Saturday 8 September 2018

விஷத்தாய்

எந்தன் விதி இதுவோ ?
இறைவன் தந்த வரம் இதுவோ?
புத்தி மளிங்கியே வந்த சதி இதுவோ?
இந்த பாவத்தை செய்தனவோ ....?

கணவனைக் காதலித்து இருந்தால்
கண்ணீர் அருவி பெருக்கெடுக்காது.
பிள்ளையை அரவணைத்து இருந்தால்
பாவி  என்னும் பெயர் வந்திருக்காது.../

குற்றப்பத்திரிகையில் இடம் ஒதுக்கப்பட்டதே.
பெற்றோர்களாலும் ஒதுக்கப் பட்டுவிட்டதே.
உடன் பிறப்பும் என்னுயிர்
எடுக்கத் துடிக்கின்றதே .
கண்டவர்கள் எல்லோரும் 
சபிக்கின்ற நிலை வந்ததே ..../

கள்ளக்காதல்  வாழ்க்கைக்கு
கொள்ளி வைத்து விட்டன.
கள்ளத் தொடர்வு உள்ளத்தை
கல்லாக்கி விட்டன.
கள்ளம் இல்லாத மழலைகளின்
உயிரைக் குடித்து விட்டன.
கற்பு இழந்த பெண்ணாக
தெருவிலே உலாவ விட்டன ...../

பத்து மாதம் சுமந்து பெற்ற. பிள்ளையின் உயிர் எடுத்து காமப் பசி தீர்க்க
புறப்பட்ட பாவியானேன்.
கட்டியவனை வெட்டி விட்டு ஊரவனோடு
வாழத்தவித்த பாவியானேன்.
கொட்டும் தேளாக குட்டுகிறது மனசாட்சி.
கழுத்தை கயிறால் இறுக்கிறது கனவில்
நீதிமன்றக் காட்சி ..../

சோறு ஊட்டிய கரங்களாலே
விஷம் ஊட்டிய பாதகத்தி நான்.
அழகு பார்த்து மகிழ்ந்த விழியாலே
அனு அனுவாக துடித்து இறப்பதை
பார்த்த பாதகத்தி நான்...../

அம்மா என்று அழைத்த குரலை
நெரித்து உயிர் நிறுத்திய பாதகத்தி நான்
அய்யோ கதற வைக்கிறது பதற வைக்கிறது  .
வாய் திறந்து சொல்ல முடியவில்லை
உள்ளமதை நெருப்பாய் எரிக்கிறது.
என்னுள்ளே இருந்து தன்னாலே
தண்டனை கொடுக்கிறது என் மனசாட்சி ../

No comments:

Post a Comment