Wednesday 23 December 2015

மதி மயங்கி விட்டேன்

எங்கம்மா சொன்னாங்க
வீதிக்குச் சென்றதுமே
மங்கையர்  உடை  நடை
கண்டு மாண்டு விடும் 
உன் ஆஞ்சனேயர்
பிடிவாதம் என்று ...../////

நான் அதைக்
கண்டுக்கவேயில்லை.
வென்று விட்டது
இன்று அம்மா வாக்கு  ...////

நங்கை அவள்
நடை கண்டேன்
புத்தி இழந்தேன் 
மங்கை இவள்
இடை கண்டேன்
பத்தி இழந்தேன் ..../////

அங்கே பெண்கள்
கூட்டம் கண்டேன் 
துறவரம்  மறந்தேன்
என்  பக்கம் ஒருத்தி
வந்து நின்றாள்
பரபசத்தில் மிதந்தேன்  ....////

செக்கச் செவந்த
இதழ் கண்டேன்
கட்டுக்கடங்காத.
ஆசை கொண்டேன் ..../////

மீன் விழி கண்டேன்
மயங்கி விட்டேன் 
தேன் தமிழ் சொல்
எடுக்கத் துடங்கி விட்டேன் ....////

காதல் கவிஞனாக
மாறி விட்டேன் 
அஞ்சலை பரஞ்சோதி
தெருவிலே நடை
போடத் தொடங்கி
விட்டேன்
ஆஞ்சனேயர்
கோயில்
பாதையை மறந்து
விட்டேன்  ...........///////

பவர்
கண்களையும் குளு குளு
கன்னங்களையும்
இஞ்சி இடையையும்
காட்டி அப்பாவியான
என்னை  (பா )பாடும்
கவியாக மாத்தி
விட்டாளுங்களே
அடி பாவி பெண்களே...../////

       

No comments:

Post a Comment