Thursday 13 September 2018

புரிகிறதா போலிகளே

இங்கே உள்ளம் விற்பனைக்கு இல்லை /
இதயறை வாடகைக்கு இல்லை /
விளையாட்டு மைதானமாக 'என்
மனதை  அறிவிக்க வில்லை/
ஏமாற்று  வரவுகளுக்கு இவ்வேளை,
பாதை திறக்கப்படவில்லை /
மாற்று வழி உண்டு  கடந்து செல்லுங்கள் /

அறுபடையாகும் அன்பு /
விதைக்க அனுமதி இல்லை /
அவமதிக்கும் குணத்திற்கு
மரியாதை  எனது பெட்டகத்திலும் இல்லை /
தலைக்கனம் கொண்டோருக்கு
தலைவாசலில் வரவேற்பு இல்லை /
தாமதிக்காமல் வேற்றுப்பாதையை
நோக்கிச் சென்று  விடுங்கள் /

நட்பு அறியாத கோளைகளுக்கு /
இவ்விடத்தில் வேலை இல்லை /
நாடகம்  நடிப்போருக்கு அரங்கேற்ற
மேடை  ஆயத்த நிலையில் இல்லை /
தேன் உருக பேசி தேளாகக்  கொட்டும் /
மனிதர்களுக்கு   குப்பைத் தொட்டி,  போடப்பட வில்லை /

சிறுபிள்ளைத்தனமான நபர்களுக்காக /
இப்பகுதியில் கம்மி விலையில்
பொம்மை துங்க விடவில்லை  /
வேகமாய் செல்லுங்கள் இவ்விடத்தை, விட்டு நீங்கள்  விரைவுப் பாதை நோக்கி /

No comments:

Post a Comment