Saturday 30 May 2020

ஓவியக் கவிதை


கரும்பாக இனித்திடாத வாழ்வு /
காரணம் தான் என்ன?
இது வேம்பில் பூத்த பூவு/

கானல் நீரில் பயணம் /
காரணம் தான் என்ன?
இது கவலைக்குள் 
விதையிட்ட மரத் தோணி/

இன்பக் கனவு பொங்காத உறக்கம்/
காரணம் தான் என்ன /
பாழடைந்த மாளிகையிலே 
நித்தமும் தூக்கம்/

சந்தோசம் இவளுக்குத் தோசம்/
காரணம் தான் என்ன?
தன் விதி அறியாத பிள்ள/

ஆதரிப்போம் என்போர் எல்லாம் /
அடுத்த நாட்களோ எட்டத்திலே/
பாசம் பகிர்வோம் என்போர் எல்லாம்/
பகல் கனவின் வட்டத்திலே/

காரணம் தான் என்ன?
சொல்லி விட்டால் தொட்டு 
விடும் கவலை உன்ன/


இயற்கையின் சீற்றம்

இயற்கையின் சீற்றம்
இறைவனின் அகோரம்.
இயற்கையின் அழிவு
கண்டு வருந்துகிறது மனிதம்.

தலை விரித்து ஆடிய கூட்டத்துக்கு இயற்கையே வேட்டு வைத்ததோ  ? 
என்று எண்ணி  வணங்குவதா ?
மொட்டோடு மலரையும் 
பூவோடு பிஞ்சையும் 
காயோடு மரத்தையும் 
ஒன்றும் அறியாத பாலகனையும் 
பூமிக்கு வரமலே கருவிலே 
வைத்து அன்னையோடு  
சேர்த்து பலி வாங்கி விட்டாயே 
என்று வருந்துவதா ?

தமிழனின் இரத்தாறு ஓடிய 
நிலத்தை சுத்தம்  செய்ய வந்தாயோ?
இல்லை இரத்தக்கறை பட்ட 
கரங்களை அழிக்க வந்தாயோ ?

புல் அறுக்கும் வேளையில் 
சில நெல் அறுபடுவதும் உண்டு தான். தீயவரை நீ அழிக்கையிலே 
நல்லோரையும் அணைத்துக் 
கொண்டாய் என்பதும் உண்மை தான்.  

அன்று அரசன்  கொன்றான்   
இன்று  நின்று கொல்ல வந்த இறைவா மீண்டும்  கொடுக்காதே இது போல் 
ஒரு கொடுமையை தலைவா?

        

விரல் கொஞ்சும் யாழ்


யாழ் மீட்ட நான் அறியேன்
யாழ் என்று ஒன்றை நான்
அறியேன்....

நான் விரல் கொண்டு
அவள் மீது யாழ் மீட்ட....

மலரோடு வண்டு
யாழ் மீட்ட....

காற்றோடு தென்னங்
கீற்றும் யாழ் மீட்ட....

உரசிக் கொள்ளும்
மேகமும் நிலவோடு
யாழ் மீட்ட.....

மின்னும் நட்சத்திரங்கள்
இரவோடு யாழ் மீட்ட.....

 மோகங்கள் நெஞ்யோடு
 யாழ் மீட்ட.....

உணர்வுகள் தாகத்தோடு
யாழ் மீட்ட.....

உரிமைகள் எல்லை
மீறி யாழ் மீட்ட.....

உணர்ச்சிகள் அளவு
இன்றி யாழ் மீட்ட.....

விடியும் இரவை விழி
வெறுப்போடு யாழ்
மீட்ட.....

விடிந்த பின் அவள்
வெட்கத்தோடு யாழ்
மீட்ட.....

நான் கேலியும்
கிண்டலுமாக
நாவால் யாழ்
மீட்ட.....

உறவுகள் குதுகலமாக
யாழ் மீட்ட....

வீடே இன்பத்தில்
யாழ் மீட்ட......

ஆண்டு ஒன்று
உருண்டோடி
குடும்பம் என்னும்
யாழ் மீட்ட.....

கன்னி அவள்
அன்னையாக
தாலாட்டில்
யாழ் மீட்ட.....

தந்தை நான் கடமை
பொறுப்பில் யாழ் 
மீட்ட,....

சிறு சிறு  சண்டை
குடும்பத்தில்
யாழ் மீட்ட.....

துன்பங்களில் 
துவன்டு நான்
அம்மா மடியில்
யாழ் மீட்ட......

அன்பான வார்த்தை
கூறி அம்மாவின்
 கைகள் என் முடி
மேல் யாழ் மீட்ட.....

துன்பத்திலும்
இன்பமாக என்
பிள்ளையின்
செல்ல மொழியில்
யாழ் மீடட.....

தந்தை என்
மனம் தானாக
யாழ் மீட்ட,....

வாரி அணைத்து
முத்தங்களால்
நான் யாழ் மீட்ட.....♥


Friday 29 May 2020

கண்ணீரிலே மச்சான்


குளத்தில் போட்ட கூழாங்கல்லாட்டம் /
கிணற்றில் விழுந்த கிணற்று வாளியாட்டம்/
கடலில் நிறுத்தி வைத்த நங்கூரமாட்டம்/
அசையாமலே அமர்ந்து விட்டாய் நீ /
எனது நெஞ்சுக்குழியில் என் சின்ன மச்சான் /

குழம்பில் கலந்திட்ட உப்புப் போல் /
கிளறிய சாதத்தில் ஊற்றிய நெய் போல் /
கசப்போடு கலந்திட்ட புளி போல்/
நீ பிரித்தெடுக்க முடியாத வாறு/
கலந்து உலாவுகிறாய் எனது குருதியிலே மச்சான் /

வேர் ஓடி நீர் தேடிடும் மரம் போல் /
ஊர் ஓடி திரவியம் தேடிடும் உயிர் போல்/
மார்வேறி மிதித்து விளையாடும் மழலை போல் /
என் உணர்வேறி உள்ளம் ஓடி பிள்ளை போல் /
குதித்து விளையாடுகின்றாய் மச்சான்/

கிறுக்கல்கள் எல்லாம் சறுக்களாய்ப் போகிறது/
உன் முறுக்கு மீசையின் அழகை வரையும் வேளையிலே /
துருப்பு ஒன்று தேடுகின்றேன் எழுந்திடும் விருப்பை எல்லாம் சிறப்பாய் எழுதி தூது ஒன்று விட்டிடவே/

குறுக்குப் பாதைக்கும் மறைப்பாச்சு /
பறக்கும்  பறவைக்கும்  சிறையாச்சு/
எனக்கும் வாழ்க்கையில் வெறுப்பாச்சு/
கொரோனா என்று ஒன்று  நம்மைப் பிரிச்சாச்சு/
கருணை உள்ளமோ கண்ணீரிலே மச்சான் /


நினைவெல்லாம் நீதானே



ஓடும் குருதியிலே குளிப்பதும் 
நீதானே/
உள்ளக் குழியில் இருப்பதும் 
நீதானே/

மூச்சோடு சேர்ந்து சுழல்வதும்
நீதானே /
பேச்சோடு இணைந்து இனிப்பதும் நீதானே/

துள்ளும் எண்ணத்தின் வெள்ளமும் நீதானே/
துடிக்கும் இதயத்தின் ஓசையும்
நீதானே/

வளர்ந்திடும் கற்பனையை வளமாக்குவதும் நீதானே/
வாழ்க்கை கொடுத்திடும் தெய்வமும் நீதானே/

உறக்கத்தில் உளறச் செய்வதும் 
நீதானே/
உணர்ச்சியைத் தூண்டிச் செல்வதும் 
நீதானே/

காதல் காமம் இரண்டிலும் 
நீதானே/
உயிரிலே கலந்திட்ட நினைவெல்லாம்
நீதானே/

Wednesday 27 May 2020

நரித் தோல் போட்ட புலி

நடமாட்டம் கூடிப் போச்சு 
முகநூலிலே புலிகள்  
புகைப் படத்தோடு  பல நரிகளும் 
சில எலிகளும்  இவை தான் 
இன்றைய புதுக்கதை../

புலித்தோல் போர்த்தினாலும் 
மாற்ற முடியுமோ நரிக்குணத்தை  
மாற்றம் காணத குணம் காட்டிக் கொடுக்கிறது மறு கனம் அவன் 
போலி முகத்தை.../

ஓடி ஒழிஞ்ச எலி எல்லாம் 
புலி படத்தோடு வீரவசனம்  
உரைக்கின்றதே 
வேடிக்கையான கதை../

 நாடித்துடிப்போடு ஈழத்தில் 
போரிட்டவர்களைப்  பார்த்து 
சித்தரிக்கின்றனர் சிங்களவர் என்று 
இது தான் நிஜத்திலே சிரிப்பை 
இழுத்து விடும் கதை..../

ஆமை தண்ணீரில் போகுதே 
என்று ஓநாய்  அழுதுச்சாம் 
ஓரமாய் போய் நின்று இது 
சிறுவயதில் நான் படித்த கதை 
இப்போது நடக்கும் ஆடு புலி 
ஆட்டத்துக்கு பொருத்தமான கதை..../

           

பெண்ணொருத்தி


என்னை மனதில் நிறுத்திய 
பெண்ணொருத்தி/
கண்ணை உறுத்தும் தூக்கம்
துரத்தி/
காதலை தனக்குள்ளே தொலையாது
பத்திரப்படுத்தி/
உண்ணாமல் தன்னை தினமும் 
வருத்தி/
உள்ளம் பின்னிடும் ஆசைகளோடு 
காத்திருக்காள்/

வளைந்தோடும் நதிக்கரையிலும் 
வளையாத மலையுச்சியிலும்/
பூவரசம் மரநிழலிலும் பாதரசப்
பாட்டிலும்/
துள்ளும் அருவியிலும் துவட்டும் மழையிலும்/
வாட்டும் வெயிலிலும் வதைக்கும் பனியிலும்/
தன்னோடு கற்பனையில் என்னையும் சேர்த்திழுக்காள் /

காற்றில் சிக்கிய வாழையிலையின் கதையாக/
காதல் கொண்ட குமரியின் 
நிலையானது/
இதயச் சிம்மாசனத்தில் காதலனை அமர்த்தி/
தேடி வரும் வரணையெல்லாம் மறுப்போடு துரத்தி/
பெற்றோரின் வெறுப்பில் வேகுகின்றாள் ஒருத்தி/

Monday 25 May 2020

மறக்க முடியல

மறக்கத்தான் நினைக்கிறேன் 
மறந்திட முடில /
சொல்லி முடித்திடத் தான் நினைக்கிறேன்./
சொல்லி முடித்ததிடவும் முடியல /
காரணங்கள் தான் என்னவோ? 
அது கண்ணீரில் விழுந்து வளர்ந்த கதையல்லவோ/


இந்திய இராணுவம் அணிவகுத்த 
கதை மறக்க முடியல /
அவன் நீதி மறந்து அநீதி புரிந்த 
கதை மறக்க முடியல /
விடியும் முன்னே இல்லம் நுழைந்த 
கதை இன்னும் மறக்க முடியல /
கன்னியெரெல்லாம் கை பிடித்து 
இழுத்த கதை மறக்க முடியல/


கண்ட இடமெல்லாம் கொண்டு 
அமர்த்தியதை மறக்க முடியல /
பேரீச்சை முற்களோடு மட்டையைக்
கொண்டு /
தாக்கி இரத்தம் சுவைத்த கதை 
மறக்க முடியல /
அக்கொடுமை எனது  தந்தைக்கும் 
என் கண் எதிரே /
அரங்கேறியது அதை நெஞ்சில் இருந்து 
அழிக்க முடியல /


சுற்றி வளைப்பு என்னும் பெயரில் /
நீர் இன்றி ஆகாரம் இன்றி /
காலை முதல் மாலை வரை /
இருத்திய நாட்கள் மறக்க முடியல /
அன்றாடக் கூலிகளையெல்லாம் /
நின்று போர் புரியும் வீரர்கள் என்று/
கொன்று குவித்த அந்த நாட்கள் மறக்க முடியல /


வல்லரசு நாடு வந்திறங்கிய பிற்பாடு /
கிழக்கு வெளிக்கும் நமக்கும் என்ற ஆவா /
அறுக்கப் பட்டு நம்மை அவர்களும் ஒடுங்கி நடுங்க விட்ட /
காட்சி கண்ணை விட்டு மறைக்க முடியல/
அவன்  தமிழனை கசக்கிப் பிழிந்ததை/ இன்று வரை மன்னிக்க முடியல /


ஈவு இரக்கம் அற்றவன் வட இந்திய இராணுவம் /
அவனை  நாம் மறந்தால்  ஈழத் தமிழன் அல்ல /
கொடுரனைக் கொண்டுபோ /
காமா வெறியனை  ஏற்றி விடு/
இந்திய அரசே உந்தன் படையைத் திருப்பியெடு/

நாசக் காரன் அவன் நாடு திரும்பவே /
முதுமை வயதிலும் உண்ணா விரதம்/ இருந்து உயிர்த் தியாகம் செய்த /அன்னை பூவதியின் தியாகத்தை 
மறக்க முடியல/

மறக்க முடியாத கதை நெஞ்சுக்குள் 
தேங்கிய நிலையில / 
நாளும் பொழுதும் எழுகிறது நெஞ்சுக் குழியில் நினைவலையில/

ஆயுள் கைதி


திருட்டுத் தனமாய் 
இருட்டு இதயறையில்/
எலும்பிலும் முட்டாமல் 
குருதியிலும் தட்டாமல்/
நுழைந்து விட்டாய் /

நுழைந்த நீ நெஞ்சணையில் /
உறங்கிட வேண்டியவை தானே /
இல்லையெனில் ஒரு ஓரமாய்/
கம்முனு இருந்து தொலைந்திடலாமே/

உறக்கத்தைக் களைக்கிறாய் /
உணர்ச்சியைக் கிள்ளுறாய் /
உணர்வைக் கொல்லுகிறாய்/
உடலுக்குச் சூடு ஏற்றுகிறாய் /
ஆசைகளைக் கொடுக்கிறாய் /

பாசத்தைக் கேட்கிறாய்/
மோகத்தை உசுப்புறாய்/
உள்ளத்திலே துள்ளுகிறாய்/
உதட்டைக் கனவில் மெல்லுகிறாய் /
உள்ளுணர்ச்சியில் 
என்னன்னமோ செய்கிறாய் /

உடையைக் கலைகிறாய் /
இடையைத் தேடுகிறாய்/
மச்சம் எண்ணிப் புன்னகை புரிகிறாய் /
இச்சுக் கொடுத்து முத்த யுத்தம் செய்கின்றாய்/
சேலையைக் கசக்குகிறாய் /
கூந்தலைக் கலைக்கிறாய் /

வேர்வைத் துளிகளை அழைக்கிறாய்/
மூச்சின் வேகம் பெருக்கிறாய் /
 உத்தரவு இன்றி உள்ளே 
நுழைந்தது  முதல் குற்றம் /
இத்தனை மாற்றம் என்னில் 
விதைத்தது இரண்டாம் குற்றம்/

ஒன்றும் அறியாதவர் போல் 
காதல் தோட்டம் நட்டு காமப் 
பூ பறிப்பது மூன்றாம் குற்றம் /
குற்றத்துக்கு மேல் குற்றம் 
புரிந்த உன்னைக் ஓமகுண்டம்
அருகே அமர்த்துவேன் வாதாடி
போராடி ஆயுள் கைதியாக்குவேன்/

  

Sunday 24 May 2020

விரைந்து வா மாமா


கொத்தோடு முல்லை 
பூத்திருக்கு மாமா./
தொட்டுப் பறித்திட வா மாமா./
குலையோடு மாங்காய் 
காத்திருக்கு மாமா./
கிளைக்கு வலிக்காமல் 
பறித்திட வா மாமா./

கலையோடு கன்னி 
காத்திருக்காள் மாமா./
கட்டுடல்லைக் 
கொண்டு வா மாமா./
கரும்பாக இனித்திடும் 
இதழ் இருக்கு மாமா./
எறும்பாக 
சுவைத்திடவே நீ வா மாமா./

அங்கெமெல்லாம் தங்கமாய் 
மின்னுது மாமா.;
ஆங்காங்கே மச்சம் 
எண்ணிட வா மாமா./
பப்பாளிக் கன்னம் போர் 
தொடுக்கிறது மாமா./
முத்தச் சண்டை 
போட்டிட நீ வா மாமா./

கசங்காத பட்டுச்சேலை 
சிணுங்கியபடியே மாமா./
கசக்கிப் போட்டிடவே நீ வா மாமா./
இளமைக் காதல் 
பதவி கேட்கிறது மாமா./
தாலிப் பந்தம் 
ஒன்று கொடுத்திடு மாமா./

புரியாத பாடம் 
அறிந்திட ஏக்கம் மாமா./
புரிந்திடும் படி 
சொல்லிட வா மாமா./
முடியாத இரவும் 
அணையாத விளக்கும் மாமா./
பிடிவாதம் பிடிக்கிறது 
படியேறி விரைந்திடு மாமா./


ஓவியக் கவிதை


சாதி என்ன சாதியெட மனிதா /
சாதியை தூக்கிக் கொள்வோர் 
மடையர்களடா மனிதா/
சாதியால் நீ சாதித்தவை 
எவையெடா மனிதா/
சாவின் விளிம்பிலும் நீ சாதி பார்த்திடலாமோ மனிதா/
உன் மனசாட்சியைக் கேட்டுச்
சொல்லடா/
சாதிக்குள்ளே பூத்திருக்கும்  
ஆறறிவு  மனிதா/


Saturday 23 May 2020

விடிவு தோன்றிடுமா


இருண்ட பாதையில் உருண்டு ஓடும் 
நம் காதலுக்கு விடிவு தோன்றிடுமா ?
இதயறையில் விழித்திருந்து ஏங்கும் நம் 
ஆசைக்கு ஓர் விடிவு தோன்றிடுமா ...?

தவிப்போடும் துடிப்போடும் 
எதிர் காலக் கனவுகளோடும் 
கலங்கும் விழிக்கு விரைந்து 
முடிவோடு விடிவொன்று தோன்றிடுமா ?

இரு கரம் சேர்த்து இருவரும் 
ஒன்றாக வலம் வர காத்திருக்கும் 
மனசுக்கு அழகிய விடிவு தோன்றிடுமா .?


நேர் கொண்ட பார்வை


நோக்கிடும் பார்வையோ
நோக்கமாகிட வேண்டும்/

அவை நேர்வழியே 
செயலாகிட வேண்டும்/

ஆயிரம் அர்த்தங்களைக்
கூறிட வேண்டும்/

அடுத்தவனைத் தாக்காமல்
நகர்ந்திடல் வேண்டும்/

நம்மை சிகரத்தில் கொண்டு
ஏற்றிட. வேண்டும்/


உத்தரவின்றி உள்ளே வா

நோக்கும் விழி வழியே 
வந்திடலாம்/
பேசிடும் மொழியோடும் நீ 
கலந்திடலாம்/
அடி நெஞ்சத்திலே தயங்காது  குடியேறிடலாம் /
ஆனந்த ராகம் இன்றே பாடிடலாம் /
உல்லாச வாழ்வை எந்நாளும்
கண்டிடலாம்/

அன்பே என்னில் உன்னை
இணைத்திடுவேன்/
உயிரினில் பெயரை முத்திரை 
குத்திடுவேன்/
பருவ பானமதை பகிர்ந்து 
கொடுத்திடுவேன்/
முதுமையிலும் துணையாய்த் தோள் சாய்த்திடுவேன் /
முள்ளானாலும் உன் பாதையிலே பயணித்திடுவேன்/

வெட்கத்தை வீசி விட்டு 
வா/
காதல் வலையை விரித்து 
வா /
உறவாடிட. நீயும் ஓடி 
வா/
உள்ளமதை திறந்தேன் விரைந்து
வா/
கயவனே உத்தரவின்றி உள்ளே   வா/

Wednesday 20 May 2020

நிழல்களைத் தேடி


ஊர் இழந்து உறவு இழந்து/
உண்ண உணவின்றி 
நான் அலைந்தேன்/
புது வரவு ஒன்று வந்து/
துணையென்று கூறி
தோள் கொடுத்தது/

அன்று முதல் 
இன்பம் கொண்டேன்/
அடுத்தடுத்து வாழ்க்கையில்
துன்பம் கண்டேன்/
கை கொடுத்த 
உயிர் நிலைக்கவில்லை/
கைம்பெண் என்னும்
பெயர் எடுத்தேன் /

இன்று கண்ணீரில் 
மிதந்தவாறு வாழ்கின்றேன்/
பொல்லாத உலகினிலே 
வாழ்வது அக்கினிப்பிரவேசம் /
ஊனக் கண்களோ
ஊர்ந்து கொல்கின்றது/
காத்திடும் நிழல்களைத் தேடி ஏங்குகின்றேன்/


Monday 18 May 2020

முள்ளி வாய்க்கால் நினைவு


முள்ளி வாய்க்கால் நினைவு.
சொல்லி அழுகிறது .
பல கதைகளை.
இலட்சியத்திற்குக் கொள்ளி 
வைத்த கயவர்களை
கிள்ளி எறியச் சொல்லி அழுகிறது.

அதிரக் கொட்டிய வெடியில்.
சிதறிய உடலின் ஆவிகள் எல்லாம்.
விடுதலை கேட்டு அலைகிறது.

வெளியே சென்ற பிள்ளை வரவில்லை.
துவைத்த உடை போட .
பிள்ளை மடிந்த செய்தி அறிந்து.
சரிந்து விழுந்து மாண்ட தாயின் 
ஆத்மா பிள்ளையைத் தேடி அழுகிறது.

போரிலே வென்ற வீரனையும்.
மார்பு உயத்திய மாவீரனையும்.
உப்பு நீருக்குள் குருதி 
சொட்டச் சொட்ட சுட்டு வீழ்த்தியது  
யுத்த விமானம்.

அண்ணா என்று ஓலமிட்ட தங்கை.
மகனே என்று நெஞ்சில் அடித்த அன்னை.
கதறிய உறவு பதறிய மக்கள்.
இவர்களையும் விட்டு வைக்கவில்லை.
கொதறியே விட்டது இனவெறி.

அடி வயிறு தடவிய கர்ப்பனியின் 
கரம் ஏறும் முன்னே.
முப்படையின் தோட்டா சுவைத்தது குறைமாதச் சிசுவை.

எண்ணி எண்ணிப் பார்க்கையிலே.
இதயம் கனக்கிறது/
நொந்து நொந்து நூலாய் போன நெஞ்சம்.
அழுது அழுது கண்ணீர் வற்றிய விழிகள்.
அணையாச் சுடராய் எரியும் கோபம்.
ஆறாத காயம் நோவாகிப் போகிறது.

தீராத தாகம் தீரும் நாளை தேடுகிறது.
இழப்பின் தொகை இன்னும் கணக்கில் இல்லை.
ஆண்டு பல கடந்தும் கண்ணில்.
முள்ளி வாய்க்கால் அவலம் மறையவில்லை.
ஈழத்துக் கிணற்று நீரிலும்
குருதி வாடை எழுகிறது.

Saturday 16 May 2020

தெருவோரப் பூக்கள்


ஓடுபாதையிலே ஓடாய்த் தேய்ந்த
உடலோடு /
வாட்டிடும் வெயிலில் வாட்டமான 
முகத்தோடு/
கொட்டும் மழையிலும் வதைத்திடும் 
பனியிலும்/
புரைந்த உடையோடும் திறந்த 
மேனியோடும்/
எரியும் வயிற்றுடன் எத்தனையோ 
பூக்கள் /

இடப்புறம் வலப்புறம் நடக்கிறது 
மனிதயினம்/
கடக்கின்ற வழியிலே கிடத்தியபடி 
உயிரினம் /
கண்டுக்காமல் பறக்கின்றது பலரது நெஞ்சம் /
கொடுக்கும் கரங்களோ குறைந்து 
விட்டது /
ஏளனமாக நோக்கிடும் கண்களோ
நிறைகின்றது/

உடல் காட்டி காமப் பசி/
தீர்த்தவளின் ஈனச் செயலோ இவை/
படி தாண்டி ஆண் பிடியில் /
சிக்கி சின்னாப்  பின்னமானவளின் கருவோ /
மொட்டிலே குப்பையில் கொட்டியவை கொடுமை/
எத்தனை மூச்சு விடும் பூக்கள் /
மகிழ்ச்சி இழந்து வறுமையோடு  
கண்ணீர்க் /
கடலில் மிதக்கின்றன தெருவோரப்  பூக்களாய்/


நாணம்


கரை தொடும் ஆழியின் 
அலை/
விரைந்து ஓடி மறைவது 
நாணம்/

நேர்வழிப் பாதை 
வளைவதும்/
ஓடும் நதிகள் நெளிவதும் 
நாணம்/

காற்றுக்கு நாற்று தலை 
சாய்ப்பதும்/
புயலுக்கு கீற்று நடிப்பதும் 
நாணம்/

ஓங்கிய வாழை ஈன்ற 
குலை/
பூமி நோக்கியே வளர்வதும் 
நாணம்/

உயர்ந்த மூங்கில் 
வளைவாகின்றதும்/
தொட்டாச்சுருங்கி சுருங்குதலும் 
நாணம்/

குமரிப் பெண் முகம் 
மறைப்பதும்/
கூட்டத்தில் மறைந்து செல்வதும் 
நாணம்/

மாலையிட்டவன் முன் தலை 
குனிவதும்/
வெட்கத்தோடு பிறக்கின்ற
நாணம்/

பெண்ணின் சொத்துக்கள் 
நாணமே/
கண்டேன் அவளின் கண்ணில் 
நானும்/

Thursday 14 May 2020

மாட்டுக் கார சிவனேசன்


பூம் பூம் மாட்டுக்கார 
சிவனேசன் வந்தான்டி /
அவன் கும்பகோண 
வெத்தல போட்ட/
நம்ம நாட்டுக் குறுப்புக் 
காரந்தான்டி/
ஒட்டுடையுடன் வந்திடும் 
ஓட்டான்டி தான்டி/  

கடட மீசையுடன் மிரட்டும் கெட்டிக்காரந்தான்டி/
முட்டும் காளையுடன் 
ஒட்டிக் கிட்டான்டி/
வண்ணப் பட்டுத் 
துணியெடுத்து சூடிக்கிட்டான்டி/
யாரு என்ன சொல்லிக்கிட்டாலும் 
தலையாட்டிக்குவான்டி/

எதைக் கொடுத்தாலும் தட்டை நீட்டிக்குவான்டி/
நாட்டாமையைக் கண்டாக்க நின்று நடுங்கிக்குவான்டி/
வீட்டோரமா வந்து நோட்டம் போட்டுக்குவான்டி/
காட்டோரம் நடக்கையிலே 
எட்டுக்கட்டிப் பாடிக்குவான்டி/

கிடைப்பதை உண்டு 
ஊர் கடந்துக்குவான்டி/
உடல் வருத்தி உழைத்திடாதவன் இவந்தான்டி /
ஊரோடியும் காடோறியும் 
யோம்பேறியும் இவங்கதான்டி/


Wednesday 13 May 2020

சித்திரை நிலவு


சித்திரை நிலவாய்
அவள் முகம் /
நித்தம் பார்த்து மகிழ்ந்திடும்
எந்தன்  மனம்/

ஓவியக் கவிதை


விடும் மூச்சுக்கும் 
ஆயுள் குறைகின்றது/
துடிக்கும் இதயமும் 
மடிந்திடும் நிலையில் /

ஓடும் குருதியும் 
ஓய்வு கேட்கின்றது/
ஆசையெல்லாம் அமைதி 
அடைந்த நிலையில்/

மோகமும் முற்றாகக்
கரைந்து செல்கின்றது/
இங்கு வந்து நீ 
உணர்ச்சியைக் கொட்டினால்/
உமக்கு மகிழ்ச்சி கிடைத்திடுமோ?

நோய் தின்று 
கொண்டு இருக்கும் உடல்/
போகத் தாயாராகி விட்ட உயிர்/
வாடிய வாறே நகரும் வாழ்வு/
இந்நேரத்தில் நீ நுழைந்திட நினைத்தால்/
என் மனம் கதவு திறந்திடுமோ? 

பாய் விரித்தால் உடன் உறக்கம்/
மறு நாள் எழுந்து விட்டேன் என்னும்/ எண்ணத்தை ஏற்றுக்கவே தயக்கம்/

ஒவ்வொரு நொடியும் மரண ஒலியே/ 
எனது காதுகளில் கேட்ட படியே/
இவ்வேளையில் வந்து நீ பக்கம் 
உறங்கிட இடம் கேட்டால் /
உனக்குக் கிடைத்திடுமோ ?பஞ்சணை சொர்க்கம்/ 


 (ஓவியருக்கு வாழ்த்துகள்)

Friday 8 May 2020

#ஓவியக் #கவிதை



குளத்தில் போட்ட கூழாங்கல்லாட்டம் /
கிணற்றில் விழுந்த கிணற்று வாளியாட்டம்/
கடலில் நிறுத்தி வைத்த நங்கூரமாட்டம்/
அசையாமலே அமர்ந்து விட்டாய் நீ /
எனது நெஞ்சுக்குழியில் என் சின்ன மச்சான் /

குழம்பில் கலந்திட்ட உப்புப் போல் /
கிளறிய சாதத்தில் ஊற்றிய நெய் போல் /
கசப்போடு கலந்திட்ட புளி போல்/
நீ பிரித்தெடுக்க முடியாத வாறு/
கலந்து உலாவுகிறாய் எனது குருதியிலே மச்சான் /

வேர் ஓடி நீர் தேடிடும் மரம் போல் /
ஊர் ஓடி திரவியம் தேடிடும் உயிர் போல்/
மார்வேறி மிதித்து விளையாடும் மழலை போல் /
என் உணர்வேறி உள்ளம் ஓடி பிள்ளை போல் /
குதித்து விளையாடுகின்றாய் மச்சான்/

கிறுக்கல்கள் எல்லாம் சறுக்களாய்ப் போகிறது/
உன் முறுக்கு மீசையின் அழகை வரையும் வேளையிலே /
துருப்பு ஒன்று தேடுகின்றேன் எழுந்திடும் விருப்பை எல்லாம் சிறப்பாய் எழுதி தூது ஒன்று விட்டிடவே/

குறுக்குப் பாதைக்கும் மறைப்பாச்சு /
பறக்கும்  பறவைக்கும்  சிறையாச்சு/
எனக்கும் வாழ்க்கையில் வெறுப்பாச்சு/
கொரோனா என்று ஒன்று  நம்மைப் பிரிச்சாச்சு/
கருணை உள்ளமோ கண்ணீரிலே மச்சான் /

Wednesday 6 May 2020

திறவாயோ என்னிதம்


உள்ளத்து ஆசையை அள்ளி 
வந்தேன்./
உணர்வின் ஓசையைச் சொல்லிட 
வந்தேன்./
ஊற்றாகும்  மோகத்தைத் திரட்டி 
வந்தேன்./
ஊசிமலைக் காடு கடந்து
வந்தேன்./

விதையிட்ட காதலோடு வேகமாய்
விரைந்தேன்./
விரிந்த மலராக பறந்தே
விரைந்தேன்./
விருட்சமாகிடும் பாசத்தைப் பகிர்ந்திட
விரைந்தேன்./
விளையும் கனவையும் சுமந்து
விரைந்தேன்./

ஓடை நீராக ஓடியே  நாடினேன்/
கார்கால மேகமாய் கலங்கியே
வாடினேன்/
இரவு  பகல் மறந்து தேடினேன்/
மௌனப் பூட்டை திறவாயோ
என்னிதயமே/