Monday 25 May 2020

ஆயுள் கைதி


திருட்டுத் தனமாய் 
இருட்டு இதயறையில்/
எலும்பிலும் முட்டாமல் 
குருதியிலும் தட்டாமல்/
நுழைந்து விட்டாய் /

நுழைந்த நீ நெஞ்சணையில் /
உறங்கிட வேண்டியவை தானே /
இல்லையெனில் ஒரு ஓரமாய்/
கம்முனு இருந்து தொலைந்திடலாமே/

உறக்கத்தைக் களைக்கிறாய் /
உணர்ச்சியைக் கிள்ளுறாய் /
உணர்வைக் கொல்லுகிறாய்/
உடலுக்குச் சூடு ஏற்றுகிறாய் /
ஆசைகளைக் கொடுக்கிறாய் /

பாசத்தைக் கேட்கிறாய்/
மோகத்தை உசுப்புறாய்/
உள்ளத்திலே துள்ளுகிறாய்/
உதட்டைக் கனவில் மெல்லுகிறாய் /
உள்ளுணர்ச்சியில் 
என்னன்னமோ செய்கிறாய் /

உடையைக் கலைகிறாய் /
இடையைத் தேடுகிறாய்/
மச்சம் எண்ணிப் புன்னகை புரிகிறாய் /
இச்சுக் கொடுத்து முத்த யுத்தம் செய்கின்றாய்/
சேலையைக் கசக்குகிறாய் /
கூந்தலைக் கலைக்கிறாய் /

வேர்வைத் துளிகளை அழைக்கிறாய்/
மூச்சின் வேகம் பெருக்கிறாய் /
 உத்தரவு இன்றி உள்ளே 
நுழைந்தது  முதல் குற்றம் /
இத்தனை மாற்றம் என்னில் 
விதைத்தது இரண்டாம் குற்றம்/

ஒன்றும் அறியாதவர் போல் 
காதல் தோட்டம் நட்டு காமப் 
பூ பறிப்பது மூன்றாம் குற்றம் /
குற்றத்துக்கு மேல் குற்றம் 
புரிந்த உன்னைக் ஓமகுண்டம்
அருகே அமர்த்துவேன் வாதாடி
போராடி ஆயுள் கைதியாக்குவேன்/

  

No comments:

Post a Comment