Thursday 20 September 2018

அனைவருக்கும் வணக்கம்
இன்றைய ஸ்பெஷல் செள செள குருமா

தேவையான பொருட்கள்:
செள செள  - 1 தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியது.
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பூண்டு - 3 பற்கள் - நன்கு நசுக்கியது
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது.
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லித் தூள் - 3 டீ ஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப.

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீ ஸ்பூன்
கடலை மாவு - 3 டீ ஸ்பூன்

தாளிப்பதற்கு:
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்
கிராம்பு - 3
லவங்கப் பட்டை - 1 இன்ச் துண்டு ஒன்று
பிரிஞ்சி இல்லை - 1
சோம்பு - 1 டீ ஸ்பூன்

செய்முறை:
1. தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, கடலைமாவு இவற்றை சிறிதளவு நீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை 30 செகண்டுகள் வறுத்துக் கொள்ளவும்.
3. பிறகு வெங்காயம், பூண்டு இவற்றை ஒரு நிமிடம் வரை வதக்கி விட்டு, அதனுடன் தக்காளித் டீ குண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வரை வதக்கவும்.
4. இத்துடன் செள செள துண்டுகளை சேர்த்து 1 கப் நீர் சேர்த்து, மூடி வைத்து மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும்.
5. பிறகு உப்பு சேர்த்து, அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
6. மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து குமிழிகள் வரத் துவங்கியவுடன் இறக்கி விடவும்.
7. ரொட்டி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சுவையான செள செள  குருமா தயார்.

எஸ் வி ரமணி

No comments:

Post a Comment