Wednesday 5 September 2018

செல்ஃபி (கிளிக்)


ஆதி மனிதன்
தன்னைத் தானே
பார்த்து ரசித்தான்
தெளிந்த ஓடையிலும்
பரந்த குளத்து நீரிலும்
தன்னுடைய பிம்பம்
கண்டு இன்பம் கொண்டான்.

அடுத்த காலத்து மனிதன்
ஒரு படி மேலே சென்று
கண்ணாடியைக் கண்டு பிடித்தான்
தன் அழகை பல கோணத்தில்
பார்த்து ரசித்தான் புகைக் கருவியை
உருவாக்கினான் பிறர் உதவியுடன்
புகைப்படம் எடுத்து ரசித்தான்.

படிப்படியாக
மனிதனின் முன்னேற்றம்
பாதியிலே மண்ணை
விட்டு ஓட்டம்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி
(தன்)ஞானம் இழக்கான்
தன்னையும் இழக்கான்
கையிலே தொலைபேசி
துணையாக மட்டும் இல்லை
தொல்லையாகவும்
கொலையாளியாகவும்
செல்ஃபி(கிளீக்) என்னும்
மோகத்தால் செயல் இழக்கின்றது
அவன் மூளை.

பாதை ஓரமாக நின்றாலும் செல்ஃபி
பயணத்திலும் செல்ஃபி
பாதால  உலகத்திலும் செல்ஃபி
விமானத்திலும் செல்ஃபி
அருவி  ஓடையிலே பரிசிலும் செல்ஃபி
இந்தச் செல்ஃபி மோகம் சொற்ப
நேரத்தில் பறிக்கின்றது பல உயிரை.

மனிதன் உருவாக்கிய உபகரனமே
அவனுக்கு சவாலாக அமைகின்றது
அவனின் ஆறாம் அறிவு மதிஇழக்க
ஆரம்பித்து அதிக நாட்கள் ஆனது.

No comments:

Post a Comment