Tuesday 25 December 2018

சுனாமியின் சுவடுகள்

புரண்ட அலை உருண்டு வந்தது /
ஓசை கொடுத்த அலை ஓங்கி அடித்தது  /
நடுக்கடல் நீரும் நகர்ந்து வந்தது /
நகரத்திலும் புகுந்து சென்றது /

கரையோர மக்கள் வாழ்வைப் புரட்டிப் போட்டது /
கடந்து வந்த கடல் யுத்தம் ஒன்று நடத்தி வென்றது /
நட்ட செடியையும் வேரோடு எடுத்தெறிந்தது /
ஆடு மாடு போட்ட குட்டியையும் தன்னோடு இழுத்தது /

மாடி வீட்டையும் முட்டி உடைத்தது /
குடிசைகளையும் தூக்கி வீசியது /
இனம் மதம் மொழியெல்லாம் ஒதுக்கி வச்சது /
இழுத்து விடும் மூச்சை நிறுத்தச் செய்தது  /

சொகுசான வாழ்வுக்கும் கொள்ளி வச்சது /
தெருவோர வாசிகளையும் அள்ளிச் சென்றது /
காடு மேடு எல்லாம் ஏறிச் சென்றது /
கணக்கு இல்லாத உயிர் இனத்தை
தனக்காக்கிக் கொண்டது /

மொட்டோடு முல்லைக் கொடியையும் அழித்தது /
வயிற்றுப் பிள்ளையோடு அன்னையவளையும் அழித்தது  /
ஓடி வந்த ஆழிப் பேரலை மரண ஓலத்தைக்  கொடுத்தது /

மண்ணுக்கு பல இரைகள் கொடுத்தது /
மணமகளின் மங்கள வாழ்க்கையை மங்க வைத்தது /
நாட்டுக்கு நாடு புணக் குபியல் காட்சி கொடுத்தது /
வீட்டுக்கு வீடு இழப்பால் துடிக்கும் விதியைக் கொடுத்தது /

வலிகள் நிறைந்த நினைவைக் கொடுத்தது /
வலிமை இழந்த மனங்கள் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலமையைக் கொடுத்தது /
மாறாத ஆறாத் துயரம் பல உண்டு/
சுனாமியால் வந்த சுவடுகளும்அவையில் ஒன்று /

#சுனாமியில்  #இழந்த #உயிர்களின்
#ஆத்மாவுக்காக. #பிராத்திப்போம் 😢😢

   

No comments:

Post a Comment