Friday 25 December 2015

பெண்ணே தலை நிமிர்ந்து நில்


பெண் தலை
குனிந்தால்
அது நாணம்
அதை நானும்
வரவேற்கின்றேன்.

தலை கவிழ்ந்தால்
அது அடிமை இதை
நான் வன்மையாகக்
கண்டிக்கின்றேன்.

பெண்ணே தலை
நிமிர்ந்து நில்
சாட்டை போல்
சுழன்று நில்.
சரித்திரம் புரிய
துணிந்து   நில்
சாத்தான்களை
வீழ்த்தி நில்.

உலகம் போற்றும்
தூற்றும் இரண்டும்
உமக்குத் தேவை
என்று நினைத்து
சேர்த்தெடுத்துக் கொள்.

வெற்றிப் படியில்
படிப்படியாக ஏறவே
பிடி தடி ஒன்று தேவை
இவை இரண்டில்
ஒன்று உன்னை
ஊக்கப் படுத்தியே
தூக்கி நிறுத்தும்
சிகரம் கொண்டு.

வீரத்தமிழ் மகள்
என்று பெயர்
பெற்றது நம் இனம்
இதை நீயும் எண்ணிப்
பார் தினம்.

கன்னியான நீ
கண் கலங்க வேண்டும்
கலங்கடிக்க வரும்
கயவனின் கரங்களை
எடுத்த பின்னே.

புழு உருவாகின்ற
உடலை சுவைத்து விட்டால்
புனிதமா உன் உள்ளத்தை
புழுங்கடிக்காதே.

புயலாக எழுந்து
பூநாகமாய் தீண்டி விடு
தீக்கு இரையாவதை
விடுத்து தீமை
புரிவோரை உன்
தீனியாக்கி விடு.

சதி காரனை
சாகடித்து விடு
துரோகியை
துரத்தி விடு
இனி வரும் காலத்தில்
எழும் பெண் என்னும்
விதை விருட்சமாக
மண்ணைப் புதமாக்கி
விடு.

ஆண் ஆதிக்கத்துக்கு
இடம் கொடுக்காது
அன்புக்கு கரம் கொடுத்து
அகங்காரம்  ஆதங்கம்
இரண்டுக்கும் விடை
கொடுத்து தமிழையும்
போற்றி தமிழ்
அண்ணையையும்
மதித்து வீரத்தில்
புதையுண்டு வீரத்
தமிழ் மகளாய் உன்
பாரத்தை நீயே இறக்கி
வைத்து தலை நிமிர்ந்து
நில் பெண்ணே

1 comment: