Thursday 31 December 2015

வருக வருக புது வருடமே

பல சாதனைகள்
பல சோதனைகள்
பல இழப்புக்கள்
பல  சந்திப்புக்கள்
பல இன்பங்கள்
பல துன்பங்கள்
பல உறவுகளின் பிரிவுகள்.
பல உறவின் அறிமுகங்கள்.
பல நோய்கள்
பல  ஆயிரம் செலவுகள்
பல   ஆயிரம் வரவுகள்
பலபேருடன் மோதல்கள்.
இவைகளையும் கொடுத்து .....////

ஆகாய விமானத்தை
ஆட்டிக் குழுக்கி போட்டு
உடைத்து  கூடி அமர்ந்த
மக்களின் கூக் குரலின் ஒசையை
கேட்டு மகிழ்ந்து .....////

இறுதி மூச்சுக் காற்றை
இழுத்துப் பிடித்து ஆண்டு
தோறும் மறக்காத வாறு
படம் பிடித்துக்காட்டியும் ..../////

கெங்கை நீரை அழைத்து
மனித வாழ்வோடு விளையாடி
தங்கி உண்ண உறங்க வழியில்லா
வண்ணம்  வெள்ளத்தை உயரவிட்டு
இயற்கையின் சீற்றத்தை மனிதனுக்கு
பாடமாக புகட்டி விட்டும்......./////

எண்ணில் அடங்கா விபத்துக்களையும்
சொல்லி முடிக்க இயலாவண்ணம் அதிர்ச்சி
களையும்   தாங்க முடியா வேதனையையும்.
வேண்டும் வரம் கேட்டவனின் வேண்டு
கோலையும்  நிறைவேற்றி விட்டும் ...///

ஆளவு இல்லாத அன்பின் வலிகளையும்
போலி உறவுகளின் பிரிவுகளையும்
புரியவைத்து விட்டும்......////

பல இலட்சியவாதிகளையும்
சாதனையாளர்களையும் தன்னோடு
எடுத்துக்கொண்டு  நிரந்தர விடுமுறை
பெற்று புறப்படத் தயாராகி விட்டது
பழய வருடம்  ......//////

வாழ்த்தி வழி அனுப்பி விட்டு
நம்மோடு இணைந்து வாழ வருகை தரும்
புத்தாண்டை வணங்கி போற்றி
வரவேற்போம்........//////

ஏங்கும் ஏழைகளின் வாழ்வுக்கு ஓங்கும்
வண்ணம் வாழ்வு கொடு என்று கட்டளை
ஒன்றை  முன் வைப்போம்.......////

அன்பு உறவுகள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்.

   

Wednesday 30 December 2015

ஏன் இந்த ஏமாற்றம்

உன் அழகில் நான்
மயங்க வில்லை.
உன் அறிவை கண்டு
மயங்கினேன் .,....///

உன் இளமை கண்டு
மயங்கவில்லை.
உன் கடமை உணர்வு
கண்டு மயங்கினேன் .,..///

உன் படிப்பில் பணத்தில்
மயங்க வில்லை.
உன் பண்பாடு அன்பு
கண்டு மயங்கினேன் ....////

நான் உன் உருவம் கண்டு
மயங்கவில்லை.
உன் உள்ளம் அறிந்து
மயங்கினேன் ...../////

உண்மையில் உன்னை
விட்டுப் பிரியும் எண்ணம்
எனக்கில்லை விட்டுக்
கொடுக்கும் மனமும் இல்லை.

பட்டாம்பூச்சி  போல் என்
எண்ணம் பறக்கிறது
சொல்ல முடியா வார்த்தை
எத்தனையோ உள்ளே
இருக்கிறது ......////

சொன்னாலும்
ஏற்றுக் கொள்ளும்
மனம் உன்னிடம் இல்லை
சொல்லி மறுத்து விட்டால்
தாங்கிக்கொள்ளும்
மனம் என்னிடம் இல்லை.

விடை அறியாமலே
ஆண்டும் முடிகிறது
விடுதலை கிடைக்காமலே
விழி நீரும் தொடர்கிறது ....////

   

துடிப்பு

மின்சார விளக்கில்
வந்து விழுந்து எரியும்
விட்டில்  பூச்சி போல்.

உன்னை சார்ந்த நினைவிலே
விழுந்து துடிக்கிறது
என் நினைவலைகள்.

 

என் சுவாசமே

என் சுவாசக்காற்றுக்கு
உள்ளே சென்றதும் ஒரே
வியற்பு அங்கே மூச்சாக
இருப்பது நீ தான் .....////

காற்று  இல்லை
உலாவிய காற்று
வெளியேறியதும்
முறைக்கிறது
என்னை  என் சுவாசம் நீ
என்பதால் .....///

    

கொடுமை

கண்ணை  
கொடுத்து 
ஒளியை 
பறிப்பது  கொடுமை.

வாய்யை 
கொடுத்து
  மொழியை 
பறிப்பது  கொடுமை.

உறவை 
கொடுத்து 
உரிமையை 
பறிப்பது  கொடுமை.

நட்பை  காட்டி 
தடை 
விதிப்பது  கொடுமை  .

பாசம்  காட்டி 
பாதியில் 
பறிப்பது  கொடுமை.

பேச விட்டு 
முடிக்கும்  முன்
மீதியை 
நிறுத்துவது  கொடுமை.

ஆசை  காட்டி 
மோசம்
செய்வது  கொடுமை.

ஆதரவு  காட்டி 
அகம்
முறைப்பதுகொடுமை.

இனிமையான
வார்த்தை 
தடிப்பாக.
மாறினால்  கொடுமை.

இன்பம் 
காட்டி  துன்பம் 
கொடுப்பது  கொடுமை.

இரவு  பகல் 
பாராது  இதய.
உறவாடல் 
செய்து  இடைவெளி 
கொடுப்பது  கொடுமை.

நினைவு 
இழந்து  நடை 
பிணம்  போல்  '
நான்  இருப்பது  கொடுமை.

இந்தனையும்
  புரிந்து  விட்டு
நீ  எட்டி  நின்று
வேடிக்கை 
பார்த்து  சிரிக்கின்றாயே
அதுதான் 
கொடுமையிலும்
கொடுமையெடா   கொடுமை .

                            

காதல்

நீ தினமும் நீர் அருந்தும்
கிண்ணத்தை திருடி விட்டேன்
உன் இதழ் தினமும் அதை
முத்தம்  கொடுப்பதால்
மொத்தமாய் நானே வெறும்
எண்ணத்தில்

Tuesday 29 December 2015

மச்சக்காரி

சிங்கப்பூர்  சிங்காரி.

சிக்கனமாக உடை போட்ட ஒய்யாரி.

கிட்டக் கிட்ட வந்து   அவனை
தன் வசமாக்கிய கைகாரி.

சிரித்துப் பேசி சிலிப்பி நடந்து
அவனை  வளைத்துப் போட்ட காந்தாரி.

கம கமக்கும் திரவியம்  பூசி
உரசி உரசி பேசி  வசியம்
செய்து விட்டாள் அந்த மாயக்காரி.

மைனருக்கு துணையாக
வந்து அரண்மனையிலே
ஆட்சி புரியும்  கை இல்லா
ரவுக்கைக் காரி.

சொத்துக்கு ஆசைப்பட்டு
சத்தம்  இல்லாமல் சேர்த்துப்புட்டாள்
அந்த சிங்கை நாட்டு ஆத்தாக்காரி.

          

பசுமை படர்

பசுமை படர் காட்டைப் பார்த்தீரா
பசுக்கள் மேய்வதையும் பார்த்தீரா
புதுங்கி வந்த புலியைக் கண்டு மிரண்டீரா

கள்ளிக்காட்டுக்கு வந்தீரோ
வள்ளி என்னைக் கண்டீரோ
புள்ளி மான் ஓடும் வேளையிலே நின்றீரோ
தள்ளிப் போய் அம்பு எடுத்து குறி வைத்தீரோ

அது ஒரு கனாக்காலம்
அவை காணாமல் போனது
இக் காலம்

அன்று நிரை நிரையாக நின்று
மரம் துளிர் விட்டது
இன்று திரை போட்ட வீடு
இருந்து அழுப்பபூட்டுது

வற்றாத நீருக்கு வழி வகுக்கும்
தொற்று நோயையும் தீர்த்து வைக்கும்
காற்றை தூய்மையாக்கி கொடுக்கும்
நாற்று நட்டவனை வாழவைக்கும்

மரக்கிளையில் கூடு கட்டும்
பறவைக் கூட்டம்
மரணத்துக்குப்பின்னே சுமக்க
குச்சு தேடுவதோ மனிதர் கூட்டம்

இயற்கையை அழிக்கிறான்
செயற்கையை வளர்க்கிறான்
காடு காக்கப்பட வேண்டும்
நாடு போற்றப்பட வேண்டும்

Monday 28 December 2015

லிமரைகூ

(1) தை மாதம் பூக்கள் சிரிக்கும்
சுத்த வரும் வண்டுகள்
தொடர் விடு முறை எடுக்கும்.

(2)
சிரிக்கும் மலர்களை சுட்டு எரிக்க
வரும் கதிரவன்  கரு
மேகத்தின் போர்வையிலே எழும்பாதுறங்க .

(3)அழகு மலர்கள் அத்தனையும் வாடாமலே
இல்லத்தில் புத்துணர்ச்சியை பரப்ப
புது மகிழ்ச்சியில் உள்ளம் இன்பத்திலே.

வானம் தொடர்ந்து நீர் இறைக்க
ஏழை எளியோரின் குடிசைகள்
நீருடன் சேர்ந்து வெள்ளத்திலே மிதக்க.

2உதவி புரியும் வண்ணம் அரசியிடம்
கட்டாயக் கோரிக்கை வைக்க
துணிவு இன்னும் பிறக்கவேயில்லை மக்களிடம்

சிந்தனை அவசியமட கவிஞனே

திறமையானவன் நீ என்றாலும் 
அறிவாளி என்றாலும் 
பல படைப்புக்கள் கொடுத்த
கவிஞன் என்றாலும் 
விருதுகளை குவித்த
கலைஞன் என்றாலும்  .....////

புகழின் உச்சியில் அமர்ந்த
அறிஞன் என்றாலும் 
பொறுமை காக்காவிட்டால் 
சிறுமையாகி விடும்
உன் புகழ் அங்கே......./////

கிரீடம் ஏறினாலும்
உன் தலைதான்
தாங்குகின்றது
தலைக்கணம்
கூடினாலும்
உன் தலைதான்
தாங்குகின்றது ......////

இரண்டுக்கும்
வேறுபாடு உண்டு 
இரண்டில் ஒன்று
வந்து அமர்வது
உன்தலையில்
உன் நன் நடத்தையின்
பயன் கண்டு.....////

என்னை விட சிறந்தவன் இல்லை 
என்னை விட அறிந்தவன் இல்லை 
என பிறரை துஷ்ரமாக நினைத்து
தூக்கி  ஏறிந்தால்  இறுதியில்
நீ அனாதை .....////

தன் அடக்கம் நாவு அடக்கம்
கற்று நல்லோர் வல்லோர் அறிந்து
உண்மை உள்ளத்தைப் புரிந்து 
நன்மைக்கு துணை நின்று
தீமைக்கு தலை அசைத்து ......////

மோதல்  புலம்பல் என கவிதையாலே
சாடாது விடுத்து  உள்ளதை உள்ள
படி கூறி உன்னதமான வாழ்வை
விரும்பிப் பார்  அன்று
கிடைக்கும் நிம்மதிதான்
நிலையான பரிசு ......./////

பகை என்று விட்டு ஒதிங்கி விட்டு
பட்டத்துக்காக கால் தொட்டால் 
கவிஞன் என்ற பெயர் உன்னிடம்
தங்கிடுமோ  கெட்ட நாக்குகள்
இதைக் காட்டி சொல்லிக்
கொட்டாமல் விட்டு விடுமோ...../////

Sunday 27 December 2015

மாறி விட்டான் மச்சான்

மாந் தோப்புக்குள்ளே
மஞ்சள்  குருவி  ஒன்று
அங்கும் இங்கும் தத்தி
தத்தி  நடக்கையிலே
என்னை அழைத்து  சுட்டிக்
காட்டி  குறும்பு பண்ணி என்
கன்னம்  கிள்ளி  அன்பு முத்தம்
பதிச்ச மச்சான் .......////

பூந் தோட்டத்திலே  பூ  எடுக்கும்
வேளையிலே  பூவரசம் பூவோடு
என்னிரெண்டு கரங்களையும்
இறுக்கப் பற்றி இழுக்கையிலே
தோழி அவள் குறுக்க வந்து
தடுக்கையிலே  சிறு முறைப்போடு
நகர்ந்த மச்சான் ....../////

சல சல என்று ஓடும் ஓடையிலே
குமரிக்கூட்டங்கள் ஒன்றாக
குளிக்கையிலே  கூடவே வந்த
என்னைக் குறி வைத்து நீரின்
உள்ளே மறைந்து இருந்து
இழுத்து அணைத்து நீச்சல்
கற்றுக்கோ என்று அடம்
பிடித்த மச்சான் .......//////

அம்மன் ஆலயத்திலே ஐயனார்
சிலை அருகே  பொய்யான
பத்தியோடு  கண்ணை மூடுவது
போல் பாவனை காட்டிய வாறே
பாதையிலே ஓரப்பார்வை  வீசிய
வண்ணம்  எனக்காகக் காத்திருந்த
மச்சான் ........///////

சந்தைக்கு நான் போகையிலே
தன் தந்தைக்கு தெரியாமல்
மந்தையோடு மந்தையாக வண்டி
ஏறி வந்த மச்சான் ....../////

இன்று சந்தி சந்தியாக
காத்திருக்கின்றேன்  உன்
சங்கதி சொல்ல ஆளையே
காணோம் மச்சான் ..../////

கஞ்சி குடிக்கும் காலத்திலே
இந்த வஞ்சியை சுத்தி சுத்தி
வந்த மச்சான் ...../////

சிறுகச்  சிறுக. பணத்தைப் பார்த்த நீ
கையிலே சொத்து சேர்ந்ததும்
கண்டுக்காமலே போனது
ஏனோ மச்சான் ......////

கொஞ்ச நாளாக நீ மாறி
விட்டாயே மச்சான்  இந்த
வஞ்சி மனம்  பஞ்சாய் எரிகிறது
மச்சான் .......//////

உன் பட்டணத்தின் வாழ்வின்
மாற்றம்  கண்டு  பட்டிக்காட்டு
பொண்ணு உள்ளம் தீ சுட்ட
புண்ணாக போனது மச்சான் ....///

      

பாப்பாவும் தாத்தாவும்


               (1)
பாப்பாவுக்கு தாத்தா
கொடுத்த சட்டையின்
மதிப்பு சிறு தொகைதான்
பாப்பா போடும் கும்மாளத்தையும்
வட்டமிட்டு சுத்துவதையும் பார்த்தால்
மதிப்பு அதிகம் தான் அந்தச்  சட்டைக்கு
            (2)
தாத்தா கொடுத்த மிட்டாய்
வெறும் ஐந்து ரூபாய் தான்
அதை பத்திரப் படுத்தி
வைத்துக் கொண்டு பாப்பா
எட்டி எட்டி பார்த்து உண்ணும்
அழகைப் பார்த்தால்  ஏதோ
பட்டணத்து புது வரவு மிட்டாய்
பாப்பா கையில் சிக்கியது போல்
தோணுது .....///
         (3)
   தாத்தாவின்  கைத் தடியை
எடுத்துக் கொண்டு பாப்பா
குடு குடு கிழவிபோல் வித்தை
காட்டி நக்காலாக. நடக்கையிலே
தாத்தா பொக்கை வாயைத் திறந்து
சிரித்தார் சத்தமாகவே  தாத்தா
வாயைப் பார்த்த பாப்பா  தடியைக்
கீழே போட்டு துள்ளிக்குதித்தாள்
தாத்தாவுக்கு பல்லு முளைக்கவில்லை
என்று பாப்பா சொல்லிச் சிரித்தாள்
      இ.சாந்தா

Saturday 26 December 2015

பாப்பாவும் கரடியும்

அரும்பு மீசைக் கார மாமா
வந்து குரும்பு பண்ணையிலே
கோவம் கொண்ட பாப்பா
குட்டியும் தட்டியும்  விடுகிறாள்
கையில் ஒட்டியே இருக்கும்
குட்டிக் கரடி  பொம்மையை
கோபம்  தீரவே  பாப்பா கரடி
பொம்மையை எடுத்து கெஞ்சலும்
கொஞ்சலுமாய் கொஞ்சி கொஞ்சி
பேசுகிறாள் கரடி பொம்மையுடனே
சிரிக்க மறந்த கரடிபொம்மை
முறைத்துப்பார்கின்றது பாப்பாவை
உடனே .....///

வாழ்த்தும் முறைகள்

நலம் பெற வாழ்த்துங்கள்.

நல் மனதோடு வாழ்த்துங்கள் .

நாளும் பெறவே வாழ்த்துங்கள்.

ஆழ் மனதில் வார்த்தை எடுத்து
நாவால் வாழ்த்துங்கள்.

சுகமாக வாழ வாழ்த்துங்கள்.

தூய சொற் கொண்டு வாழ்த்துங்கள்.

செந்தமிழால் வாழ்த்துங்கள்.

சிறப்புரையால் வாழ்த்துங்கள்.

சிறப்பாக வாழ்த்துங்கள்.

சினம்  எழாத வாறு வாழ்த்துங்கள்.

புன் முறுவலுடன் வாழ்த்துங்கள். 

இன் முகத்துடன் வாழ்த்துங்கள்.

இன்றுப்போல் என்றும் நிலையான
செல்வச்செழிப்புடன் வாழ்க வளர்க
பல்லாண்டு என்று வாழ்த்துங்கள்

முழுமையான வாழ்த்தாய் நிறைவு
செய்யுங்கள்..

      

ஏங்கும் ஏந்திழை


காதல் இது காதல் இது
கன்னி கொண்ட காதல் இது
காத்திருக்கச் சொல்லி விட்டு
போன மன்னன் எங்கே...............\

தூது சென்ற வெண் புறாவும்
துணையோடு வந்து நிற்க
தூது விட்ட பெண் மனமோ
ஏக்கம் கொண்டது இங்கே..\

கதவையும் திறந்து வைத்து
கன்னி மனசையும் திறந்து
வைத்தேன்............\

பொன்னின் செல்வன்
போனது எங்கோ
பொன்னான உன் பாதம்
படுவது எப்போ..........\

பட்டுச் சேலை கட்டி
கசங்காமல் காத்திருக்கேன்
பட்டு மெத்தையிட்டு
களையாமல் காத்திருக்கேன்..\

பாச வலை விரித்து
என்னைப் பிடித்தவரே
பாசாங்கான பாசம்
காட்டி என்னைப் பதற
விட்டவரே............\

நான்கு பக்கமும் சுவர்
அடைப்பு நடுவிலே நான்
அமர்ந்திருக்க
நாலு பக்கமும் சுத்துதையா
என் மூச்சுக்காற்று உன்
பேச்சைத் தேடி...........\

மஞ்சள் வெயிலும்
மாலையாகிப் போனதையா
மஞ்சள் முகமும் வாட்டம்
காட்டுதையா...............\

நீதான்  தஞ்சம் என்று
என் நெஞ்சில் உன்
நினைவை விதைத்தேன்
நீதான் என் உலகம்
என்று கனவில் மிதந்தேன்..\

போகாதே  போகாதே என்
உள்ளத்தை கொல்லாதே
உணர்வை  வதைக்காதே
போதும்  போதும்  உன்
விளையாட்டு என் எதிரே
வந்து நில்லு என் உயிரே.....\

      

இது நிஜமடா

உன் பேச்சு தான்  என் மூச்சு.

என்று மூச்சுக்கு மூச்சு.

முன்னூறு  தடவை சொல்லியும்.

நீ  பேச்சை நிறுத்தி விட்டாயே அன்பே.

என் உடலிலே இனி நிலைத்திடுமோ???  உயிர்.

       

Friday 25 December 2015

என் மன மோகனி


குட்டைக் கல்லை
உடைத்துப் போட்ட
பாதையா  நீ..........\
பளிங்கு கல்லில்
எழுந்து நிற்கும்
மாளிகையா நீ......\
நான் தொட்டுப்புட்டா
வெட்கம் காட்டும்
தொட்டாசிணுங்கியா நீ.....\
வீறுகொண்டு
எரித்து விடும்
கண்ணகியா நீ.......\
நான் ஜாடை
காட்டயிலே
வாட்டம் கொண்டு
ஓட்டம் எடுக்கும்
பெண்ணா நீ.........\
இல்லை காட்டமாய்
நோக்கி வாட்டா
கையில் எடுக்கும்
பெண்ணா நீ............\
கெண்டைச் சேலை
உடுத்தி  நடக்கையிலே
கண்ட இடமெல்லாம்
என் கண் மேயும்
வேலையிலே  கொள்ளை
அடிப்பாயோ நீ...............\
என்னைக் கொல்ல
நினைப்பாயோடி நீ......\
பல சரக்கு கடையிலே
பாவாடை தாவணியுடன்
பழம் தொட்டு நீ எடுக்கும்
வேளையிலே..........................\
நான் கிட்ட வந்து
ரசம் குடிப்பது போல்
உன்னை பார்க்கையிலே
ரசிக்க இடம்
கொடுப்பாயோடி நீ........\
போடா ராஸ்கோலே
என்று கண்ணத்தில்
இரண்டு
கொடுப்பாயோடி  நீ.......\
முட்டி தெரிய சட்டை
போட்டு நீ தெத்தி
அடிக்கையிலே
நான் ஒட்டி நின்று
வியக்கையிலே........\
குட்டிப் பொண்ணு
வந்து காட்டிக்
கொடுத்தால்
நாணத்துடன்
புன்னகை
சிந்துவாயோ நீ........\
ஊரைக் கூட்டி
என்னை நடுவில்
நிறுத்தி சந்தி
சிரிக்க
வைப்பாயோடி நீ.......\
நீ அம்மி அரைக்கையிலே
என் நெஞ்சை அரைக்கிறாய்
நீ கும்மி அடிக்கையிலே
என் உள்ளத்தைப்
பறிக்கிறாய்  மாவு
இடிக்கையிலே
என் இதய ஒலியை
தூண்டியே விட்டு
தள்ளியே நிற்கிறாய்
ஞாயமா இது  என்
அழகான ராட்சசியே.....\
நீ கோலமிட்டு
கோலமிட்டு
உன் வீட்டை
அழகு பார்க்கிறாய்
அதை நோட்டமிட்டு
நோட்டமிட்டு நான்
கவி கிறுக்கியே
கசக்கி எறிந்த
காகிதத்தால்  என்
வீடு அலங்கோலமாகப்
போனதடி...........\
நீ  எரி மலையோ
பனிமலையோ
மல்லிகையோ
தாமரையோ
எவளோ எமன் மகளோ
என்னவளோ நான்
அறியேன் உன்னை
எனனவளாகவே
நான் அடைவேனடி ரதியே.......\

அது ஒரு கொடுமை

விருந்துக்கு முந்தினேன்
அருசுவை உணவோடு
பாணமும் சுவைத்தேன்.

போருக்கும்  முந்தினேன்
பல படை வீர்களை
மண்ணோடு விழ்த்தினேன்

உன்னைக் கண்ட நொடி
காதலில் விழுந்தேன்
மாண்டேனடி கிளியே........\

பெண்ணே தலை நிமிர்ந்து நில்


பெண் தலை
குனிந்தால்
அது நாணம்
அதை நானும்
வரவேற்கின்றேன்.

தலை கவிழ்ந்தால்
அது அடிமை இதை
நான் வன்மையாகக்
கண்டிக்கின்றேன்.

பெண்ணே தலை
நிமிர்ந்து நில்
சாட்டை போல்
சுழன்று நில்.
சரித்திரம் புரிய
துணிந்து   நில்
சாத்தான்களை
வீழ்த்தி நில்.

உலகம் போற்றும்
தூற்றும் இரண்டும்
உமக்குத் தேவை
என்று நினைத்து
சேர்த்தெடுத்துக் கொள்.

வெற்றிப் படியில்
படிப்படியாக ஏறவே
பிடி தடி ஒன்று தேவை
இவை இரண்டில்
ஒன்று உன்னை
ஊக்கப் படுத்தியே
தூக்கி நிறுத்தும்
சிகரம் கொண்டு.

வீரத்தமிழ் மகள்
என்று பெயர்
பெற்றது நம் இனம்
இதை நீயும் எண்ணிப்
பார் தினம்.

கன்னியான நீ
கண் கலங்க வேண்டும்
கலங்கடிக்க வரும்
கயவனின் கரங்களை
எடுத்த பின்னே.

புழு உருவாகின்ற
உடலை சுவைத்து விட்டால்
புனிதமா உன் உள்ளத்தை
புழுங்கடிக்காதே.

புயலாக எழுந்து
பூநாகமாய் தீண்டி விடு
தீக்கு இரையாவதை
விடுத்து தீமை
புரிவோரை உன்
தீனியாக்கி விடு.

சதி காரனை
சாகடித்து விடு
துரோகியை
துரத்தி விடு
இனி வரும் காலத்தில்
எழும் பெண் என்னும்
விதை விருட்சமாக
மண்ணைப் புதமாக்கி
விடு.

ஆண் ஆதிக்கத்துக்கு
இடம் கொடுக்காது
அன்புக்கு கரம் கொடுத்து
அகங்காரம்  ஆதங்கம்
இரண்டுக்கும் விடை
கொடுத்து தமிழையும்
போற்றி தமிழ்
அண்ணையையும்
மதித்து வீரத்தில்
புதையுண்டு வீரத்
தமிழ் மகளாய் உன்
பாரத்தை நீயே இறக்கி
வைத்து தலை நிமிர்ந்து
நில் பெண்ணே

இன்னும் ஏன் மௌனம்

கை பேசியை கையாளும் ஆண் மகனே
கொஞ்சம் காதல் மொழி பேசு கண்ணா
புது உறவாய் வரவு தந்த சின்னவனே
மறுப்பு மொழி போடலாமோ மன்னவனே.

காதலின் நிறம் காட்ட வந்தாய்
இருண்ட இதய வாசல் திறந்து வைத்தாய்
இறந்த காதலுக்கு உயிர் கொடுத்தாய்
இதயம் இடம் மாற தடை போடுகிறாய்.

இமையம் போல் உனை நினைத்தேன்
இமை போல் காப்பாய் என்று மதித்தேன்
உன்னால் உலகத்தை மறந்தேன்
ஊட்டிக் குளிர்  போல் உள்ளம்  மகிழ்ந்தேன்.

அன்பே நீ அருகில் இருந்தால்
ஆவாரம் பூவாய் நான் மகிழ்வேன்
சிட்டாய் சிறகு விரிப்பேன்
வட்டமிட்டு நான் பறப்பேன்.

ஆனால் இன்று

சோகத்தில் ஆழ்ந்து விட்டேன்
இந்துக் கோயில் எல்லாம் வரம் கேட்டேன்
வங்கக் கடல் போல் கண்ணீர் அள்ளுகின்றேன்
இறுதியில் இறப்புக்கும் நாள் குறித்து விட்டேன்

எல்லாம் காதல் மாயம்

நிலவு எப்போது உறங்கும்
நட்சத்திரம் எப்போது மயங்கும்
மேகம் எப்போது ஓய்வு எடுக்கும்
வீசும் தென்றல் எப்போது திசை
மாறும் என்று என்னிடம் கேளு.

ஏன் என்றால் உன் எண்ணத்தை
தட்டி அதனுடன் விளையாடியவாறு
உறங்காமல் விழித்திருப்பவள்
நான் அல்லவா.

கூவும் குயில் எந்த நேரத்தில் இசை
அமைக்கத் தொடங்கும்
திருட்டுக் காகம் எப்போது கூடு விட்டுக்கிளம்பும்
போர்த்திய மொட்டு எப்போது போர்வை திறக்கும்
தரையில் உலாவும் தவளை மீண்டும் குளத்தில்
எப்போது துள்ளும் என்று என்னைக் கேளு.

ஏன் என்னால் உன்னால் தூக்கம் தொலைத்து
தனிமையில் உலாவுவதும் நான் அல்லவா
என் தனிமைக்குத் துணை இந்த இயற்கை
அல்லவா.

உன் எண்ணம் என்னை எழுப்ப
உன் மோகம் என்னை உசுப்ப
உன்மேல்  நான் கொண்ட காதலோ
ஓயாது துடிக்க
நானே பாதம் போகின்ற போக்கிலே நடக்க
காணாத காட்சி எல்லாம் கண்டும் மனம்
இழந்தே இருக்க.

கனவில் வந்து  வரம் தரும் உன்
முகமும் வந்து செல்ல மறுப்பதும்
ஏனோ என்னை மயக்கி விட்ட
மன்னவரே.

மமதை கொண்டா

இறைவன் படைப்பில்
ஒவ்வொன்றும் உலகிற்கு
நன்மை தீமை புரிகின்றது
என்பதில் ஐயம் இல்லை...!!!

ஆனால் மனிதனைப் போல்
தீமை புரிகின்றவை எவையும்
இல்லை என்பதிலும்
ஐயம் இல்லை...!!

சுய நலத்திலும் சுய நலம்
சுரங்கமாக அவன் மனதில்..!!

தான் மட்டும் நலமாக
வாழ அடுத்தவன் தலையை
எடுத்தால்  தான் முடியும்
என்றால் தயங்காமல்
தூக்குவான் அருவாளை..!!!

ஒன்றை ஒன்று அழித்து
உயிர் வாழ்வதில் முதல்
இடத்தில் இருப்பது
மனித இனமே...!!!

கூட்டைக் கட்டும்
பறவையின் மரத்தை
வெட்டி வீட்டைக் கட்டுகிறான்
கூடி அழும் பறவையைத் தூக்கி
குப்பையிலே போடுகிறான்..!!!

துடித்து இறக்கும் போது
வேடிக்கையாக பிடித்து
விளையாடுகிறான்...!!!

குருவிக் குடும்பத்தை
அழித்து தன் குடும்பத்தை
பெருக்க மறைவிடம்
உருவாக்கின்றான்..!!!

அனைத்துமே உயிர் தான்
என்று வசனம் பேசுகிறான்
அதற்கான மதிப்பைக் கொடுக்க
மறுக்கின்றான்...!!!

வேர் விட்டு நிலம் காத்து
கிளை விட்டு நிழல் கொடுத்து
முகம் மலரப் பூத்து நிக்கும்
மரத்தை அடியோடு வெட்டிச்
சாய்கின்றான்  அடுத்த சில
தினங்களிலே மழை கேட்டு
அழுகின்றான்...!!!

விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையிலே தான் சிறைப் பட்ட
வாழ்க்கை வாழ்வதை மறந்து
தலைக்கனம் கொண்டு
நடக்கின்றான்  நடக்கும் போதே
பூமி நடுங்கினால் பாதியில்
முடிகின்றது மனிதன் நாடகம்..!!

உயந்த வானம் உக்கிரம்
கொண்டால் வாரிச் சுருட்டி
அழித்து விடும் மரம் அழித்த
நிலத்தில் எழுந்த மனைகளை..!!!

ஆழ் கடலையே எல்லைபோட்டு
பிரிக்கின்றான் அமைதியான அலை
ஆவேசமானால் அனைத்தையும்
தன் வசமாக்கி விடும்..!!!

இவை அத்தனையும் அறிந்தும்
புரிந்தும் தெரிந்தும் மனிதன்
தொடர்ந்து கொடுக்கின்றான் பிற
உயிருக்குத் தொல்லையை..!!

இறுதியில் அவன் ஒரு பிடிசாம்பல்
இல்லை  ஆறடி மண் இவைதான்
அவன் நிலை என்பதை மறந்து
வாழ்கின்றான் மனம் மரத்துப் போன
மானிட ஜென்மம்.=!!!!