Friday 25 December 2015

என் மன மோகனி


குட்டைக் கல்லை
உடைத்துப் போட்ட
பாதையா  நீ..........\
பளிங்கு கல்லில்
எழுந்து நிற்கும்
மாளிகையா நீ......\
நான் தொட்டுப்புட்டா
வெட்கம் காட்டும்
தொட்டாசிணுங்கியா நீ.....\
வீறுகொண்டு
எரித்து விடும்
கண்ணகியா நீ.......\
நான் ஜாடை
காட்டயிலே
வாட்டம் கொண்டு
ஓட்டம் எடுக்கும்
பெண்ணா நீ.........\
இல்லை காட்டமாய்
நோக்கி வாட்டா
கையில் எடுக்கும்
பெண்ணா நீ............\
கெண்டைச் சேலை
உடுத்தி  நடக்கையிலே
கண்ட இடமெல்லாம்
என் கண் மேயும்
வேலையிலே  கொள்ளை
அடிப்பாயோ நீ...............\
என்னைக் கொல்ல
நினைப்பாயோடி நீ......\
பல சரக்கு கடையிலே
பாவாடை தாவணியுடன்
பழம் தொட்டு நீ எடுக்கும்
வேளையிலே..........................\
நான் கிட்ட வந்து
ரசம் குடிப்பது போல்
உன்னை பார்க்கையிலே
ரசிக்க இடம்
கொடுப்பாயோடி நீ........\
போடா ராஸ்கோலே
என்று கண்ணத்தில்
இரண்டு
கொடுப்பாயோடி  நீ.......\
முட்டி தெரிய சட்டை
போட்டு நீ தெத்தி
அடிக்கையிலே
நான் ஒட்டி நின்று
வியக்கையிலே........\
குட்டிப் பொண்ணு
வந்து காட்டிக்
கொடுத்தால்
நாணத்துடன்
புன்னகை
சிந்துவாயோ நீ........\
ஊரைக் கூட்டி
என்னை நடுவில்
நிறுத்தி சந்தி
சிரிக்க
வைப்பாயோடி நீ.......\
நீ அம்மி அரைக்கையிலே
என் நெஞ்சை அரைக்கிறாய்
நீ கும்மி அடிக்கையிலே
என் உள்ளத்தைப்
பறிக்கிறாய்  மாவு
இடிக்கையிலே
என் இதய ஒலியை
தூண்டியே விட்டு
தள்ளியே நிற்கிறாய்
ஞாயமா இது  என்
அழகான ராட்சசியே.....\
நீ கோலமிட்டு
கோலமிட்டு
உன் வீட்டை
அழகு பார்க்கிறாய்
அதை நோட்டமிட்டு
நோட்டமிட்டு நான்
கவி கிறுக்கியே
கசக்கி எறிந்த
காகிதத்தால்  என்
வீடு அலங்கோலமாகப்
போனதடி...........\
நீ  எரி மலையோ
பனிமலையோ
மல்லிகையோ
தாமரையோ
எவளோ எமன் மகளோ
என்னவளோ நான்
அறியேன் உன்னை
எனனவளாகவே
நான் அடைவேனடி ரதியே.......\

No comments:

Post a Comment