மண்ணில் மனிதனாக நாம்  உருவெடுத்தோம்./

                 

Wednesday 26 December 2018

என் வாழ்வின் விடிவெள்ளி நீயல்லவா

.

பழமையான தமிழ் எடுத்து
இனிமையான சொல் அமைத்து.
ஒரு காதல் மடல் வரைய ஆசை..\\\

அதில்   உன்  பெயரை  இடை
இடையினிலே போட்டு கவிதை
போல்  வரையவே ஆசை.....\\\\

அடுக்கு மொழி போட்டு தொடுக்கும்
கவிக்கடிதம் என் இதயத் துடிப்பை
உரைக்கும் வண்ணம் எழுத ஆசை.....\\\\\

எழுது கோல் எடுத்து நாற்காலியில்
அமர்ந்த பின்னே விடி வெள்ளியாக
வந்து அமர்கின்றது  உன் மீதான ஆசை ....../////

பறந்து வந்து விடுகிறது காமத்துக் கவிதை
திறந்து விடுகிறது  இதயச் சிறை அதை
விதி வழி வந்த விடி வெள்ளியா நீ அதை
ஆராய்ந்து கூறவே என் நெஞ்சில்  ஆசை ...../////

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்  பூத்த
விடி வெள்ளி நீயடி  உன் விழியோ மின் விளக்குடி
இத்தனையும்  கூறி முடித்த.  மடலை
உன் கரம் சேர்க்கவே இப்போது ஆசை ......../////

நழுவிடும் இதழாய்

நழுவிடும் இதழாய்  -நீ ./
அதைக் கழுவிடும்
உமிழ்நீராய் -நான்./
கொவ்வை இதழ் அழகி -நீ./
அதில் மெதுவாக தடவிக்
கொடுக்கும் சாயம் -நான்./

குயிலாக அழகு
இதழால் இசைப்பது -நீ./
அதில் செந்தமிழ் 
சொல்லாகப் பறப்பது  -நான் /

அழகு இதழால்
அசிங்கமாகத் திட்டித் தீர்ப்பது -நீ ./
அதையும் கேட்ட படியே
பார்த்து ரசிப்பது -நான்./

இப்படியெல்லாம்
கூறி விடவே ஆசையடி ./
நீ யாரோ ?நான் யாரோ ?
உன் புன்னகைப் புகைப் படம்
இங்கே மாட்டியவர் யாரோ .?

நழுவிடும் உன்
மாங்கனி இதழ் கண்டு /
புலம்புகிறது என்
பருவ மனம் நின்று./

       

தாத்தாவும் பாப்பாவும்


               (1)
பாப்பாவுக்கு தாத்தா
கொடுத்த சட்டையின்
மதிப்பு சிறு தொகைதான்
பாப்பா போடும் கும்மாளத்தையும்
வட்டமிட்டு சுத்துவதையும் பார்த்தால்
மதிப்பு அதிகம் தான் அந்த சட்டைக்கு

            (2)

தாத்தா கொடுத்த மிட்டாய்
வெறும் ஐந்து ரூபாய் தான்
அதை பத்திரப் படுத்தி
வைத்துக் கொண்டு பாப்பா
எட்டி எட்டி பார்த்து உண்ணும்
அழகைப் பார்த்தால்  ஏதோ
பட்டணத்து புது வரவு மிட்டாய்
பாப்பா கையில் சிக்கியது போல்
தோனுது .பார்ப்போருக்கு ....///

         (3)

   தாத்தாவின்  கைத் தடியை
எடுத்துக் கொண்டு பாப்பா
குடு குடு கிழவிபோல் வித்தை
காட்டி கேலி பண்ணி நடக்கையிலே
தாத்தா பொக்கை வாயைத் திறந்து
சிரித்தார் சத்தமாகவே  தாத்தா
வாயைப் பார்த்த பாப்பா  தடியைக்
கீழே போட்டு துள்ளிக்குதித்தாள்
தாத்தாவுக்கு பல்லு முளைக்கவில்லை
என்று பாப்பா சொல்லிச் சிரித்தாள்

    

Tuesday 25 December 2018

சுனாமியின் சுவடுகள்

புரண்ட அலை உருண்டு வந்தது /
ஓசை கொடுத்த அலை ஓங்கி அடித்தது  /
நடுக்கடல் நீரும் நகர்ந்து வந்தது /
நகரத்திலும் புகுந்து சென்றது /

கரையோர மக்கள் வாழ்வைப் புரட்டிப் போட்டது /
கடந்து வந்த கடல் யுத்தம் ஒன்று நடத்தி வென்றது /
நட்ட செடியையும் வேரோடு எடுத்தெறிந்தது /
ஆடு மாடு போட்ட குட்டியையும் தன்னோடு இழுத்தது /

மாடி வீட்டையும் முட்டி உடைத்தது /
குடிசைகளையும் தூக்கி வீசியது /
இனம் மதம் மொழியெல்லாம் ஒதுக்கி வச்சது /
இழுத்து விடும் மூச்சை நிறுத்தச் செய்தது  /

சொகுசான வாழ்வுக்கும் கொள்ளி வச்சது /
தெருவோர வாசிகளையும் அள்ளிச் சென்றது /
காடு மேடு எல்லாம் ஏறிச் சென்றது /
கணக்கு இல்லாத உயிர் இனத்தை
தனக்காக்கிக் கொண்டது /

மொட்டோடு முல்லைக் கொடியையும் அழித்தது /
வயிற்றுப் பிள்ளையோடு அன்னையவளையும் அழித்தது  /
ஓடி வந்த ஆழிப் பேரலை மரண ஓலத்தைக்  கொடுத்தது /

மண்ணுக்கு பல இரைகள் கொடுத்தது /
மணமகளின் மங்கள வாழ்க்கையை மங்க வைத்தது /
நாட்டுக்கு நாடு புணக் குபியல் காட்சி கொடுத்தது /
வீட்டுக்கு வீடு இழப்பால் துடிக்கும் விதியைக் கொடுத்தது /

வலிகள் நிறைந்த நினைவைக் கொடுத்தது /
வலிமை இழந்த மனங்கள் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலமையைக் கொடுத்தது /
மாறாத ஆறாத் துயரம் பல உண்டு/
சுனாமியால் வந்த சுவடுகளும்அவையில் ஒன்று /

#சுனாமியில்  #இழந்த #உயிர்களின்
#ஆத்மாவுக்காக. #பிராத்திப்போம் 😢😢

   

Monday 24 December 2018

சின்னவனே

பிரியத்தோடு இதயம் நுழைந்த சின்னவனே../
பிரியாத வரம் ஒன்று வேண்டும் .../
காதல் கனவு காண வேண்டும் /
நிழலலாக நினைவுகள் தொடர வேண்டும் ..../
சிரமங்கள் தாங்கி வென்றிட வேண்டும்.../ இன்பக் கடலில் நீராட வேண்டும்..../ உறவுகள் வாழ்த்த இணைந்திட வேண்டும்..../ கரத்தோடு கரம் சேர வேண்டும்..../ துணைக்குத் துணையாக வாழ்ந்திட வேண்டும்...../

மார்கழி மாதம்

மாதத்தில் இறுதி  மாதம்   /
மழை மேகம்  கொட்டித்தீர்க்கும் /
ஆண்டு  அழகு மலரெல்லாம் /
பூத்துக் குளுங்க மறுக்காத மாதம்  /

சுடுபட்ட மணல் ஆதவனிடமிருந்து /
விடுதலை பெறும் மாதம் /
விண் இருந்து மண் வரைக்கும் /
குளிரால் சூழப்படும்  மாதம் /

குதுகலமாக பிறக்கின்றது /
கிருஸ்த்துமஸ்   விண் உலகை விட்டு /
மண் உலுக்கு  தேவன் இறங்கி  வருகிறான் /
விண்ணுக்கும் மண்ணுக்கும் /
உள்ள ஒற்றுமை  கண்டு மகிழும்  மாதம்/

உருகிடும் மெழுகினாலே/
மனம் கரைந்து மகிழ்கிறான்  /
தேவாலயத்திலே மக்கள்  வெள்ளம்/ கண்டு இதயத்திலே நுழைந்து /
அவன்  அமரும்  மாதம்/

அன்னையென மாதா வருகிறாள் /
அரவணைத்துப்   பிள்ளைக்கு /
ஆசி கூறி மறைகிறாள் /
ஜேசுவின் நாமம் தொழும்/
மனிதர்களுக்கும் நல் மனம்/ கொண்டவனுக்கும்   ஆசி புரியும் மாதம் /

பாவத்துக்குள் புதையுண்ட
ஜெம்மங்களை  /
ஓரம் கட்டிச் செல்கிறான் /
தட்டினால் திறக்கும் /
தேடினால் கிடைக்கும்  /
இது கிருஸ்தவரின் / தாரகை மந்திரம் /
இதைத் தவறாது
அனைவரும் உச்சரிக்கும் மாதம்/

இவை உலகில் அனைத்து/ மதங்களுக்கும்  பொருந்தும்  /
தேடலிலேதான் வெற்றி  உண்டு /
என்று வழியுறுத்துகின்றது /
மதங்கள்  என்றும்  /

இதை புரிந்து  நடந்தால் /
மதம் ஒரு புரட்டு இல்லை /
இறைவனும் கருவறை கொடுக்கும் / அன்னையும் ஒன்றே /.
இரண்டுமே மாறாது என்றுமே  /
என்று உறுதியாய் நம்பு /

மதம் பார்த்து  இனம் பிரிக்காது  /
மனிதம்  பார்த்து இணைந்து
வாழ முந்து/
இறுதி ஆண்டின் இறுதி மாதம் /
குளிரில் கலந்து கடக்கும் மார்கழி  மாதம் /

தமிழச்சி

நான் தமிழச்சி /
உன்னை விரட்டி  அடிப்பேன்
தமிழை வச்சி/
இன்பத்  தமிழுக்காகவே
துன்பம்  கண்ட கருவாச்சி/

கரங்களிலே இல்லை
ஐயனார் அருவாச்சி /
மையினால்  உருவான
(பென.தான் ) எழுத்தாணியே ஆட்சி /

மேகத்தைப்  பிடித்து/
மெத்தையிடத் துடிக்கும்
என் கற்பனை  ஆட்சி  /
புதிய. கோணத்திலும்
தமிழைப் போற்ற எடுப்பதே முயற்சி/

பொய்யான முகத் திரையை
கிழித்துப்  போட தயங்காது
என் மனசாட்சி./
குறுக்குப்  பாதையிலே
வண்டி  ஓட்டாதே /
என் எதிரே வந்து  வாலை ஆட்டு /

அரளிச்  செடியிலும் /
தேனோடு  மலர் உண்டு /
கள்ளிச் செடியிலும்
இனிப்போடு கனி உண்டு /

தமிழுக்கு  தமிழந் தான்  எதிரியாம் /
இது தொண்று தொட்டு
பேசப்படும்  வாய் மொழியாம் ./
எதிர்ப்போரை வீழ்த்தி எழுவது தான்  எழில்சி /
அதற்குத்  தேவையில்லை புரட்சி/

ஆஞ்சனேயர் பக்தன்

எங்கம்மா சொன்னாங்க /
வீதிக்குச் சென்றதுமே /
மங்கையர்  உடை  நடை கண்டு /
மாண்டு விடும்  உன் ஆஞ்சனேயர் /
பிடிவாதம் என்று /

நான் அதைக்
கண்டுக்கவேயில்லை./
வென்று விட்டது
இன்று அம்மா வாக்கு  /
நங்கை அவள் நடை கண்டேன் /
புத்தி இழந்தேன்  /
மங்கை இவள்  இடை கண்டேன் /
பக்தி இழந்தேன் /

அங்கே பெண்கள் கூட்டம்
கண்டேன்  /
துறவரம்  மறந்தேன்
என்  பக்கம் ஒருத்தி வந்தாள்
பரபசத்தில் மிதந்தேன்  /
செக்கச் செவந்த. இதழ் கண்டேன் /
கட்டுக்கடங்காத. ஆசை கொண்டேன் /

மீன் விழி கண்டேன்/
மயங்கி நின்றேன் / 
தேன் தமிழில் சொல் 
தேடி அலைந்தேன் /
காதல் கவிஞனாக  மாறி விட்டேன்  /
அஞ்சலை  கெஞ்சலை /
வான் சோதி மான் சோதி
என்று கவிதை கிறுக்குகின்றேன் /

தெருவிலே நடை  போடத்
தொடங்கி  விட்டேன்/
தெருத் தெருவா போகின்றேன்/
எதை எதையோ சொல்லி மங்கை
மனங்களைத் தேடுகின்றேன் /
ஆஞ்சனேயர்  ஆலையத் தெருவை
மாத்திரம் மறந்து விட்டேன் /

மின்சாரக் கண்களையும் /
குளு குளு  கன்னங்களையும் /
இஞ்சி இடையையும் காட்டி /அப்பாவியான என்னை / (பா )பாடும் கவிஞனாக. மாற்றி  விட்டாளுங்களே /😜

Monday 17 December 2018

வருந்துகிறேன்

தத்துவங்கள் உலாவுகின்றது 
கண்டதுமே என் கண்ணும்
கலங்குகின்றது 
மனமும் ஒரு தாக்க நிலையை
நோக்கிச்  செல்கின்றது......////

தவறு நான் செய்யவில்லை 
தவறான உறவுகளை தலையாக
நம்பி விட்டேன் 
நானும் பொய்யான உலகத்தில்
நுழைந்து விட்டேன் ...../////

என் மெய்யான வாக்கும் அங்கே
பொய்யாகப் போகவே மனம்
நொந்து விட்டேன் 
நம்பிக் கெட்டவர்களின் பெயர்
பட்டியலில் நானும் சேர்ந்து விட்டேன் ......////

நம்பிக்கை துரோகம் செய்யாமலே
அந்த இடத்தை நெருங்கி விட்டேன் 
சொல்வதை செய்ய முடியாத தூரத்திலே
அமர்ந்து விட்டேன் ......////

  எல்லாம் தலை கீழாகப் போனதைக்
கண்டு வருந்துகின்றேன்
தனிமையில் நின்று......../////

    

Sunday 16 December 2018

அவசரத் தூது


யுத்தம் யுத்தம் இனி
உனக்கும் எனக்கும்
என்று தூது விட்டாயே...\

நடுங்கியது என்
நாடோடு சேர்ந்து
நானும் தானடா...........\

ஆஹ முத்தத்தால்
யுத்தம் புரியவா நீ
தூது விட்டாய்.........\

அடடா  சத்தம்
இன்றி  யுத்தமாடா
என் சகலகலா
மன்னவனே.............\

தற்போது சகலரிடமும்
அறிவிப்பு விட்டு
விட்டேன்..........\

ரகசிய அறை  என்று
ஒன்று இல்லையடா
என் சின்னவரே.............\

நீ  என்றோ என்
விழி வாளாலே
வீழ்ந்து விட்டாய்
என்று ..........:\

அறிவித்திருந்தால்
கட்டளை இட்டு
இருப்பேனோடா
நானும்  என்  ராசாவே............\

நீயும் கூறலயே
அதை லேசா
இன்று  நிலமை
மாறிப் போனதேடா
மிகவும் மோசமாகவே
மகராசா...........\

மாசக் கணக்கில்
போர் புரியவே
ஆவேசமாகி விட்டார்கள்
போர் வீரர்கள்...........\

காசிக்குப் போய்
ராசி பலன் பார்த்து
விட்டு சாகாசமாக
வாயா  சாதிக்க
முடியாது உன்னால்
அது சாத்தியம்
இல்லையடா
சகலகலா மன்னரே
முத்த யுத்தம்  நிறுத்தமடா....\😂😂

( ஜாலியாக ஒரு கேலி )

தமிழ்


தமிழுக்கு என்றும்
இல்லை எல்லை.
அதை வளர்ப்பவனுக்குத்
தான் பெரும் தொல்லை ..!

தமிழுக்கு
நிகராகுமோ முல்லை
அதை வர்ணிக்க
வார்த்தை இல்லை ...!

தமிழ் புதுமை
படைப்பதோ உண்மை .
அதைச் சொல்லப்
போதாது  வாய்மை...!

உயிர் மெய்
எழுத்துக்கள் ஒரு தனிமை .
அதை அறிந்து கற்றால்
தமிழால் நமக்குப் பெருமை ...!

      

நீ போட்ட காதல் விதை

புல்லாக முளையிடுமா?
முள்ளாக விளைந்திடுமா?
பூவாக மணம் தருமா?
கூவம் போல் நாறிடுமா ?

வேம்பாகக் கசக்குமா?
மா பலா போல் சுவைத்திடுமா.?
மழைக்குக் குடையாகிடுமா ?
வெயிலுக்கு நிழல் தந்திடுமா?

வேரோடு நிலம் காக்குமா?
கிளை விட்டுப் பணம் கொடுக்குமா ?
விதை கொட்டி வம்சம் பெருக்குமா?
பல ஆண்டு வரை உறுதியாய்
உறுதுணையாய் நிற்குமா?

என் இறுதிப் பயணத்தின் போதும்
உறுதிப் பாடை கொடுக்குமா?
இல்லை சாதி என்னும்
இடி விழுந்து இறக்குமா?
இத்தனைக்கும் இடம் இன்றி
முளையிலே கரிகிடுமா ?
போட்ட விதை மண்ணோடு மாண்டிடுமா?

      

Saturday 15 December 2018

நாம் முத்தெடுக்க

பித்தம் கொண்டு
தலையில் அடித்தால்
சித்தம்  கலங்கி விடும்.
இரத்தமும் வாந்தியுடன்
தரையை தழுவி விடும்...!

உன்னை அணைத்தால்
சித்தம்  தெளிந்து விடும்.
முத்தம்   பிறந்து  விடும்.
சத்தம்  அடங்கி  விடும்.
மோகம்  எழுந்து  விடும்..!

தாகம் தனிந்து  விடும்.
இடை வெளி குறைந்து விடும்.
இளமை புரிந்து விடும்.
இனிமை கிடைத்து விடும்..!

இதயத்தின் துடிப்பு அதிகரித்து விடும்.
கொடுக்கல் வாங்கல் நடந்து விடும்.
கொண்டையில் பூ நிலைத்து விடும்.
நெற்றியில் திலகம் சிரித்து விடும்.
ஆகையால் நித்தம் நீ முத்தம்
கொடு நாம் முத்தெடுக்க.....!

        

கட்டிப் பிடித்து காயங்களாற்றுகிறாய்

முகத்தைப் பார்த்ததில்லை.
அகத்தைத் தொட்டதில்லை.
நெருங்கிப் படுத்ததில்லை.
இருந்தும் என் நெஞ்சம்
உன்னை மறக்கவில்லை.

தினமும் நாலு வார்த்தை உரைத்ததில்லை.
நானோ நாணத்தோடு உணவு அளித்ததில்லை.
இருந்தும் என் உள்ளம் உன்னை
நினைக்க மறந்ததில்லை.

உன் பக்கம் நான் வந்ததில்லை
என் வெட்கம் நீ கண்டதில்லை.
இருந்தும் உன் மார்புசொர்க்கம்
என்று நான் எண்ணாத நாள் இல்லை.

வாக்கு விவாதம் வந்ததில்லை.
தக்கம் புரிந்ததில்லை
வார்த்தைகள் அதிகம் பரிமாறியதில்லை.
இருந்தும் உன் குரல் ஓசை கேட்க
நான் துடிக்காத நாள் இல்லை.

புரியாத பிரியம் பெரும் தொல்லை.
புரியவைக்கவும் முடியவில்லை.
இறுதி வரை உன் உறவு நிலை
என்பது உறுதியில்லை.
இருந்தும் என்னால் என் இதயத்தை
விட்டு உன்னை அகற்ற இயலவில்லை  .

நானோ இன்று  இயலாமையின் எல்லை
ஆனால் ஒன்று மட்டும் உண்மை 
கனவில் வந்து நீ கட்டிப் பிடித்து  காயங்கள்
ஆற்றுகிறாய்  ......!

           

விழி நீரில் ஓர் வாழ்த்து

அரிதாரம்  பூசாத வேசம்/
ஆனாலும் நன்றாகவே
நடிக்கின்றேன் ../
என் உள்ளே ஆயிரம்
கவலைகளைச்  சுமக்கின்றேன்  /
உலக வாழ்க்கையிலே நானும்
மனிதனாக நடை போடுகின்றேன் ./

தடைகளை தாண்டத் துடிக்கின்றேன் /
இருந்தும் பல. இடையூறுகளை
சந்திக்கின்றேன்  /
அனை உடைத்தே பெருக்கெடுக்கும் /
விழி நீரைத் துடைத்து விட்டு நடைபோடுகின்றேன் /

உண்மை அன்பைத் தேடி ஓடுகின்றேன்  /
ஏமாற்றத்தைப்  பரிசாக. அள்ளி விடுகின்றேன் /
வலிகள் தாங்கித் தாங்கி  /
இதயம்   வலிமை பெற்று  விட்டதாக
உணர்கின்றேன் /
உள்ளம் வலு இழந்து  வருவதையும் /
புரிந்து  கொள்கின்றேன்/

இறைவனுக்கு என்ன. கோபமோ  ?
வகுத்து  விடுகின்றான் /
ஒரு தண்டனையை  பிறக்கும் போதே /
இந்த பொல்லாத உலகில் /
தினம்  தினம்  தண்டனையை
அனுபவித்த. படியே  வாழ வேண்டும் /
என்பதற்காகவே வாழ்கின்றேன் ./

உயிர் துறக்கவும் துணிவு வேண்டும்/ துணிவோ கரம் கொடுக்கவில்லை /
அதனாலே  உயிரைச் சுமந்து வாழ்கின்றேன்/
துணை இன்றி  நான் இல்லை /
எப்போதும் துணையாக. கை
கொடுக்கின்றது துயரம் /

இன்பம் எள் அளவு / துன்பம் கடலை அளவு  /
விதையிட்டுப் பார்த்தால் /
மனதிலே நிறைந்து விட்டது  துன்பம் /
இடம் இல்லை இன்பத்துக்கு ./
இருந்தும் இன்பத்தையும்
பயிர் இட்டதாக எண்ணிச்  சிரிக்கின்றேன் /

போலி நடை முறைக்கும் /
படிப்புக்கும் பணத்துக்கும் முன்னே /அன்புக்கு  வேலையில்லை ./
அன்பைத் தவிர எண்ணிடம்  வேறு இல்லை  /
போலியான குணம் என்னில் அமரவில்லை./

தலை  முடியின்  கீழே இறைவன்
போட்டான் ஒரு கோலம்  /
அதை அவனே அழித்தால் உண்டு /
அழிக்கும் வழி என்னிடம்  இல்லை /
அதற்காகவே நான்  கொடுக்கின்றேன் /
கண்ணீர்த் துளிகளை பரிசாக. தினம் தோறும் /

காரணம் இல்லாமல்  வெறுக்கப்பட்டேன் /
ஆசை வார்த்தை இன்றி  ஒதுக்கப் பட்டேன் /
அவன் வாங்க மறுத்தாலும் /
நான் கொடுத்துக் கொண்டே தான் /
இருக்கின்றேன் நிறுத்தாமலே./
வாழ்த்துக்களை மனதினிலே /
பூக்களாய் தூவியபடி ஓசை இல்லாமலே /