அவன் பிரிந்து போனானே.
என்னை வெறுத்துப் போனானே.
நான் பேசும் போது ஒதிங்கிப்
போனானே. (அவன்)
என் வார்த்தைக்கு
மொழி இல்லை.
என் கவிதைக்கு
இசை இல்லை.
என் மகிழ்ச்சிக்கு
உறவில்லை. என்
உடலிலே உயிர் இல்லை  .(அவன்)
என் உள்ளம் முழுதும்
அறிந்தா பிரிந்தான்?
என் உறவை மறந்தா பிரிந்தான். 
 இல்லை பிரிவை விரிம்பியே
 தான் பிரிந்தானா. (அவன்)
என் மூச்சுக்கு காற்று இல்லை.
என் பேச்சுக்கு நாவில்லை.
என் விழிக்கோ காட்சி இல்லை 
என் கண் நீரையும் நிறுத்தவில்லை. (அவன்)
என் இளமைக்கு துணையானான்.
 என் துன்பம்  தீர்க்கும் மருந்தானான்.
என் துயரம்  எழுதும் காகிதம் ஆனான் என்
இன்ப வெள்ளத்தின் கடலானான். (அவன்)
என்னை தூக்கம் தழுவவில்லை.
 என் ஏக்கம் நீங்க வில்லை.
என் பக்கம் அவன் இல்லை.
வெட்கமும் தோணவில்லை. (அவன் )
அவன் எண்ணத்தில் பித்தானேன்.
 அவன் பாதத்துக்கோ  மலராவேன்
 அவன் கரத்துக்கு தடியாவேன்
அவனின் துணைக்கு துணையாவேன். (அவன்)
என் வானுக்கு ஒளி இல்லை.
என் விளக்குக்குத் திரி இல்லை.
என் செவிக்கோ ஒலி இல்லை.
என் இதழில் புன்னகை இல்லை. (அவன்)
அவன் தூறலின் சாரல் என்பேன்.
அவன் காற்றில் தென்றல் என்பேன்
அவன் நடையோ விண் இடி என்பேன்.
அவன் குணத்தில் யானை என்பேன் (அவன்)
முடிவும் தெரியவில்லை.
பிரிவும் புரியவில்லை.
துடிப்பும் குறையவில்லை.
தவிப்பும் முடியவில்லை.
விருப்பும் அழியவில்லை.
நினைவும் மாறவில்லை. (அவன்

 
No comments:
Post a Comment