பசி வந்தால் பத்தும் பறந்து விடும்.
தீ சுட்ட வலியும் மறந்து விடும். 
மீண்டும் திருட கை நீண்டு விடும் ....///
உழைத்து உண்ண 
மனம் விரும்பி  விடும்.
உழைப்பு இல்லாத பட்சத்தில் 
பிச்சை எடுக்க மனம் 
துணிந்து விடும்  ....///
கஞ்சன் வீட்டு வாசலிலும் 
குரல் ஒலித்திடும்.
கொஞ்சம் சாதம் கிடைத்தாலும் 
மனம் மகிழ்ந்திடும்...///
எச்சிப் பாத்திரம் தேய்த்து 
விரல் தேய்ந்து விடும்.
வச்சி உண்ணும் உணவு 
எச்சானாலும் சுவையாக 
தெரிந்து விடும் ....///
ஒரு சாண் வயிற்றுக்காக
ஓராயிரம் பேரின் அழுக்கையும் 
சுத்தம் செய்ய நேர்ந்திடும். 
அகோரப் பசி கொலை கொள்ளை 
வரை கொண்டு நிறுத்திடும்..///
கொடுமைகள் பல புரிந்திடும்.
பசி போக்க தன் மானத்தையும்
இழந்திடும் .....///
அடிமை தனமான 
வாழ்வையும் ஏற்றிடும்.
  கொடுக்காதவன் வாழ்வில்
தீயையும் மூட்டிடும் ......//////
பொருள் விற்று 
நிலம் விற்று 
இல்லம் விற்று 
உடை விற்று
தன் உடம்பையும்  
விற்கும் நிலமைக்கு 
கொண்டு விடும்...///
( இந்த வயிற்றுப் பசி)
 
  
No comments:
Post a Comment