Saturday 31 December 2016

மௌனம்

நெடு நாளாக மௌனம்
இருக்கும் திறமையை
உன்னிடம் தான் கண்டு
கொண்டேன் ....../////

மௌனத்தால் அமைதி
கிடைக்குமா என்ற கேள்வியும்
உன்னை பார்த்த பின்புதான்
பிறக்கின்றது ......///

மௌனமாக இருக்க ஒரு
தனி திறன் வேண்டும்
அதை உன்னிடம் கண்டு
வியர்ந்து நின்றேன் ...../////

மௌனத்தால் மனம்
நிறைந்த வலியை பிறருக்கு
கொடுக்க முடியும் என்று
உணர்த்தியவனும் எனக்கு
நீயே நீயே தான் ..../////

எப்போதும் போல் இன்றும்
உன் மௌனம்  வென்று
விட்டது என் இன்பத்தை
தின்று விட்டது ....../////

உன் மொழி பறந்து வரவில்லை
என் விழி கலங்கி விட்டது
புதுவருடப்  பரிசாக உன்
பிடிவாதம்  என்  விழி நீரை இன்று
பெற்று விட்டது ...../////

என்றும் போல் இன்றும்
செய்தி பெட்டி செத்து விட்டது
போட்ட செய்தி தங்கி விட்டது ...../////

Friday 30 December 2016

கொடுமை

கண்ணை
  கொடுத்து 
ஒளியை
பறிப்பது  கொடுமை.

வாய்யை 
கொடுத்து
  மொழியை
பறிப்பது  கொடுமை.

உறவை 
கொடுத்து 
உரிமையை 
பறிப்பது  கொடுமை.

நட்பை
காட்டி  தடை
விதிப்பது  கொடுமை  .

பாசம்  காட்டி
பாதியில் 
பறிப்பது  கொடுமை.

பேச விட்டு 
முடிக்கும் 
முன் மீதியை 
நிறுத்துவது  கொடுமை.

ஆசை  காட்டி 
மோசம்
செய்வது  கொடுமை

ஆதரவு  காட்டி 
அகம்
முறைப்பதுகொடுமை.

இனிமையான.
வார்த்தை 
தடிப்பாக.
மாறினால்  கொடுமை.

இன்பம் 
காட்டி 
துன்பம் 
கொடுப்பது  கொடுமை.

இரவு  பகல் 
பாராது  இதய.
உறவாடல் 
செய்து
இடை  வெளி 
கொடுப்பது  கொடுமை.

நினைவு 
இழந்து
நடை  பிணம் 
போல்  'நான் 
இருப்பது  கொடுமை.

இந்தனையும் 
புரிந்து 
விட்டு நீ 
எட்டி  நின்று
வேடிக்கை 
பார்த்து
சிரிக்கின்றாயே
அதுதான் 
கொடுமையிலும்
கொடுமையெடா   கொடுமை.

     

வாழ்த்துக்கள்


இரு கரங்கள் இணைந்த நாள்.
இவள் விழி மயங்கிய நாள்.

இல்லரத்தை அறிந்த நாள்.
இன்ப வாழ்வை புரிந்த நாள்.

சொத்தாக புது சொந்தம் கொண்ட நாள்.
மாற்றன் விட்டுக்கும் மகளான முதல் நாள்.

பூவோடு நார் சேர்ந்த நாள்.
நாத்தனார்கள் ஒன்று கூடி வம்பு இழுத்த நாள்.

புன்னகை  கொஞ்சம்  அதிகம் பூத்த நாள்.
புது உறவுகள் எல்லாம்  வாழ்த்திய நாள்.

சொந்தங்கள் திரண்ட நாள்.
சொந்தமாக ஒருத்தரை அடைந்த நாள்.

பேர் இன்பம் கொண்ட நாள்.
பெற்ரோர் தன் சுமையை இறக்கிய நாள்.

இன்றும் தொடரும் பந்தமான நாள்.
முகம் மலர்ந்து மணமகளான  நாள்.

அந்த நாள் நாளை வரும் ஹிதாயா
அக்காவின் திருமண நாள்.

அன்றைய நாள் போல் என்றும்
இன்பமாக வாழ வாழ்த்துகின்றேன்.

இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
அக்கா வாழ்க வாழ்கவே நீடூழி வாழ்கவே.

ஏய் மச்சான்

மச்சான்  மச்சான் 
என் மச்சம் பாரு 
மிச்சம்  உள்ளதை
நடு இராத்திரியில்  பாரு.

மச்சான்  மச்சான் 
ஒரு இச்சு கொடு
அந்தி முடிந்த பின்னே
மீதி மிச்சம்  உள்ளதை
சேர்த்துப்   பாரு.....!

மச்சான் மச்சான் 
நொச்சித் தோட்டம் வாரும்
தோட்டத்திலே என்
கொவ்வை இதழைப் பாரு .....!

மச்சான்  மச்சான் 
நீ மிஞ்சி போட நாளைப் பாரு 
மிஞ்சி போட்ட பின்னே
என் இஞ்சி  இடையைப் பாரு ....!

மாச்சான் மச்சான் 
நீ கொஞ்சம்  கொஞ்சிப் பேசு
தாலி போட்ட பின்னே
மெத்தை மேலே கெஞ்சிப் பேசு....!

மச்சான்  மச்சான் 
இப்போ மச்சம்  பரு
மிச்சம்  பார்க்கவே தாலி
கட்ட நல்ல. நேரம்  பாரு....!

    

மறக்காதே

உன்னைப் பார்க்க நான்
ஏக்கத்தோடு வாழ்ந்த நாட்களோ
ஏகப்பட்ட நாட்கள்.
ஏக்கம் தொலைத்து
உனைப் பார்க்க வந்த வேளையிலே
உன் வரவேற்பு  உண்மையிலே
அடடா பிறமாதம்   பிரமித்தது என் கண்கள்....!

ஊமத்தம்  பூ தூவி வரவேற்றாய்.
அரளிப்  பூ மாலை
போட்டு வாழ்த்துரைத்தாய்.
தீப்பொறியாலே
கோலங்களும் போட்டிருந்தாய்
கள்ளிச் செடி  முற்களால் 
இருக்கை அமைத்திருந்தாய்  
அதிலே பாசத்தோடு
அமர்த்தியும் விட்டாய்
கள்ளிப்பால்  அருந்தக் கொடுத்தாய். ....!

அத்தனையும்  புன்னகையோடு
ஏற்றுக் கொண்டேன்  நான்
ஏன் எதற்காக உன் பிரிவின் வலியை
விட இவை ஒன்றும் பெரிது
இல்லை என்பதற்காக....!

உன் நினைவால்
வருந்தி இறப்பதை விட
நீ விரும்பிக் கொடுக்கும்
விஷத்தாலே இறப்பது மேல் என்று
உன் அன்புக் கரம் கொடுத்த  கள்ளிப்பால்
கிண்ணத்தைக் காழியாக்கினேன் ....!

மறு ஜெம்மத்திலாவது
ஏற்றுக் கொள்வாய்
என் அன்பை என்னும் 
நம்பிக்கையில்
உயிர் திறக்கிறேன் என் அன்பே  ....!

             

Thursday 29 December 2016

சிங்காரி

சிங்கப்பூர்  சிங்காரி.

சிக்கனமாக உடை போட்ட ஒய்யாரி.

கிட்டக் கிட்ட வந்து   அவனை
தன் வசமாக்கிய கைகாரி.

சிரித்துப் பேசி சிலிப்பி நடந்து
அவனை  வளைத்துப் போட்ட காந்தாரி.

கம கமக்கும் திரவியம்  பூசி
உரசி உரசி பேசி  வசியம்
செய்து விட்டாள் அந்த மாயக்காரி.

மைனருக்கு துணையாக
வந்து அரண்மனையிலே
ஆட்சி புரியும்  கை இல்லா
ரவுக்கைக் காரி.

சொத்துக்கு ஆசைப்பட்டு
சத்தம்  இல்லாமல் சேர்த்துப்புட்டாள்
அந்த சிங்கை நாட்டு ஆத்தாக்காரி.

         

நான்

முடியப் போகும் இந்த வருடம்
கொடுத்தது பல
புது அனுபவங்களை....///

முடியாது என்ற சொல்லை
நான் என்றும் வரவேற்றதில்லை.
முயற்சி என்ற ஒன்றை
நான் கை விட்டதுமில்லை. ....//

அதனால்  கிடைக்கப் பெற்றேன்
சில இன்பங்களை.
எதிர் கொண்டேன் இன்னல்களை.
சுமந்து கொண்டேன் கவலைகளை.
ஏந்தி நின்றேன் வலிகளை....////

இருந்தும் என் போக்கையும்
குணத்தையும் மாற்றும்
நோக்கம் எனக்கில்லை...////

ஆண்டுதான் மாண்டு விடுகிறது
ஆண்டவன் மாண்டதில்லை.
முயற்சி தான் தோல்வியில் முடிகிறது
முயற்சிக்கும் மனம் மரணிக்கவில்லை....///

எதையும் தாங்கும் இதயம் 
துடிப்பை நிறுத்தவில்லை.
எதையும் எதிர் கொள்ளும்
நெஞ்சம்  மாய்ந்து விடவும்  வில்லை..../////

தூத்துவோரையும் முன் விட்டு பின்
அவதூறு பேசுவோரையும்
கண்டு அஞ்சப்போவதுமில்லை.
என் உள்ளம் கவர்ந்தவர்களை
கெஞ்சுவதிலிருந்து பின்
வாங்கப்போவதுமில்லை....////

நான் மனக்கும் முல்லையுமில்லை.
எரிக்கும் தீப்பொறியுமில்லை .
சிரித்துப் பேசி சிறப்புடன்
வாழ ஏங்கும் வெகுளிப் பிள்ளை.....////

        

Wednesday 28 December 2016

அவள் http://kaalaththinthedalgal.blogspot.com/2016/12/blog-post_28.html

அவள்

அவள்வருகிறாள் கையில் வண்ணமலரினாலான மாலை.
அவளின் கண்ணில் ஒரு விதக் கலக்கம்
அவளின் கால்களில் ஒரு தயக்கம்.
அவள் மீண்டும் முன்னேறவே முயல்கிறாள்.
அவள் உடலில் ஒரு விதமான பதட்டம்
அவள் மனம் எதையோ நினைத்துப்  பயம் உறுத்தியது
அவள் இருந்தும் பின்னடையவில்லை
அவள் முன் நோக்கியே மெதுவாக நகர்கிறாள்
அவள் உள்ளே நுழைய வேண்டிய கட்டாயம்
அவளுக்கு இது இக்கட்டான நிலமையாப் போச்சு
அவள் நொந்து கொண்டாள் தன் விதியை எண்ணி
அவளைக் கண்டதும் சிலர் முகம் சுழித்தன.
அவளைப் பார்த்து ஒரு சிலர் வசப்  பாட்டு பாடினார்கள்
அவளின் காதில் படும் படியே
அவள் கலங்கும் விழி நீரை இறங்க விடாத வாறு செல்கிறாள்
அவளின் இருண்ட வாழ்வை எண்ணி வருந்தினாள் 
அவள் இத்தனை அவமானங்களையும் தாங்கியபடி
அந்த திருமண இல்லத்தில் ஏன் நுழைந்தாள்
அவள் ஒரு பூ வியாபாரி   இத்தனை பேர் சென்று வரும்
ஒரு சிறப்பான இடத்தில்
அவளை மட்டும் ஏன் ஏழனமாக பார்த்தார்கள்
அவள் வாழ்வு இழந்த ஒரு கைம்பெண் 
வெள்ளை உடை   தரித்த. ஏழைப் பெண் .

    

Monday 26 December 2016

நழுவிடும் இதழாய்

நழுவிடும் இதழாய்  -நீ .

அதைக் கழுவிடும் உமிழ்நீராய் -நான்.

கொவ்வை இதழ் அழகி -நீ.

அதில் மெதுவாக தடவிக் கொடுக்கும் சாயம் -நான்.

குயிலாக அழகு இதழால் இசைப்பது -நீ.

அதில் செந்தமிழ்  சொல்லாகப் பறப்பது  -நான்

அழகு இதழால் அசிங்கமாகத் திட்டித் தீர்ப்பது -நீ .

அதையும் கேட்ட படியே பார்த்து ரசிப்பது -நான்.

இப்படியெல்லாம் கூறி விடவே ஆசையடி .

நீயாரோ நான் யாரோ  உன் புன்னகைப் புகைப் படம்
இங்கே மாட்டியவர் யாரோ .

நழுவிடும் உன் மாங்கனி இதழ் கண்டு
புலம்புகிறது என் பருவ மனமும் நின்று.

       

Sunday 25 December 2016

சுனாமி

உலகையே உழுக்கிப் போட்டு.
உணர்வை உணர விட்டு
உள்ளத்தில் சாதி மத வேற்றுமையை உதற. விட்டு.
ஒன்றாக இணைந்து ஓலமிட  விட்டு .

உப்புக்கடல் ஊருக்குள் ஊர்ந்து வந்து முத்தமிட்டு.
உறக்கத்தில் இருந்த மொட்டு.
உறக்கம் தொலைத்து ஏக்கத்துடன்
அமர்ந்த மனிதர்களையும் தொட்டு.

உருட்டிப் புரட்டிய வாறு அணைத்துக் கொண்டு.
உலகையே விழி நீருக்குள் தள்ளி விட்டு
உள்ளத்தில் தாங்க முடியாத வாறு வலியைக் கிள்ளி விட்டு.
உக்கிரத்தை அடைக்கிக் கொண்டு
ஆண்டு தோறும் நிழலாட விட்டதே அந்த சோக வெட்டு.

அந்த நாள் இன்றைய இருண்ட நாள்
சுனாமி  என்னும் பெயர் ஒன்றை அறிந்த நாள்.
புன்னகையை அகில நாடும் மறந்த நினைவு நாள் 
குடிசைகளோடு கோபுரமும் இடிந்த நாள்
பசுமையோடு பசுக்களும் மாண்ட நாள்
மனிதம் உள்ள மனிதர்களால் மறக்கப்பாடாத நாள்.

அன் நாளில் உயிர் நீத்த உறவுகள்
அனைவரின் ஆத்மா சாந்தியடைய
அருள் புரியட்டும் இறைவன்    :-(

   

Saturday 24 December 2016

அம்மாவுக்காக

புரட்சிகரமான உரை நிகழ்த்தி
பல உறுதி மொழி தான் உரைத்து
இரக்கமான சொற்களை சிறக்கப் பேசும்
ஈரமான இதழ்கள் வறட்சியோடு
அமைதியானது  கண்டு என்
இரு விழி நீர் கசிந்தது -இன்று. !

புரட்சித் தலைவரின் பாதையைத் தொடர்ந்து
புரட்சித் தலைவி என்று பெயரும் பெற்று
புரட்சி கரமான ஆட்சி நடத்தி
புரட்சித் தலைவரின் அருகே  நிரந்தர
உறக்கத்துக்குத் தயாராகி
மக்கள் திரளை இமை திறந்து
நோக்காத வாறு மூடிய விழி கண்டு
கலங்கி நின்றேன் நான் -இன்று. !

பல கோரிக்கைளுக்கு செவி சாய்த்து
பெண்களுக்கு முன் உரிமை அளித்து
சீண்டுவோருக்கும் சாந்தமாக பதில் கொடுத்து
சாதித்த சாதனைப் பெண் அசையாத வாறு
பெட்டிக்குள் அடைக்களம் ஆனது கண்டு
கலங்கி நின்றேன் நான் -இன்று. !

செல்வியாக வாழ்ந்து
சொல்லில் அடங்காச் சாதனை புரிந்து
சிறைவாசமும் தான் கண்டு
அஞ்சா நெஞ்சம் கொண்டு
வலம் வந்த பெண் சிங்கம் ஒன்று
பஞ்சபூதங்களின் ஒன்றான
பூமாதேவியோடு அக்கியமனது -இன்று. !

வஞ்சம் கொண்டோரும்
அஞ்சலி செலுத்திச் செல்ல.
லட்சம் விழி நீர் பாதை கழுவ
வங்கக் கடல் ஓசையோடு
மக்கள் குரல் ஓசை கலக்க
கன்னித் தாய் அவர்
இறுதி வளி இவை என்று குழிக்குள் நுழையும்
காட்சி  கண்டு கலங்கியது நெஞ்சம் -இன்று.  !

மக்கள் திலகம்  அவர்களின் மரணத்துக்குப் பின்
மக்கள் கூட்டம் கூடி வளி அனுப்பிய ஒரே மரணம்
புரட்சித்  தலைவியின் இறுதிப் பயணம் 
எந்த வாகனத்தில் இருந்து
இழுத்து எறியப்பட்டாரோ
அதே வாகன ஊர்வலம்
அரசு மரியாதையோடு இதுக்கு மேல்
தேவையோ அம்மா உன் சாதனையை கூறவே
என்று துயரத்திலும் பிரமித்தேன் நான் -இன்று.

சென்றதோ  உன் உயிர் தான்
மறைக்கப்பட்டது உமது உடல் அவை தான்
மறையாது அழியாது உன் பெயர் அம்மா
அன்றும் இன்றும் என்றும் என்று
உச்சரித்தது என் நாவும் மெதுவாக. -இன்று.!

  

ஏங்கி விட்டேன்

அவன் பிரிந்து போனானே.
என்னை வெறுத்துப் போனானே.
நான் பேசும் போது ஒதிங்கிப் போனானே. (அவன்)

என் வார்த்தைக்கு மொழி இல்லை.
என் கவிதைக்கு இசை இல்லை.
என் மகிழ்ச்சிக்கு உறவில்லை.
என் உடலிலே உயிர் இல்லை  .(அவன்)

என் உள்ளம் முழுதும் அறிந்தா பிரிந்தான்?
என் உறவை மறந்தா பிரிந்தான். 
இல்லை பிரிவை விரிம்பியே
பிரிந்தானா. (அவன்)

என் மூச்சுக்கு காற்று இல்லை.
என் பேச்சுக்கு நாவில்லை.
என் விழிக்கோ காட்சி இல்லை 
என் கண் நீரையும் நிறுத்தவில்லை. (அவன்)

என் இளமைக்கு துணையானான்.
என் துன்பம்  தீர்க்கும் மருந்தானான்.
என் துயரம்  எழுதும் காகிதம் ஆனான் என்
இன்ப வெள்ளத்தின் கடலானான். (அவன்)

என்னை தூக்கம் தழுவவில்லை. 
என் ஏக்கம் நீங்க வில்லை.
என் பக்கம் அவன் இல்லை.
வெட்கமும் தோணவில்லை. (அவன்)

அவன் எண்ணத்தில் பித்தானேன்.
அவன் பாதத்துக்கோ மலராவேன் 
அவன் கரத்துக்கு தடியாவேன்
அவனின் துணைக்கு துணையாவேன். (அவன்)

என் வானுக்கு ஒளி இல்லை.
என் விளக்குக்குத்  திரி இல்லை.
என் செவிக்கோ ஒலி இல்லை.
என் இதழில் புன்னகை இல்லை. (அவன்)

அவன் தூறலின் சாரல் என்பேன்.
அவன் காற்றில் தென்றல் என்பேன்
அவன் நடையோ விண் இடி என்பேன்.
அவன் குணத்தில் யானை என்பேன் (அவன்)

முடிவும் தெரியவில்லை.
பிரிவும் புரியவில்லை.
துடிப்பும் குறையவில்லை.
தவிப்பும் முடியவில்லை.
விருப்பும் அழியவில்லை.
நினைவும் மாறவில்லை. (அவன்)

   

உளறல்

உன்னை நான் நேசிக்கவில்லை.
சுவாசிக்கின்றேன்.

உன்னை நான் வாசிக்க வில்லை
யாசிக்கின்றேன்.

கொஞ்சமும் யோசிக்கவில்லை
நெஞ்சில் வைத்து பூசிக்கின்றேன்.

மாசி படாத பாசம் நான் போட வில்லை
வெளிவேள்சம்

மண்ணில் புதையும் முன்
உணக்காகக் காத்திருக்கு என் தேகம்.

முடிவு காணத்தான்  முடியவில்லையே
நீ இருப்பதோ வேறு தேசம்.

         

உச்சத்தில் வேதனை

தேன் அற்ற மலரும்
பால் வடியாத பூக்களும்
சாமி பாதத்துக்கு தடை
என்று என்றோ ஒரு நாள்
சைவ சமய நூலில்
படித்ததாக ஞாபகம். .....////

ஆனால் இன்று சிவன்
கழுத்திலே வாடாமல்லி 
பூவால் ஆன மாலை
காட்சி கொடுக்கின்றது
கட்சிதமாக. .....////

இறைவனுக்கு
வகுக்கப்பட்ட தடையே
நீக்கம் கண்டு விட்டது
மனிதனுக்கு மனிதனால்
போடப்பட்ட விலங்கு
இன்னும் இறுக்கமாகவே
உள்ளது ...../////

வாழ்வு இழந்தவள் 
பிறந்த குழந்தையை
முதலில்  தூக்கத் தடை
பிறந்த நாள் வாழ்த்து
கூறத்  தடை
மங்கள காரியங்களில்
முன் இருக்கத் தடை....////

இன்னும் மீளவில்லையே
இந்த அறியமையின்
மிச்சம் இதனாலே
வேதனை தான்  உச்சம் ,....///

   

நடிக்கிறேன்

அரிதாரம்  பூசாத வேசம்
ஆனாலும் நன்றாகவே
நடிக்கின்றேன் .....///

என் உள்ளே ஆயிரம்
கவலைகளை சுமக்கின்றேன் 
உலக வாழ்க்கையிலே
நானும் மனிதனாக
நடை போடுகின்றேன் .....////

தடைகளை தாண்ட
துடிக்கின்றேன்
இருந்தும் பல
இடையூறுகளை
சந்திக்கின்றேன்  .....////

அனை உடைத்தே
பெருக்கெடுக்கும்
விழி நீரை துடைத்து
விட்டு நடைபோடுகின்றேன் ....///

உண்மை அன்பை
தேடி ஓடுகின்றேன் 
ஏமாற்றத்தைப்  பரிசாக
அள்ளி விடுகின்றேன்  .......////

வலிகள் தாங்கி தாங்கி
இதயம்  வலிமை பெற்று
விட்டதாக உணர்கின்றேன்
உள்ளம் வலு இழந்து
வருவதையும் புரிந்து
கொள்கின்றேன்  .......///////

இறைவனுக்கு என்ன
கோபமோ  வகுத்து
விடுகின்றான்
ஒரு தண்டனையை
பிறக்கும் போதே  ...../////

இந்த பொல்லாத
உலகில் தினம்  தினம்
தண்டனையை அனுபவித்த
படியே  வாழ வேண்டும்
என்பதற்காகவே
வாழ்கின்றேன் ........////

உயிர் துறக்கவும் துணிவு
வேண்டும் துணிவோ கரம்
கொடுக்கவில்லை
அதனாலே  உயிரை சுமந்து
வாழ்கின்றேன் .......////

துணை இன்றி
நான் இல்லை
எப்போதும் துணையாக
கை கொடுக்கின்றது துயரம் ....../////

இன்பம் எள் அளவு
துன்பம் கடலை அளவு 
விதையிட்டு பார்த்தால்
மனதிலே நிறைந்து
விட்டது  துன்பம்
இடம் இல்லை இன்பத்துக்கு ......////

இருந்தும் இன்பத்தையும்
பயிர் இட்டதாக எண்ணி
சிரிக்கின்றேன் ..........//////

போலி நடை முறைக்கும்
படிப்புக்கும் பணத்துக்கும்
முன்னே அன்புக்கு
வேலையில்லை ....../////

அன்பை தவிர எண்ணிடம்
வேறு இல்லை 
போலியான குணம்
என்னிடம் அமரவில்லை......./////

  தலை  முடியின்  கீழே இறைவன்
போட்டான் ஒரு கோலம் 
அதை அவனே அழித்தால்
உண்டு அழிக்கும் வழி
என்னிடம்  இல்லை .....//////

அதற்காகவே நான்
கொடுக்கின்றேன்
கண்ணீர் துளிகளை பரிசாக
தினம் தோறும் ,......////

காரணம் இல்லாமல்
வெறுக்கப்பட்டேன்
ஆசை வார்த்தை இன்றி
ஒதுக்கப் பட்டேன் .../

அவன் வாங்க மறுத்தாலும்
நான் கொடுத்துக் கொண்டே தான்
இருக்கின்றேன் நிறுத்தாமலே.
வாழ்த்துக்களை மனதினிலே
பூக்களாய் தூவியபடி ஓசை
இல்லாமலே .../////

           

முத்தம் கொடு முத்தெடுக்க

பித்தம் கொண்டு
தலையில் அடித்தால்
சித்தம்  கலங்கி விடும்.
இரத்தமும் வாந்தியுடன்
தரையை தழுவி விடும்...!

உன்னை அணைத்தால்
சித்தம்  தெளிந்து விடும்.
முத்தம்   பிறந்து  விடும்.
சத்தம்  அடங்கி  விடும்.
மோகம்  எழுந்து  விடும்..!

தாகம் தனிந்து  விடும்.
இடை வெளி குறைந்து விடும்.
இளமை புரிந்து விடும்.
இனிமை கிடைத்து விடும்..!

இதயத்தின் துடிப்பு அதிகரித்து விடும்.
கொடுக்கல் வாங்கல் நடந்து விடும்.
கொண்டையில் பூ நிலைத்து விடும்.
நெற்றியில் திலகம் சிரித்து விடும்.
ஆகையால் நித்தம் நீ முத்தம்
கொடு நாம் முத்தெடுக்க.....!

        

கட்டிப்பிடித்து காயங்கள் ஆற்றுகிறாய்

முகத்தைப் பார்த்ததில்லை.
அகத்தைத் தொட்டதில்லை.
நெருங்கிப் படுத்ததில்லை.
இருந்தும் என் நெஞ்சம்
உன்னை மறக்கவில்லை.

தினமும் நாளு வார்த்தை உரைத்ததில்லை.
நானோ நாணத்தோடு உணவு அளித்ததில்லை.
இருந்தும் என் உள்ளம் உன்னை
நினைக்க மறந்ததில்லை.

உன் பக்கம் நான் வந்ததில்லை
என் வெட்கம் நீ கண்டதில்லை.
இருந்தும் உன் மார்வு சொர்க்கம்
என்று நான் எண்ணாத நாள் இல்லை.

வாக்கு விவாதம் வந்ததில்லை.
தக்கம் புரிந்ததில்லை
வார்த்தைகள் அதிகம் பரிமாறியதில்லை.
இருந்தும் உன் குரல் ஓசை கேட்க
நான் துடிக்காத நாள் இல்லை.

புரியாத பிரியம் பெரும் தொல்லை.
புரியவைக்கவும் முடியவில்லை.
இறுதி வரை உன் உறவு நிலை
என்பது உறுதியில்லை.
இருந்தும் என்னால் என் இருதயத்தை
விட்டு உன்னை அகற்ற இயலவில்லை  .

நானோ இன்று  இயலாமையின் எல்லை
ஆனால் ஒன்று மட்டும் உண்மை 
கனவில் வந்து நீ கட்டிப் பிடித்து  காயங்கள்
ஆற்றுகிறாய்  ......!

           

புரட்சித் தலைவி

கன்னித்தாய் காலமானாள்.
கன்னித்தமிழிலே காவியமானாள்.
தமிழரின் கண்ணீரிலே ஓவியமானாள்.
தமிழகத்தின் அன்னை அவள்... !

வங்கக்கடலின் தாலாட்டிலே உறங்குகிறாள்.
தங்கத்தமிழிலே முழக்கமிட்ட மங்கை அவள்.
எழும்பாமலே உறக்கத்தில் கலந்து விட்டாள்.
மக்களை ஆறாத் துயரத்தில் தள்ளி விட்டாள்..!

இரண்டு விரல்களையும் மடக்கி விட்டாள்.
இருண்ட குழிக்குள் இறங்கி விட்டாள்.
மக்களுக்காக நான் எனக்காக மக்கள்  என்றவள்.
மக்கள் கதறும் ஓசைக்கு செவி சாய்க்காது படுத்து விட்டாள்...!

கற்பம் தாங்காமலே அன்னையானாள்.
நாட்டைக் கட்டிக்காக்கும் தலைவியானாள்.
இல்லற வாழ்விலே துறவியானாள்.
வெண்ணிற ஆடைக்கு விதிவிலக்கானாள் ...!

மண்ணறை இறங்கி கல்லறை கொண்டாள்.
அதற்கு முன் எண்ணற்ற சாதனை பூண்டாள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவள்.
அடக்க ஓங்கும் கரங்களையும் வென்றாள். ,!

சாதித்தவை  போதும் என்று சரிந்து விட்டாள் .
சாகவரம் பெற்ற புகழ்பெற்று மறைந்துவிட்டாள்.
வாய் விட்டு அழுதும் மார்பு தட்டி அழுதும் அவள்
மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற மறுத்து விட்டாள் .

காட்சிப்பிளம்பாக நிலைத்து விட்டாள்
புரட்சித் தலைவி   அவள்
  ஓய்வு தேவைஎன்று ஓய்ந்து விட்டது
ஏழை மழலைகளைத் தழுவும்  கரங்கள் .

           

உன்னில் கலந்து உன்னுள் உறைகிறேன்

உண்மை அன்போடு
உள்ளத்தில் வைத்து காக்கவே
ஒரு நல்ல உள்ளம் தேடினேன்.

உயர்வான மனிதன் நீ என்று
உண்மையில் உள்ளம் பூரித்தேன்.

உதாரணக் கருப் பொருளாய்
உன்னையே முன் நிறுத்துவேன்.

உயிர் அனுக்களோடு அனுக்களாக
உனை நெருக்கமாக்கினேன்.

உனைப்  பிரித்துப் பார்க்க முடியாமலே
உணர்ச்சி நரம்பால்
உணவு எலும்போடு இறுக்கி கட்டினேன்.

உன் அன்பை பிறர் பங்கிட
நினைத்தாலே
பதறுகிறேன் கொஞ்சம் நானே.

உணக்கென்று உரியவர் இருப்பது
அறிந்தால் உயிர் திறந்து
விடும் நெஞ்சம் தானே.

உனக்கும் எனக்கும் பூர்வீக பந்தமோ
உனை விட்டுப் பிரியாமலே
தொடரச் சொல்லுது மனமது தானே. 

காதல் கடிதங்கள்
உன்னைத் தொடரலாம்
காதல் கவிதைகள்
உனக்காக சிலர் தொடுக்கலாம்
காதல் அழைப்புக்கள்
உன்னைத் தொல்லை கொடுக்கலாம்

இத்தனையும் தள்ளி   வை
என் விதியால்  பலியான விழிக்கு
அன்பு மொழி கொடுக்கவே.

உன்னில் கலந்து  உன்னுள்
உறைகின்றேன் தினமும்
உள்ளத்தால் கற்பனையில் நானே.