Saturday, 24 December 2016

உன்னில் கலந்து உன்னுள் உறைகிறேன்

உண்மை அன்போடு
உள்ளத்தில் வைத்து காக்கவே
ஒரு நல்ல உள்ளம் தேடினேன்.

உயர்வான மனிதன் நீ என்று
உண்மையில் உள்ளம் பூரித்தேன்.

உதாரணக் கருப் பொருளாய்
உன்னையே முன் நிறுத்துவேன்.

உயிர் அனுக்களோடு அனுக்களாக
உனை நெருக்கமாக்கினேன்.

உனைப்  பிரித்துப் பார்க்க முடியாமலே
உணர்ச்சி நரம்பால்
உணவு எலும்போடு இறுக்கி கட்டினேன்.

உன் அன்பை பிறர் பங்கிட
நினைத்தாலே
பதறுகிறேன் கொஞ்சம் நானே.

உணக்கென்று உரியவர் இருப்பது
அறிந்தால் உயிர் திறந்து
விடும் நெஞ்சம் தானே.

உனக்கும் எனக்கும் பூர்வீக பந்தமோ
உனை விட்டுப் பிரியாமலே
தொடரச் சொல்லுது மனமது தானே. 

காதல் கடிதங்கள்
உன்னைத் தொடரலாம்
காதல் கவிதைகள்
உனக்காக சிலர் தொடுக்கலாம்
காதல் அழைப்புக்கள்
உன்னைத் தொல்லை கொடுக்கலாம்

இத்தனையும் தள்ளி   வை
என் விதியால்  பலியான விழிக்கு
அன்பு மொழி கொடுக்கவே.

உன்னில் கலந்து  உன்னுள்
உறைகின்றேன் தினமும்
உள்ளத்தால் கற்பனையில் நானே.

                     

No comments:

Post a Comment