Friday, 14 December 2018

மாலை வேளையிலே

சுழண்டு வரும் காற்று
என்னை கிள்ளி விட்டுப்
போகிறது  .
கிள்ளிய காற்று வேகமாய்
நாற்றைக் கடக்கிறது....!

காற்றின் பிடியில் சிக்கிய
நாற்று நில்லாமல் நடனம்
புரிகிறது.
அதன் அருகே  மெல்லிய
மனம் பரப்பும் மல்லிகையும்
மலந்து சிரிக்கின்றது ...!

இரவு வேளையில் கொட்டும்
பனியில் குளித்து விட வளர்ந்த
மொட்டும் தயாராக எழுந்து
நிறைமதியாகவே இருக்கின்றது ...!!

கரு மேகமும் வட்டமிடுகிறது
நெடும் தூரம் பயணம்  செய்து
நீர் கொண்டு வருகிறது.
காலைக் கதிரவன்  உறங்கவே
நகர்கின்றான் ......!!

மாலைக் கருக்கல் நெருங்குகிறது.
சோலைக் கருங் குயிலும் கூவுகிறது.
கூண்டுக் கிளியும் பேசுகிறது.
மாலை வேளையிலே  நான்
கண்ட கோலம்  ஆனந்தயாலம்
என் கண்ணில்  அமர்ந்த வண்ணக் கோலம்..!

   

No comments:

Post a Comment