Wednesday 12 September 2018

விநாயகர் சதுர்த்தி


சதுர்த்தியின் நாயகனே
இன்று  நான் உன் துதி பாட வந்தேன்.
மோதக அர்ச்சனை கண்டு நம்பிக்கை
கொடுக்கும் தும்பிக்கையானே
சரணம் சரணம் பிள்ளையார் அப்பா சரணம்.

அறுகம்புல் கொண்டு பூசித்து
இறுக்கமாமக் கண்கள் மூடி
மனக்கண்  திறந்து பிராத்திக்கும்
பக்தனுக்கு வரம் அளிக்கும்
யானைமுகத்தோனே சரணம்
சரணம் பிள்ளையார் அப்பா சரணம்.

நெய் அபிஷேகம் செய்து
நெற்றியில் வீபூதி இட்டு தலையில்
குட்டியபடியே  சுற்றி வலம் வரும்
பக்தனுக்கு கேட்கும் வரம் கொடுக்கும்
ஆறுமுகன்  தனையனே சரணம்
சரணம் பிள்ளையார்  அப்பா சரணம்.

திருச்சிற்றம் பழத்துக்குள் நின்று
முதல்  முதல்  கடவுளாக( முன் )வலம் வரும்
செல்லப்பிள்ளையாரே உன் திருவடி பணிந்தேன்
சதுர்த்தி தினத்தைப் புகழ்ந்து மகிழ்தேன்
வெள்ளிப்பிள்ளையாரே வேண்டும் வரம்
கொடுத்தருளும் அப்பா கஜமுகனே
சரணம் சரணம் பிள்ளையார்  அப்பா சரணம்.

(5.9.2016)   எழுதியவை

இன்று விநாயகர் சதுர்த்தி  தினமான
இன் நாளிலே அனைவருக்கும்  விநாயகப் பெருமான்
அருள் கிடைக்க இறைவனை  பிராத்திப்போம்

அன்பு நட்புக்கள் அனைவருக்கும்  நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment