உன் வீட்டின் அருகாமை
 கடல் அலையினிலே 
என் கால்கள் விளையாட 
நாள் வருமா ...????
 அந்த மணலிலே 
பிள்ளை போல் 
இருவரின் பாதச்
சுவடுகளையும் 
பதித்து மகிழும் 
நாள் கை கூடுமா  .....????
வந்து வந்து போகும்  
அலை உந்தன் பெயரை  
அள்ளிச் செல்லாத 
வாறு எழுதி வைத்து 
நான் ரசிக்க 
ஒரு நாள் வருமா  ....???
தொடுக்கும் 
கேள்விகெல்லாம் 
பதில் கொடுக்க. 
இன்னும் உமக்கு
துணிவு பிறக்கவில்லையா...???
 
No comments:
Post a Comment