Saturday, 30 May 2020

இயற்கையின் சீற்றம்

இயற்கையின் சீற்றம்
இறைவனின் அகோரம்.
இயற்கையின் அழிவு
கண்டு வருந்துகிறது மனிதம்.

தலை விரித்து ஆடிய கூட்டத்துக்கு இயற்கையே வேட்டு வைத்ததோ  ? 
என்று எண்ணி  வணங்குவதா ?
மொட்டோடு மலரையும் 
பூவோடு பிஞ்சையும் 
காயோடு மரத்தையும் 
ஒன்றும் அறியாத பாலகனையும் 
பூமிக்கு வரமலே கருவிலே 
வைத்து அன்னையோடு  
சேர்த்து பலி வாங்கி விட்டாயே 
என்று வருந்துவதா ?

தமிழனின் இரத்தாறு ஓடிய 
நிலத்தை சுத்தம்  செய்ய வந்தாயோ?
இல்லை இரத்தக்கறை பட்ட 
கரங்களை அழிக்க வந்தாயோ ?

புல் அறுக்கும் வேளையில் 
சில நெல் அறுபடுவதும் உண்டு தான். தீயவரை நீ அழிக்கையிலே 
நல்லோரையும் அணைத்துக் 
கொண்டாய் என்பதும் உண்மை தான்.  

அன்று அரசன்  கொன்றான்   
இன்று  நின்று கொல்ல வந்த இறைவா மீண்டும்  கொடுக்காதே இது போல் 
ஒரு கொடுமையை தலைவா?

        

No comments:

Post a Comment