Thursday 20 September 2018

கலையும் வண்ணங்கள்

சின்னச் சின்ன கற்பனைச்
சின்னம் செதுக்கி /
ஆசை வண்ணம் தீட்டி வந்தேன் /
கட்டுடலிலே பட்டு உடுத்தி /
கட்டிய கூந்தலில் பூ முடித்து /

கண்ணோரம் கருமையிட்டு /
கண்ணாடி வளையல்களை
எண்ணிக்கை குறையாமல் மாட்டி /
கொலுசோடு மெட்டி போட்டு /

வாழ்வு கலியாணத்துக்கு வாழ்த்துரைக்க / தவறாமல் சென்று விட வேண்டும்
என்று /
பருவம் கண்ட நாள் முதல் மனக்கோட்டை கட்டி வந்தேன் /

என் வாழ்க்கை விளக்கு எரியவில்லை /
இருட்டறையாகப் போனது வாழ்வு இன்று /
பட்டாடை வண்ணம் மாறியது /
வெள்ளைச் சேலை என்னில் ஏறியது /

போட்ட வளையல் கழட்டவில்லை நொறுக்கப்பட்டது /
கண் மையே நெற்றிப் பொட்டானது /
முற்றத்து மல்லிகை முற்றாக உதிர்ந்து சருகாகிறது /
வண்ணக் கனவு வண்ணம் கலைந்தது /
எண்ணமெல்லாம் என்னுள் புதைந்தது /

        

No comments:

Post a Comment