இலக்கை நோக்கி செல் 
துணிவே துணை என்று 
உறுதியோடு செல் 
தொட. முடியும் தூரமா 
வெற்றி என்று நின்று 
தூரத்தை கணக்கிடாதவாறு செல் .
நீ கணக்கிட தொடங்கி விட்டால்
 மனம் சளிப்பு கொடுத்து விடும் 
என்ற மந்திரச் சொல்லை 
மறவாது மனதில் நிறுத்திச் செல் .
 சொல் ஒன்று செயல் ஒன்று
 என இருக்காது சொல்வதை 
செய்யும் மனப்பக்குவத்தை 
வளர்த்துச் செல்.
பிறர் வெற்றியை தட்டிப் பறிக்காதே
 பிறர் குரல் ஒலிக்கையிலே 
ஒட்டுக் கேட்காதே என்னால் 
எவையும் சாதிக்க முடியும் 
என்ற எண்ணத்தை கை விடாதே 
எலும்பு இல்லா நாக்கால் 
பலர் விடும் பொறாமை 
அம்பைக் கண்டு  போட்டு 
உடைத்த சட்டி போல் உன் 
முயற்சினை கை நழுவும்
நிலமைக்கு கொண்டு 
சென்று விடாதே 
உன்னால் முடிடியும் என்று 
நீ உனக்குள்ளே உட்சாகம் ஊட்டு 
 நீ எடுத்த முயற்சியில் இறுதி வரை 
சென்று வெற்றி பெற வேண்டும் 
என்று உன் உள் உணர்வை தூங்க 
விடாது தட்டி எழுப்பு. 
தெளிவான சிந்தனையுடன்
 நேர் வழி செல் வெற்றிப் பொறி 
உன் எதிரிலே. தட்டும்.
 
  
No comments:
Post a Comment