Wednesday 26 September 2018

கொய் மீன் குழம்பு

2சாப்பாட்டிற்கு

தே.பொருட்கள்

கொய்மீன் 1/4 கி.கி.
தக்காளி பழம் 2
சின்ன வெங்காயம் 10
பச்சை மிளகாய் 1
பூண்டு பல் 2
கறிவேப்பிலை தே. அளவு
உப்பு தே.அளவு
கறிமிளகாய்த் தூள் தே.அளவு
தேங்காயெண்ணெய் 2 மே.கர.டி
கடுகு ஒரு சிட்டிகை
சி.சீரகப் பொடி 2சிட்டிகை

செய்முறை.
மீனை வெட்டி நன்கு கழுவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, பூண்டு என்பவற்றைச் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் தேங்காயெண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு கடுகு வெடித்ததும் அதனுள் நறுக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கி பொன்னிறமாகும்போது நறுக்கிய பூண்டைப் போட்டுத் தாளிக்கவும் பின்னர் தக்காளிப் பழத்தைப் போட்டு நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பைச்சேர்த்து வதங்கும்போது கறிமிளகாய்த்தூளை இட்டு தேவையான அளவு நீரைச்சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கொதிக்கும்வேளை மீனைப்போட்டு மூடி 5 நிமிடம் இளந்தீயிற் கொதிக்கவிடவும்
5 நிமிடத்தின் பின்னர் சீரகப்பொடி சிறிதாய் நறுக்கிய கறிவேப்பிலை தூவிப் பின்னர் இறக்கவும்.
சிறிது மூடிவைத்துப் பின் பரிமாறலாம். கமகமக்கும் கொய்மீன் குழம்பு தயார்.

குறிப்பு .சட்டியினுள் கரண்டி போட்டுக் கிண்டுதலைக் குறைப்பது நன்று.

திருமதி பிரிந்தா புஷ்பாகரன்

No comments:

Post a Comment