Friday 18 December 2015

அயல் நாட்டுத் தோழி


பாட்டி தட்டி சுட்ட வட.
இது துவரம் பருப்பு வட.
ஊற வைத்து துவைத்து
எடுத்து சுட்ட வட.
அடடா பாட்டி கைப்க்குவம்.
பிறமாதம்மா பாமா.
அக்கா வேக வைத்த இட்டிலி .
உப்ப வைத்த உழுந்து மா இட்டிலி .
குட்டிக் குட்டி இட்டிலி.
தொட்டு உண்ண உண்டு சட்டினி.
காரம் கொஞ்சம் தூக்கல்.
உண்டு பார் நீயும்மா பாமா.
அத்த செய்த புட்டு.
சுத்தமான புட்டு.
இது கேவர் மா புட்டு.
எங்க தோட்டத்திலே
எடுத்து அரைத்து
செய்த புட்டு.
பட்டுப் போல் மாவிலே
துருவிய தேங்காய் போட்டு
செய்த புட்டு.
வெள்ளமும் கலந்து
உண்ண சுவை கூட்டும் புட்டு.
உடலுக்கும் ஆரோக்கியம் சுவைத்துப்பாரம்மா பாமா.
காலை சிற்றுண்டியும் தயார் கலக்கிய தேனீரும் தயார் இவைதான் தமிழர் பண்பாட்டு காலை உணவம்மா பாமா.
குடும்பத்தோடு அமர்ந்து கலந்துரையாடி உண்பதுதான் எங்கள் வீட்டு 
வழமையம்மா பாமா
வந்தமர்ந்து நீயும் உண்டு
மகிழ்ளம்மா வாம்மா பாமா....////
    


No comments:

Post a Comment