தேன் அற்ற மலரும் 
பால் வடியாத பூக்களும் 
சாமி பாதத்துக்கு தடை 
என்று என்றோ ஒரு நாள் 
சைவ சமய நூலில் 
படித்ததாக ஞாபகம். .....////
ஆனால் இன்று சிவன் 
கழுத்திலே வாடாமல்லி  
பூவால் ஆன மாலை
 காட்சி கொடுக்கின்றது 
கட்சிதமாக. .....////
இறைவனுக்கு 
வகுக்கப்பட்ட தடையே 
நீக்கம் கண்டு விட்டது 
மனிதனுக்கு மனிதனால்
 போடப்பட்ட விலங்கு 
இன்னும் இறுக்கமாகவே
 உள்ளது ...../////
வாழ்வு இழந்தவள் 
 பிறந்த குழந்தையை
 முதலில்  தூக்கக் கூடாது 
பிறந்த நாள் வாழ்த்து 
கூறக் கூடாது 
மங்கள காரியங்களில் 
முன் இருக்கக் கூடாது ....////
இன்னும் மீளவில்லையே 
இந்த அறியமையின் 
மிச்சம் இதனாலே 
வேதனை தான்  உச்சம் ,....///
 
  
No comments:
Post a Comment