Wednesday 12 September 2018

இழந்து விட்ட கனப்பொழுது

.

விடிந்தால் உயர்
தரப் பரீட்சையம்மா.
தடித்த சொற்களில்
அப்பாவின் எச்சரிக்கையம்மா.
துடித்தது என் இதயம் அம்மா
மடிந்தது அன்று தூக்கம் அம்மா.

அதிகாலையிலே எழுந்தேன்னம்மா
ஆதிபகவைனை துதித்தேனம்மா
அவசரமாகவே தயாரானேனம்மா
ஆனாலும் விதி
என்னை விடவில்லையம்மா.

மதி இளந்த பிள்ளையானேனம்மா
சதிக்கு நானும் துணை போனேனம்மா
வழுக்கி விழுந்தேன் படு குழியில்லம்மா
வந்து விட்டேன் சிறை வசம் அம்மா .

தாய் வருந்தியே இறந்தாள்ளம்மா
தந்தை வெறுத்தே ஒதிங்கிவிட்டாரம்மா
தாய் இழந்த சேயானேனம்மா
தந்தை சொல் மந்திரமென
உணர்கின்றேனம்மா.

வெந்து வெதும்புது உள்ளமம்மா
நொந்த படியே நகருகிறது
என் வாழ்க்கையம்மா
சொந்த பந்தம்
வரவு இல்லையம்மா
வந்தாலும் முகமோ
நினைவில் இல்லையம்மா.

இருவது வயதிலே
துடிப்போடு இறுமாப்பும்மா
இறுதியிலே கற்றுக்
கொடுக்கிறது பல பாடமம்மா
இரண்டு நிமிடம் முன்பு
பேருந்து வந்திருந்தாலம்மா
இருண்டு போய்
இருக்காது என் பாதையம்மா.

நான் இழந்து விட்ட
அந்தக் கனப்பொழுதம்மா
கொடுத்தது பல இழப்புக்களம்மா
நான் மீண்டும் மீட்டு
எடுக்கமுடியத இழப்பம்மா
கொடுத்து விட்டேன் நேர்காணலம்மா

இழந்து விட்ட கனப்பொழுது
என்று தலைப்பிட்டும்மா
இந்த. செய்தியை பத்திரமாக
மித்திரனில் சேர்த்து விடம்மா
இறுதிப் பக்கம் பதிவிடாதேயம்மா
அறுவதிலே அமைதி காணுது
இன்று என் ஆத்மாம்மா.

No comments:

Post a Comment