Wednesday 9 December 2015

தைரியமாக எதிர்கொள்வேன்

சிரிக்க சிரிக்க பேசுகிறான்.
திரும்பி நின்று அவதூறுகளை
 தூவுகிறான் .....///

எட்டிக் கனி பறிக்கவோ
ஏறிக் கனி பறிக்கவோ
முயற்சி  செய்வோர்
இங்கு இல்லை ...///

ஒருத்தரை வீழ்த்தி
அவர் மேல் ஏறி நின்று
கனி பறிப்போர்தான்
மிக பெருக்கம் ....///

பக்கம் பக்கமாக தன்
கவிதைகளும் பேட்டியும்
நாள் ஏட்டிலே வர வேண்டும்
என்று ஓடுகிறான் தேடுகிறான் ...../////

அதே பக்கத்தில்  வேறு
ஒரு பெயரில் பதிவு வந்தால்
பொய்யும் புரட்டும் கூறி தடுக்க
 முயலுகிறான் ...///

நான் கிராமத்தில் பூத்த தடாகம்
தான்  சேற்றில் மலர்ந்தாலும்
செந்தாமரை மகுடம் தான் .....//////

என்னை அறை குறையாக
அறிந்து விட்டு அலைபேசியிலே
 புலம்பாதே மானிடனே
என் முகத்தையும்  நீ அறிந்ததில்லை
என் அகத்தையும் எட்டியது இல்லை
நீ பின்பு எப்படியடா அறிவாய்
என் குணம்  குலம்  கோத்திரத்தை........///

என் இல்லமும் சிறுயது இல்லை
என் உள்ளமும் சிறியது இல்லை
  என் வீட்டுப் பிள்ளைகள்
முதல் பெற்ரோர் வரை கை
நாட்டும் இல்லை ....///

அரசாங்க வேலைக்கு டாட்டா
காட்டி விட்டு வாட்டா
இல்லாமல் படகு ஏறி
உழைக்கும் ஆண்தான்
என் தந்தை ...///

குணத்தில் சிறந்த குணம்
 குலத்தில் உயர்ந்த குலம்
அள்ளிக் கொடுக்கும் வள்ளல்
என்று ஊருக்குள்ளே நல்ல
பெயர் உண்டு அப்படிப்பட்ட
 தந்தைக்கு பிறந்த மூத்த புதல்வி நான் ..//

என்னை இழுக்காய் நீ
நினைக்காதே அழுக்காய்
பார்க்காதே நெருப்பாய்
எரித்துவிடுவேன் ...//

சிரிக்கச் சிரிக்கப் பேசினாலும்
சினத்துக்குள் முழுமையாக
 மூழ்கி இருப்பவள் நான் ...///

எதிர்த்து விவாதம் பண்ணவே
விரும்பும் பெண் நான்
மறை முகமாக கல் எறியவோ
 சொல் எறியவோ விரும்பாத
பரம்பரையை சேந்தவள் நான் .....///

பிறரை போட்டு புதைக்க குழி
போட என் கரம் நீளாது
பிறர் போடும் குழியிலும்
விரைவில் என் பாதம் விழாது .......////

பல தடைக் கல் தாண்டி
வந்த பாதம் உதிர்ந்த சருகை
 கண்டு அஞ்சாது  உன் முயற்சி யில்
முன்னேறு பிறர் முயற்சிக்கு
கொடுக்காதே இடையூறு ...../////

உண்மையை எரிக்கும் சத்தியை
 கடவுள் இன்னும் நெருப்புக்கு
கொடுக்க வில்லை உன்னை
எரிக்கும் சத்தியை உண்மைக்கு
கொடுத்திருக்கின்றார்
என்பதை மறவாதே ...///

விழிக்க வைத்து கண்ணில்
மண்ணை தூவாதே  உறங்க விட்டு
கழுத்தை அறுக்காதே நெருங்கி பழகி
 பலி கொடுக்காதே  பொறாமை
உள்ளத்தை வளர்த்தெடுக்காதே
பொய் உரைக்க நாவுக்கு துணிவு
கொடுக்காதே உன்னையும் ஒரு நாள்
ஏமாற்றும் அன்று  உறவையும்
இழந்து  கலங்கி இருக்காதே ...///





          

No comments:

Post a Comment