Thursday 20 September 2018

சொ சொ காய் கூட்டு


தேவையான பொருட்கள்.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
துவரம் பருப்பு-முக்கால்  கப்.
சௌ சௌ -1
பெருங்காயத்தூள் -சிறிதளவு.
மஞ்சள் தூள் சிறிதளவு.

அரைக்க.
÷÷÷÷÷÷÷÷÷
தேங்காய் -2 கைப்பிடி அளவு..
ஜீரகம் -கால் டீ ஸ்பூன்.
சின்ன வெங்காயம் -1
காய்ந்த மிளகாய் -2.
பூண்டு -1 பல்.

தாளிக்க.
÷÷÷÷÷÷÷÷
நெய்-சிறிதளவு.
கடுகு -சிறிதளவு.
காய்ந்த மிளகாய் -1.
கருவேப்பிலை -சிறிதளவு.

     சௌ சௌ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது மஞ்சள் தூள். பெருங்காயத்தூள் இட்டு துவரம்பருப்போடு வேக வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து சௌ சௌவோடு கலந்து வாணலியில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்திட சுவையான சௌ சௌ கூட்டு ரெடி. .(இது குமரி மாவட்ட ஸ்பெஷல் )

நன்றி.

No comments:

Post a Comment