Thursday 6 December 2018

என் அழகியே


உற்று நோக்காதடி மயிலே
என் உள்ளம் காணாப் பாடல்
பாடுதடி  தனியே....\
திறக்காதடி உன் விழியை மயிலே
என் மொழி பறந்து போகுதடி
வெளியே.......\

இதழ் விரிக்காதடி மயிலே
இதயம் ஓசை எழுப்புதடி
உள்ளே.......\
உன் சங்குப் பல்லின்
ஒளியின் மேல் மயிலே
என் சிந்தனை வந்து ஒட்டியதடி
பசை போலே........\

உன் மூச்சுக் காற்று வரும்
வேளையடி மயிலே
இசை போல் விழுகின்றதடி
என் காதினிலே........\
நண்டுக் கால் போல் உன்
இடுக்கன் கால்கள் இரண்டும்
நடக்கையிலே மயிலே.....\

எட்டிப்பிடிக்க முடியலயே என்று
என் கரம் துடிக்குதடி கவலையிலே......\
கட்டுடம்புக்காரி கம்பங்கூழுக்கு
சொந்தக்காரி காட்டுப்பாதை
வழி நீ போகையிலே தனியே
அடி மயிலே.......\

விடளைப் பையன் வெட்டு
மரத்துக்கு சொந்தக்காரன்
வேட்டையபுரத்து ராஜா போல்
வாட்ட சாட்டக்காரன்
வழித்துணையாக வருவேனடி
பின்னாலே.......\

உன் பட்டு விரல் கொண்டு என்
முரட்டுக்கண்ணம் மேல்
அசட்டுச் சிரிப்போடு பட்டாம்
பூச்சி அமர்ந்தது போல்
தட்டுவாயோ மயிலே.......\

புளியந் தோப்புக்குள்ளே புளியம்
மரத்தின் மேலே தலை கீழாகத்
தொங்கும்  தூக்கணாங் கூடு போலே
உன் பின்னாலும் முன்னாலும்
தன்னாலே தொங்குதடி ஆசை
நிழலாக உன்னாலே உன்னாலே
எல்லாம் உன் அழகினாலேயேடி
மயிலே..........\

No comments:

Post a Comment