Thursday 6 December 2018

ஆதங்கம்

வறண்ட மண்ணிலும்,/
விதையாய்  முளையிட
துடிக்கின்றேன்/
பட்ட மரத்திலும்/
பூவாக மலர நினைக்கின்றேன் ./

கும்மிருட்டிலும் வெளிச்சம்,/
தேடி அலைகின்றேன் /
புயல் காற்றிலும் /
பூங்  காற்றை தழுவ 
ஆசை வைக்கின்றேன் ./

தீயினுள் பனிக்கட்டிதனை,/
பிடுங்க  ஆவல்  படுகின்றேன்/
மழைக்குப்  பின், வரும் /
வான வில்லை வளைத்துப்,
போட துடிக்கின்றேன்  /

சுனாமிப் பேரலைக்கே /
கடி 'வாளமிட்டு அடக்கிவைக்க
துள்ளுகின்றேன்  /
பெற்றோரின் நல்லுரைகள்,/
ஆயிரம் கேட்டும் நகராத, /
எனக்குள் எத்தனை  எத்தனையோ/
ஆமை போல் நகரும்  கற்பனைகள்  ./

        

No comments:

Post a Comment