Wednesday 26 September 2018

தக்காளிக்காய்

அனைவருக்கும் வணக்கம்
இன்றைய போட்டிக்கான பொருள் "தக்காளிக்காய்"
என்னுடைய குறிப்பு, "தக்காளிக்காய் ஃப்ரை"

தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் தக்காளிக்காய் - 8
வெங்காயம் - 1 - பொடியாக அரிந்து கொள்ளவும்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டீ ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லித் தூள் - 1 டீ ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
புளிக்கரைசல் - கோலிகுண்டு அளவு புளியை கரைத்துக் கொள்ளவும் 2 டேபிள் ஸ்பூன் அளவு இருந்தால் போதும்.
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப .
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் .

செய்முறை:
தக்காளிக்காய்களை நான்கு கால் பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். விதைகளை மேலோட்டமாக நீக்கி விடவும்.
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் கடலைப் பருப்பு, வேர்க்கடலை, ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் வெள்ளை  எள் சேர்த்து இன்னும் ஒரு 1/2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும். பிறகு இதை தனியே எடுத்து வைத்து ஆற விடவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு  சீரகம் தாளித்து பின்னர் அத்துடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இத்துடன் தக்காளிக்காய், மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வாணலியை மூடி, மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும்.
இதனிடையே வறுத்து வைத்த கடலைப் பருப்பு, வேர்க்கடலை, எள் ஆகியவற்றை மிக்சியில் சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
தக்காளிக்காய்கள் நன்கு வெந்தவுடன், இத்துடன் மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தூள், சீரகத்தூள், தேங்காய்த்துருவல் ஆகியவற்றை 2 நிமிடம் வரை வதக்கவும்.
இறுதியாக பொடித்து வைத்த பொடிகளை சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.
சுவையான தக்காளிக்காய் ஃப்ரை தயார்.
கலந்த சாதங்கள், சப்பாத்தி இவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment