Sunday 30 September 2018

மெல்லத் திறந்த விழி

மோகத்துக்கு முக்காடு போட்டு விட்டு./
ஆசைக்கு அணை கட்டி விட்டு/.
காதலுக்கு கதவை சாத்தி விட்டு./
கற்பனைக்கு கட்டிடம்  கட்டி விட்டு ..../

சோடிக் காணத்துக்கு
தடை போட்டு விட்டு,/
துணை நாடும் எண்ணத்துக்கு
குழி போட்டு விட்டு./
சுகம் தேடும் நெஞ்சத்தை
பஞ்சிட்டு எரித்து விட்டு /
இல்லற வாழ்வுக்கு முற்றுப்
புள்ளி வைத்து விட்டு ..../

எதிர் கால இலட்சியத்தை
உரமாகப் போட்டு./
உழைப்பு என்னும் மந்திரத்தை
மனதில் பதியமிட்டு./
பரந்த உலகில் வலம் வந்த பாவை /
சிரித்த உன் அழகிய தோற்றம்  கண்டு ..../

மெல்லத் திரந்த விழி இரண்டும் /
சிறை பிடித்தது உடன் உன்னை /
தடை போட்ட மோகம் விடை
கொடுத்த ஆசை./
உடைத்தெறிந்து வந்து விட்டது
விழியின் இன்றோடு.../

  

(இவ்வாண்டு கம்பன் கவிக்கூடத்து விழா நூலுக்காக கொடுத்த தலைப்பு )😊

மண்ணில் உலாவரும் விண்ணத் தேவதைகள்

-
மண்ணிலே பெண்ணனெ உரு எடுத்து
கன்னியென உலா வரும் தேவதையே
பெண்ணியம் போற்றும் தமிழ் மகளே
தமிழர் உடை காத்து விடு என் மகளே.../

சரிகை தாவணி உடுத்தி உச்சி பொட்டிட்டு நேர் உச்சி எடுத்து சடை போட்டு சரமிட்ட பூ சூடி நாணம் கொண்டு நீ நடக்கையிலே நாணி விடும் காணும் காளை மகன் கண் அல்லவோ.../

விண்ணுலக தேவதைகள் என்னழகடி பெண்ணே.
மண்ணில் உலாவும் உன் அழகு பெருமையடி.
கெண்டைக்கால் மறைய நீ  உடை உடுத்தி கண்ட இடம் காட்டாமல் நடை பயின்றால் இந்திரலோகத்து மந்திரிக்கும் புத்தி மங்கிப் போகுமடி பெண்ணே..../

மஞ்சள்  இட்ட முகத்துடன் நீர் சொட்டும்
கூந்தலுடன் நீ கோலம் போடையிலே
நீர் எடுக்க வரும் மேகமும் மயங்கித்தான் போகுமடி மண் உலக தேவதை உன் போல்
அழகு விண்ணில் உண்டா -?
விண்ணை விட்டு மண் ஆள வந்த
தேவதை நீயடி என் மகளே .../

Friday 28 September 2018

விட்டுப் போகாதே

விழி வழியே என்
இதயம் நுழைந்து /
நிறுத்தாமல் கதை பேசி /
நெருக்கமாய் வந்து /
எனது உள்ளம் தொட்டு /

குருதியோடு கலந்து /
காதல் நரம்பு தொட்டு /
இறுதி வரை நீயேதான்  /
துணை என்று ஆன பின்னே /
காதல் உறுதி மொழி பரிமாறிக் கொண்டோம் /

வாழ்வு என்னும் சொர்க்கத்தை /
வாழ்ந்து பார்த்திடவே /
இல்லறம் என்னும் நல்லுறவை /
அமைத்திட முடிவும் எடுத்து விட்டோம் /

முத்தங்கள் இடம் மாறி இன்புற்றோம் /
மோத்தை முற்றிட விட்டோம் /
காமத்துப் பால் வரிகள் தேடிப் படித்தோம் /
கற்பனைகளை பெருக்கி வந்தோம் /

உணர்வு என்ற தெறி எடுத்து/
உணர்ச்சி வலை முடித்தோம் /
எத்தனையோ  ஆசைகளை முன்
நிறுத்தி வைத்தோம்  /
அத்தனைக்கும் கொள்ளி வச்சு விட்டு /
என்னையும்  நீ தள்ளி வச்சு /
எனை  விட்டுப் போகாதே /

Thursday 27 September 2018

விடியலை நோக்கி

நீ காட்டும் பாசம்
நிறைகுடமாக வேண்டும்/
பாசத்தின் அறையாக
உன் மனம் வேண்டும்/
தேசம் வேறாயினும்
நிஜத்தில் நீ வேண்டும்./

கண் இரண்டும் என்னை
வெறுக்கும்  வரை அழுது விட்டேன்/
இனிமேலும் அது தொடராது /
நிறுத்த நீ வேண்டும்./

இருண்ட காடு போல் /
அடர்ந்த ரோமம் கொண்ட/
உன் மார்பின் மேல்/
வீராப்பு நான் இழந்து /
பிரிவு அற்று சாய்ந்திட வேண்டும்./

பட்டுத்துணிக்கு நான் விலை பேசிட/
மெட்டி ஒலிக்கு நீ வழி பண்ண/
கொலுசு ஓசையும் உன்னை உசுப்பேத்த/
இவைக்கு நாம் இணை சேர வேண்டும்./

உன் முரட்டுக் கைகள் /
வித்தையை ஆரம்பிக்க /
என் வெட்கம் முன் நின்று தடுக்க /
முத்தச் சமையல் நீ கேட்க/
முகம் மூடி நான் சிரிக்க /
இச்சு இச்சு என்று/
உன் இதழ்கள் இசை அமைக்க/
இரவும் நீண்டு நிலவும்
காவல் காக்க வேண்டும்.;

உன் வெப்ப மூச்சியில் /
நான்  வெந்திடவே/
அன்பு வார்தை /
மயக்கத்தை அழைத்திடவே/
உள்ளத்தின்  குளிரில் /
உடலும் மயங்கிடவேண்டும்/

துளிர் விட்ட ஆசைகள்/
நிரந்தரமாக நம் இதயத்தில்/
வளர்ந்திட கரம் கொடுத்து;
நெற்றித் திலகம் நீ  விடவேண்டும்/

நடை தளரும் வயதிலும் /
நானோ  அல்லது நீயோ தடுமாறமால் /
தடி போல் துணையாக வேண்டும்./

இறப்பிலும் நாம் சேர்ந்தே இறந்தால்/
இறப்பும் இனிப்பாய் இருக்கும்/
இல்லயெனில் இறப்புத்தான்
நம்மை பிரிக்கவேண்டும்./

நாளை புலரும்  பொழுது /
நாம் இணையும் பொழுதாகவேண்டும் /
என் காதல்  கற்பனை நகருகின்றது /
இன்றும்   விடியலை நோக்கியே./

கண்ணாலே கண்ணி வச்சுப் போறாளே

கண்ணாலே கண்ணி வச்சுப் போனாளே /
தன்னாலே எனது நெஞ்சம் சிக்கியதே /
அவ பின்னாலே என் மூச்சும் ஓடியதே /
மண் மேலே நடந்த பாதம்  /
விண் மேலே பறப்பதாக தோன்றியதே/

எண்ணத்தில் தூண்டில் இட்டாள் /
உள்ளத்திலே மெல்ல வலை விரித்து /
அதிலே அவள் முகத்தையும் முடிச்சு போட்டு விட்டாள் /
கன்னமது மதுக்கிண்ணமோ  ?
இன்னும் போதை தெளியவில்லை என்னுள்ளே /

சின்ன சிரிப்பால் சிறை பிடித்தாள் /
சிக்குண்டு துடிக்கிறது என் மனசு /
என்ன அதிசயமோ அவள் கஞ்சாத் தோட்டத்து வஞ்சியோ  ?
ஒற்றைப் பார்வையிலே /
கொஞ்சம் கொஞ்சமாய் போதை எற்றி /
தஞ்சம் இனிமேல் அவளது மஞ்சம் /
என்று இன்றே நான் உறுதிமொழி /
எடுக்கவே  வைத்து விட்டாள் /

செங்கறையான்  புகுந்திடாத /
கட்டெறும்பு ஊர்ந்து விடாத/
காட்டு யானை சுவைத்திடாத /
கட்டுக் கலையாத கட்டுடலழகி /
என் முன்னே அன்ன நடை போட்டு /
எனது இதயம் நுழைந்து விட்டாள் /

மின்னல் இடியோடு பிறக்கும் வேளை /
காந்தக் கண்ணால் பார்த்து விட்டாள் /
துருப் பிடித்த என் வேல் விழி
ஒட்டிக் கொண்டது  /
கன்னியின் கண்ணி வச்ச
விழியிலே  தங்கிக் கொண்டது /

    

Wednesday 26 September 2018

தக்காளிகாய் கூட்டு

தக்காளிக்காய்.      5
பயத்தம்பருப்பு.        அரை கப்
வத்தல் மிளகாய்.     3
சீரகம்.                    கால் ஸ்பூன்
மிளகு.                     கால் ஸ்பூன்
கடுகு.                      கால் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு.     அரை ஸ்பூன்
பெருங்காயம்.          சிறிதளவு
எண்ணெய்              1 தேக்கரண்டி
தேங்காய்.               மூன்று ஸ்பூன் (துருவியது)
உப்பு தேவையான அளவு

தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

பயத்தம் பருப்பை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

தேங்காய்,சீரகம்,மிளகு,மிளகாய் வற்றல் 2 சேர்த்து அரைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
கடுகு சேர்த்து வெடித்ததும் சீரகம் மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்ததும்
நறுக்கிய தக்காளிகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் சிறிது உப்பு சேர்க்கவும்.
பிறகு வேகவைத்த பயத்தம்பருப்பு சேர்த்து அத்துடன் அரைத்த தேங்காய் விழுதும் சேர்த்து இரண்டு நிமிடங்கள்  கொதிக்க வைத்து இறக்கவும்.

கமகமக்கும் தக்காளிக்காய் கூட்டு தயார்.

சேஷப்ரியா பாலாஜி

உயிருக்குள் உருவானாய்


விழி வழியே நுழைந்தாய் /
உள்ளத்தில் எண்ணத்தால் வளர்ந்தாய் /
இதயத்தில் துடிப்பானாய் /
இரு கரம் கோர்த்து துணையானாய் /
உடலோடு உறவானாய் /
பேச்சோடு மூச்சுக் கலந்தாய் /
காமப் பசி தீர்த்தாய் /
காதல் சுகம் கொடுத்தாய்./
உயிர் அணுக்கள் /இடம் மாற
சிப்பிக்குள் முத்தானாய்./
பிள்ளை வடிவில் உயிருக்குள் உருவானாய். /

   

புதியவர் தேவையில்லை

கண்ணுக்குள் உன்
முகத்திரை இருக்க /
கண் கலங்கி அதை
அழித்திடுவேனோ?

நெஞ்சத்தில் நீ
இருக்கையிலே /
துன்பக்கடல் இறங்கி
நீந்திடுவேனோ  ?

நீ கொடுத்த முத்தங்கள்
சேமிப்பில் இருக்க /
முத்தமின்றி
தவித்திடுவேனோ  .?

உள்ளத்தை ஆழும் அரசு
நீயாக இருக்கையிலே /
பிரிவை நினைத்து
வருந்திடுவேனோ  ?

இடைக்காலப்  பிரிவு
அன்பின் பரீட்சைக்கான தேர்வு /
உனக்கும் எனக்கும்
காலம் நடத்திவிட்டதாக
உணர்ந்தால் வலிக்கு
வேலி போட்டிட மாட்டேனோ ?

உன் புன்னகை 
என் நகையானது /
உன் கூரிய மீசை
என் கன்னத்தில் பதியமானது /
புதிதாய் எதைத்  தேடி
நான் இனிமேலும்
அலைய வேண்டுமோ

தக்காளிக்காய்

அனைவருக்கும் வணக்கம்
இன்றைய போட்டிக்கான பொருள் "தக்காளிக்காய்"
என்னுடைய குறிப்பு, "தக்காளிக்காய் ஃப்ரை"

தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் தக்காளிக்காய் - 8
வெங்காயம் - 1 - பொடியாக அரிந்து கொள்ளவும்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டீ ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லித் தூள் - 1 டீ ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
புளிக்கரைசல் - கோலிகுண்டு அளவு புளியை கரைத்துக் கொள்ளவும் 2 டேபிள் ஸ்பூன் அளவு இருந்தால் போதும்.
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப .
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் .

செய்முறை:
தக்காளிக்காய்களை நான்கு கால் பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். விதைகளை மேலோட்டமாக நீக்கி விடவும்.
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் கடலைப் பருப்பு, வேர்க்கடலை, ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் வெள்ளை  எள் சேர்த்து இன்னும் ஒரு 1/2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும். பிறகு இதை தனியே எடுத்து வைத்து ஆற விடவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு  சீரகம் தாளித்து பின்னர் அத்துடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இத்துடன் தக்காளிக்காய், மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வாணலியை மூடி, மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும்.
இதனிடையே வறுத்து வைத்த கடலைப் பருப்பு, வேர்க்கடலை, எள் ஆகியவற்றை மிக்சியில் சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
தக்காளிக்காய்கள் நன்கு வெந்தவுடன், இத்துடன் மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தூள், சீரகத்தூள், தேங்காய்த்துருவல் ஆகியவற்றை 2 நிமிடம் வரை வதக்கவும்.
இறுதியாக பொடித்து வைத்த பொடிகளை சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.
சுவையான தக்காளிக்காய் ஃப்ரை தயார்.
கலந்த சாதங்கள், சப்பாத்தி இவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

ஆத்து மீன் குழம்பு

கழுவி சுத்தம் செய்த  ஆத்து மீன் : 1  கிலோ
உறித்த சின்ன வெங்காயம் - 150 கிராம்
நன்றாக பழுத்த தக்காளி-2
தேங்காய் பால் -2 கப்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
புளி சிறிதளவு

தாளிப்பதற்கு
சிறிதளவு இஞ்சி, பூண்டு
நசுங்கி வைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை
கொத்தமல்லி தளை தேவையான அளவு.

ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சிறிதளவு சின்ன சீரகம் போட்டு அது பொறிந்ததும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்பு வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன்  மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சேவையான  அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின் கழவி வைத்த மீனை குழம்பில் சேர்ந்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக வெந்ததும்  அதில் வெட்டி வைத்துள்ள கருவேப்பிலை கொத்துமல்லித்தழை போட்டு இறக்கி பரிமாறவும். சுவைத்து அருமையாக இருக்கும். செய்து பாருங்கள்

கொய் மீன் குழம்பு

2சாப்பாட்டிற்கு

தே.பொருட்கள்

கொய்மீன் 1/4 கி.கி.
தக்காளி பழம் 2
சின்ன வெங்காயம் 10
பச்சை மிளகாய் 1
பூண்டு பல் 2
கறிவேப்பிலை தே. அளவு
உப்பு தே.அளவு
கறிமிளகாய்த் தூள் தே.அளவு
தேங்காயெண்ணெய் 2 மே.கர.டி
கடுகு ஒரு சிட்டிகை
சி.சீரகப் பொடி 2சிட்டிகை

செய்முறை.
மீனை வெட்டி நன்கு கழுவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, பூண்டு என்பவற்றைச் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் தேங்காயெண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு கடுகு வெடித்ததும் அதனுள் நறுக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கி பொன்னிறமாகும்போது நறுக்கிய பூண்டைப் போட்டுத் தாளிக்கவும் பின்னர் தக்காளிப் பழத்தைப் போட்டு நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பைச்சேர்த்து வதங்கும்போது கறிமிளகாய்த்தூளை இட்டு தேவையான அளவு நீரைச்சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கொதிக்கும்வேளை மீனைப்போட்டு மூடி 5 நிமிடம் இளந்தீயிற் கொதிக்கவிடவும்
5 நிமிடத்தின் பின்னர் சீரகப்பொடி சிறிதாய் நறுக்கிய கறிவேப்பிலை தூவிப் பின்னர் இறக்கவும்.
சிறிது மூடிவைத்துப் பின் பரிமாறலாம். கமகமக்கும் கொய்மீன் குழம்பு தயார்.

குறிப்பு .சட்டியினுள் கரண்டி போட்டுக் கிண்டுதலைக் குறைப்பது நன்று.

திருமதி பிரிந்தா புஷ்பாகரன்

தக்காளிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்;
தக்காளிக்காய்....அரைகிலோ.
வெங்காயம்...நான்கு.
பூண்டு...பத்து பல்
இஞ்சி....சிறு துண்டு.
தேங்காய்..
அரைக்க;
தேங்காயுடன் சீரகம், பெருஞ்சீரகம்..மிளகாய் வற்றல்(6) மிளகு5 சின்ன வெங்காயம்..6  சேர்த்து மைய அரைத்துக் கொள்ளணும்.
செய்முறை;
வாணலியில் எண்ணெய்‌ஊற்றி...கடுகு சீரகம் தாளித்து... வெங்காயத்தை வதக்கி. இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கணும்...அதனுடன் தக்காளிக் காயையும் சேர்த்து...‌தண்ணீர்  உப்பு சேர்த்து வேகவிடணும்.ஓரளவு வெந்ததும் அரைத்ததை சேர்த்து கொதிக்க விடணும்.நன்றாக கொதித்ததும்...இறக்கி வைத்து...சூடான சாதத்தில்...தோசையில்...இட்லியில் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு..அரைக்கும் கலவை...மசிய அரைபட்டிருந்தால் தான் குழம்பு கெட்டியான பதத்தில் இருக்கும்.இல்லையெனில் தனித்தனியாக பிரிந்து நீற்றுப் போய்விடும்.
ஆர்.பூமாதேவி

ஆத்து (கொய் மீன்) குழம்பு

தேவையானவை :
கழுவிய ஆத்து(கொய்) மீன் : 1 கிலோ
உறித்த சின்ன வெங்காயம் : 250 கிராம்
தக்காளி :2 நறுக்கியது
தேங்காய் : 4 கீற்று(துண்டு)
பச்சைமிளகாய் : 4
மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் போன்றவைகள் தேவையான அளவு

புளி : தேவைக்கேற்ப
கடுகு , வெந்தயம் , கருவேப்பிலை தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் நறுக்கியது : 4

மாங்காய் : 1(நறுக்கியது)

செய்முறை :
* மண் சட்டி அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு உறித்த சின்ன வெங்காயத்தை வதக்க வேண்டும் பின்
வெட்டிய தக்காளியை போட்டு வதக்கி இரண்டையும் அரைத்துக் கொள்ளவேண்டும் .

* தேங்காயை தனியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் .

* மண் சட்டியை அடுப்பில் இட்டு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம் கருவேப்பிலை போட்டு  கடுகு பொறிந்தபின் பச்சைமிளகாய் போட்டு அரைத்து வைக்கப்பட்ட வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்து
தேவையான அளவு மிளகாய்தூள் , கொத்தமல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பின்பு அரைத்து வைக்கப்பட்ட தேங்காயை சேர்த்து அத்துடன் கழுவி வைக்கப்பட்ட ஆத்து(கொய்) மீனையும் சேர்த்து மூடி வைக்க வேண்டும் ஐந்து நிமிடம் கழித்து கரைத்து வைத்த புளி மற்றும் நறுக்கி வைத்த மாங்காயும் சேர்த்து மூடி வைத்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும் ருசியான ஆத்து(கொய்) மீன் குழம்பு தயார் ...🐟🐟

ர.ரகுராமன்

தக்காளி அவாக்கோடா


தேவையான பொருள்கள்
**************************
தக்காளிக்காய் 2
அவகாடோ  நன்கு கனிந்தது 2 இதை பட்டர் பழம் எனவும் அழைக்கிறார்கள் .புரதசத்து மிகுந்தது
பக்குவமானது எனில் தோல் எளிதில் கழன்றுவிடும்
பச்சை மிளகாய்4
கொத்தமல்லித் தழை
எலுமிச்சை சாறு தேவையான அளவு
உப்பு
செய்முறை
பச்சை தக்காளியை பதமாக தண்ணீரில் வேகவிட்டு தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்
இத்துடன் மற்று எல்லா பொருள்களையும் கலக்கவும்
அருமையான அவகாடோ டிப் தயார் இளம் பச்சை வண்ணத்தில் அசத்தும் .
ரொட்டியின்மேல்தடவி சாப்பிடலாம் .
அல்லது பார்டிகளில் காய்கறிகளை காரட் முள்ளங்கி பீட்ரூட்  சீ ஸ்  இவற்றை மெல்லியதாக வெட்டி ,வைத்தும்
வாட்டிய ரொட்டி துண்டு மற்றும் பலவித சிப் ஸ் இவைகளுக்கும்  இதை டிப்பாக வைத்து பறிமாறலாம்
இதை உடனே குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பறிமாறவும் நிறம் மாறாதிருக்க.
அவகோடா கொட்டையை இதில் போட்டு வைத்தால் நிறம் மாறாது எனவும் சொல்லுவார்கள்

அருணா ரகுராமன்

தக்காளிக்காய் கூட்டு


ஏழைகளின் எளிமையான
குழம்பு இது..
கிராமப் புறங்களில் இன்றும் பேசப்படும்
தக்காளிக் கூட்டைப் பற்றி
பார்க்கலாம் வாங்க...

தேவையானவை :

தக்காளிக்காய் : நான்கு
மிளகாய் : நான்கு
நாட்டு வெங்காயம் :    ( தேவைக்கேற்ப )
நல்லெண்ணெய் :
  ( தேவைக்கேற்ப )
கடுகு உளுந்தம்பருப்பு
கருவேப்பிலை
  ( தேவைக்கேற்ப )
மசால்பொடி ( தேவைக்கேற்ப)
கொத்தமல்லி.

செய்முறை :
1. பாத்திரத்தை நன்றாகச்
     சூடேற்றி. நல்லெண்ணெயை அதில் ஊற்ற வேண்டும்.

2. எண்ணெய் கொதிக்கும்
போதே நறுக்கிய வெங்காயம், மிளகாயை
உள்ளே போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்ததாக நறுக்கிய தக்காளியையும் உள்ளே போட்டு வதக்க வேண்டும்.

3. நன்கு வதங்கியதும்.
மசால்பொடியைத் தூவி
கொஞ்சம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

4.நன்றாகக் கொதித்த பின்.
தேவைக்கேற்ப உப்பினைப் போட வேண்டும்.
இப்பொழுது சுவையான தக்காளிக் கூட்டு தயாராகும்.

5.இன்னொரு பாத்திரத்தில்
எண்ணெய்யை ஊற்றி கொதித்ததும் கடுகு உளுந்தம்பருப்பைப் போட்டு
நன்றாக வறுத்து..
இறுதியாக கருவேப்பிலையைத் தூவி
தக்காளிக் கூட்டில்
அப்படியே கொட்டிவிட வேண்டும்..
அருமையான மணத்துடன்
தக்காளிக் கூட்டு தயார்.

6. தக்காளிக் கூட்டின் மேல்
கொத்தமல்லி இலைகளைத்
தூவி விட மணம் இன்னும்
அதிகரிக்கும்.

குறிப்பு : மின்சாரம் இல்லாத
நேரங்களில் பெரும்பாலான
வீடுகளில் தோசை , இட்லிக்கு இவையே சட்னிக்கு உடனடி மாற்றாகும்.
           வீட்டில் அம்மா,மனைவி இல்லாத நேரங்களில் பெரும்பாலும் ஆண்களின் விருப்பம் இந்தத் தக்காளிக் கூட்டு செய்வதே ஆகும்.

ம.கண்ணன்.
மதுரை.

Tuesday 25 September 2018

உயிருக்குள் உருவானாய்

விழி வழியே நுழைந்தாய் /
உள்ளத்தில் எண்ணத்தால் வளர்ந்தாய் /
இதயத்தில் துடிப்பானாய் /
இரு கரம் கோர்த்து துணையானாய் /
உடலோடு உறவானாய் /
பேச்சோடு மூச்சுக் கலந்தாய் /
காமப் பசி தீர்த்தாய் /
காதல் சுகம் கொடுத்தாய்./
உயிர் அணுக்கள் /இடம் மாற
சிப்பிக்குள் முத்தானாய்./
பிள்ளை வடிவில் உயிருக்குள் உருவானாய். /

   

(போட்டிக்கவிதை)

எரி மலையும் சிறு பொடியே

துணிந்து எழுந்து பார்!
எரிமலையும்  சிறு பொடியே.!
மலையைக் கொடையும் உளியாய் மாறிப்பார்!
மலையும் உமக்கு தூசியே/

ஓட ஓட விரட்டுவோரை!
ஒரு நிமிடம் நின்று முறைத்துப்பார் !
அன்றே நீ  வல்லவனே."
இடிமேல் இடி வாங்கும் வானமாய் !
தோல்வியைக் கண்டு
தயங்காமல் முயன்று பார் !
இடையூறு கொடுப்போரின் !
தொடை நடுங்குமே /

விழாமல் நடக்க முற்படாதே!
விழுந்து எழுந்து பார்- உன்
பாதத்தின் பலம் உமக்குப் புரியுமே.!
கெஞ்சி இருக்காதே !
உரியதை தட்டிக் கேட்டுப்பார் !
எட்டி நிற்பான் எதிரியும் /

விட்டில் பூச்சியாக !
இருக்கும் நோக்கை !
விட்டு துணிந்து பார் !
எரிமலையும்  சிறு பொடியே /

முன்னேறு

முட்டி மோதி முன்னேறு
அந்த விதை போலே./
நிலத்தைக் கிழித்து
எழுந்து சிரிக்கும் முளை போலே./
புயல் அடித்தாலும் தாங்கி நின்று
விழுது விடும் ஆலமரம் போலே./
உறுதியான தைரியத்தை
உள்ளத்தில் ஒலிக்க விடு./
தாக்கம் தனிந்து ஊக்கம் தானாக எழும்./

மீண்டும்  மீண்டும் முயற்சி செய்/
ஒரு முறைக்கு இரு முறை. /
தோல்வி தொலைந்து /
வெற்றி ஒட்டிக் கொள்ளும்/
உலகிலே உன் புகழ் ஓங்கி விடும்.//

அடுத்தவனை கெடுத்து முன்னேறாதே./
ஆத்ம திருத்தியோடு உடல்
வருத்தி முன்னேறு. /
இதயத்தை இரும்பாக்கி /
துன்புறுத்தி முன்னேறாதே. /
உண்மை உழைப்பில் முன்னேறு./

ஊமை கண்ட கனவு
போல் காலத்தை கழிக்காதே./
எப்போதும் இலட்சியத்தோடு
நடை போட்டு முன்னேறு./
ஏழை எளியோரை வருத்தி முன்னேறாதே./

ஒரு மனிதனின் உயிருக்கு
மதிப்பு அளித்து முன்னேறு./
ஓயாது மூளைக்கு
வேலை கொடுக்காமல் /
ஓய்வு கொடுத்து சிந்தித்து /
செயல் படு  வெற்றிப் படி உன் பிடியில் /