Sunday 13 December 2015

இயற்கையும் எதிரியே

வானம் அழுகிறது
அது உலகிக்குப் புரிகிறது.


சோர்ந்த பயிரும் எழுந்து
நிமிர்ந்து வளர்கிறது.


வறண்ட குழிகளிலும்
நீர் நிறைகிறது.


வரட்சி கொஞ்சம் குறைகிறது.
 இவை வானம் அளவோடு
அழுதமையால் வந்த
ஆரோக்கிய வாழ்வு.


அளவு இன்றி வானம்
 கொட்டியது நீரை.


மனித வாழ்வை புரட்டிப் போட்டது.
நீர் குறைந்த கிணறும்
நிறைம்பி மணலோடு
மறைந்தது  நீரினாலே.


 கிணறு  இருந்த தடம் மறந்த
தந்தை தவறி விழுந்தார் அதனுள்ளே.


  தூக்கி காக்க குரல் கொடுத்தாலும்
 கூட்டம் கூடும் நிலை இல்லை.


நிலையான புயல் மழையாலே.
கதறி அழும் குடும்பத்தார்
குரல் ஒலியும்.
அண்டை வீட்டாரின் காதில்
விழ வழி இல்லை.


பூட்ட வைத்து விட்டது
சுழல் காற்று அவர்களின்
கதவை உள்ளே.


தந்தை மூச்சு நிறுத்தும்
வேளையோ நான் அறியேன்.


கொஞ்சம் அதிகமாகவே
வெளியானது நீர் குமிழிகள்
அந்த கிணற்றிப் பகுதியிலே.


அதைப் பார்த்த அன்னை
கதறி  அழுகிறார்  ஐயோ என.


வானம் அழுவதை தவறாது
ஒலி அலை அறிவிக்கின்றது.
காலம் கடந்து.


இந்த உழவர் குடும்பம்
பதறி அழுவதை உறவும்
அறியவில்லை ஊரும்
அறியவில்லை இந்த
நிமிடம்  வரை.


மழை நீரோடு கண்ணீரும்
சேர்ந்து ஓடுது  உடலை
தடவியபடியே.


இயற்கை செடி கொடியெல்லாம்
சிரிக்கின்றது மழை மேகம்  கண்டு.


மனிதனின் மனம் கலங்குகின்றது
கரு முகிலின் தாக்கம் கண்டு.


தன் கணவன்  உயிர் பறந்து
இருக்கும் என்று உறுதி செய்த தாய்
அவரின் உடலை மீட்டு எடுக்கும்
வரையிலாவது  நிறுத்துவாயா
நீ கொட்டும் நீரை என ஏந்துகின்றாள்
 கரம் விண்ணை நோக்கி நின்று.



         

No comments:

Post a Comment