Sunday 16 April 2023

கொண்டை முடியைச் 
சுருட்டி வைத்து 
கூடவே முந்தானையையும் 
சேர்த்து வைத்து /
கொண்டு வந்த 
சுமையை இறக்கி விட்டு 
கண்ணாடி பார்க்கையிலே ./

முகம் பார்த்த கண்ணாடி
முழுதாகக் காட்டும் முன்னே
மனம் வாடிப் போனதையா 
முகம் மலர மறுத்ததையா. 

காரணம் தான் என்ன 
காதலனே நீ சொன்ன 
வார்த்தையிலே 
நெஞ்சத்தில் சுமையேறிப் 
போனதனாலே.

பாசம் தேடிய நெஞ்சம்
பஞ்சாகப் பறக்கையிலே 
காதல் நேசம் காட்டி 
அணைத்தவனே  
நீயே தீயிட்டு எரித்தாயே
வாய் விட்டு அழ முடியலையே
நோய் தொட்டுக் கொண்டத்தையா.

ஏமாற்றம் கண்ட உள்ளம் 
வாடுதையா 
ஏதேதோ சொல்லிப் 
புலம்புதையா 
கோபமோ அனலாய்க் 
கொதிக்குதையா 
அதிலே என் மூச்சும் எரிந்து 
துடிக்குதையா .

இத்தனையும் இணைந்து 
என் ஜீபனை வதைக்குதையா.
கொந்தளிக்கும் ஆதங்கமோ -உன்னை 
வார்த்தையாலே உதைக்குதையா 
என்ன செய்து என்ன பலன் 
ஏமாற்றுத் தேரிலே 
நீ என்னை ஏற்றிய பின்னே.

ஆர் எஸ் கலா

Thursday 26 January 2023

அழகே உன்னை 
ஆராதிக்கிறேன்.
*******************
விண்ணில் இருந்து 
விழுந்த தாரகையா /
இல்லை மண்ணில் 
மலர்ந்த தாமரையா /

என எண்ணி நித்தமும் 
வியக்கிறேன் /
சத்தியமாக என்னுள்ளே 
காதல் விதைக்கிறேன் /

இனியாள் உன்னையே 
எப்பொழுதும்  நினைக்கிறேன் /
கனியான இதழ்களைக் 
கனவிலே சுவைக்கிறேன் /

பார்வையாலே அணைக்கிறேன்
விழிகளாலே அழைக்கிறேன் /
எந்நாளும் பார்த்துப் பார்த்து
ரசிக்கிறேன் /

துணைவனாக இணைந்திடவே 
இராப்பகலாய்த் தவிக்கிறேன் /  
அழகே உள்ளத்தால் 
உன்னை ஆராதிக்கிறேன்/

ஆர் எஸ் கலா

Sunday 8 January 2023

#எனது  #கரை #சேராத. #படகு 
#நூல்  #தொகுப்பில்  #இருந்து #ஓர்  #கவிதை

கவிதை தானே என்று எழுதி விட்டு 
அதை மீண்டும் படிக்கும் போது  
உண்மையிலே வலித்தது இதயம் 
ஏன்?நானும் ஓர் மீனவத் 
தொழிலாளியின் மகள்   .:-(
**********************************---

#கரை  #சேராத. #படகு 
................................

நீந்திடத்  துணிவில்லை .
நீச்சலும் தெரியவில்லை .
உப்பு நீரிலே குதித்து.
மீன் அள்ளிட வழியுமில்லை.

பிள்ளையின் பசி தீர்க்க 
உடலுக்கு உடமை வாங்க 
ஒட்டிய வயிரோடு 
உயிரைக் கையில் பிடித்தவாறு.  
பச்சை  மரம் வெட்டி 
படகு ஓட்டிச் 
சென்றான்  மீனவனொருவன் .

---------------------------------------------------
நடு சாமத்திலே 
சாமக் கோழி கூவையிலே .
துடுப்போடும் துடிப்போடும் .
துட்டுக்காகவே துணை இல்லாத்
தூரம்  விரைந்தே படகு ஓட்டினான் .
ஓதியே மனதுக்குத் தைரியமூட்டினான்  .

வட்டிக் கடனை நினைவில் தட்டி விட்டு. 
வாடிய முகத்தோடு படகின் மேல் அமர்ந்து   .
கூடிய வரையிலும் கூடையை நிரப்பிட.
மீனைத் தேடியே அலைந்து வலை விரித்தான்  .

கூட்டங்கள் வந்து 
ஒன்று சேரும் வேளையிலே .
கரையை வந்தடைய முயன்று நின்றான்  .
காலமும் நேரமும் கழுத்தை 
அறுத்தால்ப்  போல் .
புயல் காற்று  புரட்டிப் போட்டது படகை .
வங்கக் கடல்  துன்பக்கடலானது. 
அவனது விழிகழும் இணைந்தே  
உப்பு நீர்  வடித்தது  .
------------------------------------------------------------

தத்தழித்துக் கொண்டு.
இருக்கும் படகில் 
அமர்ந்திருக்கும் காலத்திலே.
சின்னச் சட்டை கேட்டு .
செல்ல முத்தம்  கொடுத்து .
கை அசைத்து வழி அனுப்பிய 
மகளின் முகம் .
கண்ணீருக்குள் காட்சி  கொடுத்தது .

இருமிக் கொண்டு இருந்த 
அன்னையின் நினைவும் .
கிழிசல் சேலையோடு. 
மலர்ந்த முகத்தோடும் .
வழி அனுப்பிய 
மனைவியின் நினைவும் .
வந்து வந்து மோதி. 
அலை போல் எழுந்து அமர்ந்தது .
அவ்வேளையிலும் அவன் ஆழ் மனதில்.   
--------------------------------------------------------

காலநிலை மாற்றம் கண்டு.
வெள்ளப் பெருக்கு எடுக்கும்  
கண்ணீரோடு. 
தவிக்குது  துடிக்குது  பதட்டமாய் 
ஆழியை நோக்குது அந்த ஜீவன் .
சமுத்திரம்  நுழைந்த கணவனின் 
நிலை அறியாதமையால் .
துடித்த படியே கரையோரம்.
வந்து விட்டாள் மனைவி.

வங்கக்கடலை நோக்குகிறாள் .
எங்கும் விழியை விட்டுத் தேடுகிறாள் .
சென்ற படகு திரும்பவில்லை . 
வந்தடைய வேண்டிய நேரமும். 
நகர்ந்து விட்டது .

வியர்வைத் 
துளிகளோடு சேர்ந்து.
காத்திருக்காமலே.
நெற்றித்திலகமும் கரைந்து விட்டது.
 உச்சு வெயிலும் 
அவளைச் சுட்டெரிக்கின்றது.
இரக்கமின்றி 
உடலைக் கருவாடு போடுகின்றது.
---------------------------------------------------------------

பொருட்படுத்தாமல் 
துடித்து நிக்கின்றாள்.
தாலி கட்டியவன் 
வரவு காணாமையால்  
கலங்கி நிக்கின்றாள்.

ஆசை மச்சானை சுமந்து. 
அசைந்து அசைந்து போன  படகு .
அசையாது  எங்கு போனதோ. 
என்ன ஆனதோ ?
ஆழ்கடல் தண்ணியிலே.

பதட்டத்தோடு.
தலையில் அடிக்கின்றாள்.
அல்லாடுது மனம் .
நில்லாமல் தள்ளாடுது பாதம் .
---------------------------------------------------

ஆம் அணைத்து விட்டாள் .
படகை கடல் மாதா .
முடிந்தது படகு ஓட்டம் .
பிரிந்தது மீனவன் மூச்சு .
கரை உண்டு 
கரையினிலே 
காத்திருக்கும் விழியுண்டு .
கடமைகளும் பல உண்டு. 
படகில் பயணித்தவனுக்கு.

என்ன இருந்து 
என்ன பயன்  உண்டு.
கரை சேராத படகு
கொடுத்தது முடிவு இல்லாக் 
கண்ணீர்த் துளிகளைக்கொண்டு  .
ஏழை மீனவனின்  துணைவிக்கு.

உள்ளமும் புண்ணாகியது.
உறவும் உதவாமல் போனது
இரை தேடிச் சென்றவனை .
இன்னும் இழுத்து வரவில்லை. 
கரை சேரா படகு.
மகிழ்வான வாழ்க்கைப் பாதை. 
முள்ளாகிப் போனது 
அன்றோடு அவளுக்கு. 
-----------------------------------------------------

ஆர் எஸ் கலா 
 (அவசியம்  கருத்தை எதிர்பார்க்கின்றேன் நட்புக்களே  :-))
கண்ணாலே பேசிப் 
பேசி கொல்லாதே./
*********************
ஊமை மொழிகளை 
உரைத்து முடிக்கின்றது/
கருமையிட்ட 
உமது இரு விழிகள்/

மேலும் கீழுமாய்
உருட்டி மிரட்டி /
ஓசையின்றி என்னை 
வீழ்த்தியது அவைகள்/

புன்னகை சிந்திடும் 
உன்னிதழ்களிலேஇன்னும்/
இன்சொல் ஒன்று 
உதிரலையே எதனாலே/

சொற்களைக் கொண்டு 
திணித்திடு காதினிலே/
வாழ்க்கை பூராவும் 
மகிழ்ந்திருப்பேன்அதனாலே/

வார்த்தைகளை மென்றும் 
விழுங்கியும்என்னாலும் /
கண்ணாலே 
பேசிப் பேசி கொல்லாதே/

ஆர் எஸ் கலா