பட்டு சேலை கட்டி கசங்காமல்  
வீதியிலே பவனி வரவும் 
விழாக்களிலே சென்று 
அமரவும் ஆசை .,/
தேனோடு கொத்து மல்லிகை  
மொட்டு எடுத்து சரம் கோர்த்து 
பிண்ணிய சடையை களைத்து 
விட்டு மலர் உதிராத வண்ணம் 
முடியில் சூடிக்கொண்டு தொட்டுத் 
தொட்டு பார்க்க ஆசை  .../
கை நிறையவே வளையல் போட்டு 
தூக்கி தூக்கி குளுக்கி விளையாட 
ஆசை  ..../
முத்து நிறைந்த கொலுசு போட்டு 
மாடிப் படியினிலே துள்ளி 
ஓட ஆசை  .../
தங்கத்தை தள்ளி வைத்து விட்டு 
கலர் கலர் சிமிக்கி போட்டு 
தலையை அசைத்து ரசிக்க ஆசை ....//
 மஞ்சள் இட்ட முகத்திலே
 வட்டப் பொட்டு வைத்து அம்மன் 
ஆலயத்தை சுற்றி வர ஆசை .....///
 ஆசை ஆசை இத்தனையும்
 என் ஆசை  ....////
முடித்தாள் தோழி சொல்லி 
ஓசை இல்லாமலே ....////
கேட்டவனுக்கோ பதில் உரைக்கவும.
முடியவில்லை இமை இமைக்கவும் 
இயலவில்லை  விழித்து நின்றான் 
தன்னை மறந்து  நின்றான் .....////
மீண்டும்   தோழியே கூறினாள் 
இது ச்சும்மா ஜாலியடா என்று 
முடித்து விட்டாள்  ....///
அவனோ சிந்திக்கத்  தொடங்கி விட்டான் 
இவை  சராசரி பெண்ணின் ஆசைதான்  
நிறைவேற்ற வழி இல்லையே 
அவள் ஒரு கைம்பெண்  .....////
இத்தனைக்கும் செவி கொடுத்தவன்
 விழி உறங்குவதற்கு ஏது வழி  ...?
தவிக்கும் மனதுடன் தாங்க 
முடியாத்  துயரத்துடன்  தோல்வியை 
ஒப்புக் கொண்டான்  நோ டில் என 
விடை பெற்றுக்கொண்டான் .,..//
 மனம் நிறைந்த வலியுடன் 
அதை  மறைத்து சிரிப்பைக் காட்டி 
நடை போட்டான் ஆழ் மனதிலே 
விடை தேட தொடங்கி விட்டான் .....///
 
  
No comments:
Post a Comment