Friday 14 December 2018

பச்சோந்தி இல்லை

தினமும்  தட்டிய
கரங்கள் தான். /
அழைத்த
இதழ்கள் தான். /
உனை ரசித்த
விழிகள் தான் /
நினைக்க
மறவாத மனம் தான்/
இன்று ஏன் இந்த
மாற்றம். கொண்டது /

வெறுத்து விட்டதா. ?
மறந்து விட்டதா. ?
மரத்து விட்டதா.?
அழுத்து விட்டதா.?
சளித்து விட்டதா. ?
உன் மறு மொழி
காணாமையால்
நிறுத்தி விட்டதா .?

அளந்து மொழி
பேச வில்லை /
எடை போட்டு பாசம்
காட்ட வில்லை. /
நகர்ந்து செல்லும் ;
ஒவ்வொரு நாள்
பொழுதையும் /
உன்னை நினைக்காமல் /
கழித்ததில்லை /

ஏன் இவை உமக்கு
புரியவில்லை/
நெடு நாளாக நான்
உனக்கு ஒரு தொல்லை /
விடுதலை விடும் நாள்
மிகத் தொலைவில் இல்லை/
வாசம் இல்லா முல்லை  /
வேசம் போடத் தெரியாப்பிள்ளை/
நான் பச்சோந்தியில்லை./

      

No comments:

Post a Comment