கடு கடுப்பான முகம் 
ஆனால் அவள் 
கொடுமைக்காரியில்லை. ...../////
கடுகு அளவும் அவள் 
நெஞ்சில் இன்பம் இல்லை  ......////
நிலைத்து விட்டது
 நெடு நாளாக துன்பம் 
அவளின் இதழ்களோ 
பட. பட என்று பேசும் 
ஆனால்  அவள் 
பத்திரகாளி இல்லை .......///////
 பட படக்கும் மனதை 
கட்டுப்படுத்தத் தெரியாத 
அப்பாவி  சிடு சிடு என்றே 
இருப்பாள் அவள் 
சிடுமூஞ்சி இல்லை  ......./////
வார்த்தைகளைக் கொட்டித் 
தீர்க்கும் நாக்கை அவள் 
வளர்த்து விட்டாள்  
கர்வம் கொஞ்சம் 
தூக்கல் இதனாலே 
அவளுக்குப் பெரும் தாக்கல்  ......////
தானும் பெரும் மகான் 
என்று மார்பு தட்டுவதாலே
  மாற்று வழி தேடி 
நகருகின்றன அவளின் 
உறவுகள் எல்லாம்  ......./////
வேற்று மதக் காரனை 
அவள் ஆழ் மனதளவும் 
மதிப்பது இல்லை 
அது ஏன் என்று இன்னும் 
நான் அறியாத பிள்ளை.......////
 
  
No comments:
Post a Comment