Thursday 20 September 2018

சௌ சௌ துவையல்


தேவையான பொருள்கள்
சௌசௌ 1
வெங்காயம் 1
பூண்டு பல்லு 4
புளி சிறிதளவு
சிவப்பு மிளகாய் 6
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
உப்பு
பெருங்காயம்
செய்முறை
சௌசௌ காயில் முரட்டு தோலை மென்மையாக சீவி எடுத்துவிட்டு
துண்டங்கள் ஆக்கவும்
வாணலியில் சிறிது எண்ணைவிட்டு
சௌசௌ காயை சிறிது நிறம் மாறி வேகும் வரைவதக்கி எடுக்க கவும்
மற்ற பொருள்களையும் சிறுது எண்ணையில் வதக்கி எடுத்து
எல்லாவற்றையும் ஒன்றாக உப்பு புளி பெருங்காயம் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்
சுவைமிக்க சௌசௌ துவையல் தயார்
சுட சுட சாதத்தில் நெய்சேர்த்து துவியலிட்டி
அப்பளமும் உருளைக்கிழங்கு பொரியலுக்குள் சேர்த்து சாப்பிடநன்றாக இருக்கும்
இதை எண்ணை விட்டுமறுபடி சுருள வதக்கி குளிர்சாதனப் பெட்டியில் இட்டு இரண்டு மூன்று நாள் வரை உபயோகிக்கலாம்
தோசை இட்லிக்கும் சட்னி போல் உகந்தது

அருணா ரகுராமன்

No comments:

Post a Comment