Saturday 8 September 2018

கிராமத்து சிட்டு

வெடக் கோழி வறுத்துப்புட்டு!
ஆட்டுக் குடல் கத்தரிக்காயோடு!
கலந்து பிரட்டல் போட்டு!
காட காபுதாரி  கட்டிப் பாலில்
கறியாக்கிப்புட்டு  /

கெண்டைமீன் துண்டு போட்டு!
உப்பு காரம் மஞ்சளோடு
அளவாய் போட்டு!
பொன் நிறத்தில்
பொரித்தெடுத்துப்புட்டு!
கிள்ளுக்கீரை நொள்ளிப் போட்டு !
கடையலாக செஞ்சுபுட்டு /

சின்ன வெங்காயமும் சுத்தம் பண்ணி
மேசைமேலே எடுத்து வச்சிக்கிட்டு!
கம கமக்க குத்து ரசம்
கொத்தமல்லி போட்டு மூடிபுட்டு!
தலைவாழையிலையோடு!
மோர்மிளகாய் இணைச்சு வச்சிக்கிட்டு  /

நொறுக்க அப்பளம், சுவைக்க
பானம் கரைச்சு முடிச்சுபுட்டு!
சீரகச் சம்பா சாதம் அடுப்போடு
போட்டு விட்டு!
கொண்ட மேலே பூ வச்சிக்கிட்டு!
கண்டபடி கற்பனை  தன்  தலையில் ஏற்றிக்கிட்டு /

கண்டாங்கிசேலையை சரிய விட்டுக்கிட்டு!
கம்பங்காட்டுக்கு கட்ட வண்டி  ஓட்டிக்கிட்டு!
போன வேலு மச்சான் வரவைக்
காத்திருக்கா இந்தச் சின்னச் சிட்டு /

  

No comments:

Post a Comment