Friday 21 September 2018

பசியோடு காத்திருக்கேன் மச்சானே

காட்டு முயல் வாங்கி
காரம் போட்டு வறுத்துப்புட்டு /
குளத்து மீன் வாங்கி
கம கமக்க குழம்பு வச்சுப்புட்டு /

தோட்டத்து மரவள்ளிக்கிழங்கு
எடுத்து மசியல் செஞ்சுப்புட்டு /
தொங்கிய பாவைக்காயைப் பறித்து நறுக்கி சுறுக்கென்று புளியிட்டு /
நறு நறு என்று நொறுக்க பொரித்து விட்டு /

குத்தரிசி  சாதம் பக்குவமாய்
நிறைகட்டி ஆக்கிப்புட்டு /
குழி நீர் எடுத்து கூசாவை நிறைச்சிக்கிட்டு /
திண்ணையிலே பாய் போட்டுகிட்டு /
கண் அயராமல் காத்திருக்கேன் /
கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டு /

விறகடுப்பிலே கொதிநீர் போட்டாச்சு /
துவட்ட துண்டும் தயாராச்சு /
கொண்டைக்கு பூச்சாரம் கட்டியாச்சு /
கண்டாங்கி சேலை உடுத்தாச்சு /
அகப்பை பிடித்து பரிமாறும் கரங்களுக்கு /
வண்ணவளையல்கள் அடுக்கியாச்சு /

பக்கத்திலே நீ வந்தமர்ந்தால் /
பக்குவமாய் பரிமாறவே நேரமாச்சு /
விரைந்து வா விரும்பி உண்ண /
பசியோடு நான் காத்திருக்கேன் மச்சானே /

 

No comments:

Post a Comment