மறக்க முடியவில்லை 
மறக்க முடியவில்லை 
மண்ணை விட்டு பிரிந்த 
நாட்கள் மறக்க முடியவில்லை.,,..../
மண்ணுக்காக இழந்த
உயிர்களை மறக்க 
முடியவில்லை ...../
இளந் தளிர்கள் கருகிய 
நாட்கள்  மறக்க முடியவில்லை ..../
தெருவோரம் தெரு நாய்கள் 
ஓயாமல் குரைத்த நாட்கள் 
மறக்கமுடியவில்லை ..../
வீட்டுக்குள்ளே தூக்கம்
இழந்து தவித்த நாட்கள்
மறக்கமுடியவில்லை .../
தூசி படிந்த குழியில் நீர்
அருந்திய நாட்கள் 
மறக்கமுடியவில்லை .../
துக்கம் தொண்டையை 
அடைக்கும் போதும் 
பயத்தினாலே அடக்கிக் 
கொண்டு மறைந்திருந்த 
நாட்கள் மறக்கமுடியவில்லை .../
துள்ளிக் குதிக்கும் 
இளைஞர்களின் 
இறக்கை உடைந்து 
ஒடுங்கிப்போன நாட்கள்
மறக்கமுடியவில்லை ..../
சொந்த நாட்டிலே அகதியாக 
அழைந்த நாட்கள் 
மறக்கமுடியவில்லை ..../
சொகுசான வீடு இழந்து 
வவ்வால்  போல்முட்டி
 மோதி காட்டுப்பாதை 
தேடிய நாட்கள் 
மறக்கமுடியவில்லை.../
கஞ்சிக்கும் வழி இல்லையே  
என்று பசியில் அழுத 
பிள்ளையைக் கண்டு 
அன்னை கலங்கிய நாட்கள் 
மறக்க முடியவில்லை ..../
பாசமாக வளர்த்த பிராணிகளை 
பாவிங்க பிடித்து உண்ட 
நாட்கள் மறக்கமுடியவில்லை ..../
குட்டை பாவாடையையும் 
பாடசாலை  உடையையும் 
மறைத்து விட்டு சேலை 
கட்டி குடும்ப பெண்ணாக
 நடித்த நாட்கள் மறக்க 
முடியவில்லை ..../
அன்போடும் ஆசையோடும்
உறவினருடனும் நண்பனுடனும்
 எடுத்த புகைப்படங்களை 
எரித்த நாட்கள்  மறக்கமுடியவில்லை .../
 விளையாடும் வயதில் 
இல்லறத்தில் கட்டாயத்தின் படி
 இணைந்த நாட்கள் 
மறக்கமுடியவில்லை ..../
 இன்ப துன்பம்  அறியும் 
முன்பே விதவை கோலம் 
புகுண்டு உலாவுகின்ற அந்த 
அவலப்பெண்களின் கண்ணீர் 
கதை மறக்கமுடியவில்லை ..../
கை கொடுக்க வருகை 
தந்த அரசியல் வாதிகளின் 
கபட நாடகத்தை மறக்க
 முடியவில்லை ..../
கண்டும் காணாததுபோல் 
இருந்த இந்திய அரசை 
மறக்கமுடியவில்லை .../
 மறந்தும் மறக்க முடியாது 
 மாண்ட பின்னும் அழிக்க
 முடியாத வலி அது ...../
 
  
No comments:
Post a Comment