Thursday 3 December 2015

பார் மேகலா ....!!!


அகண்ட வானம் இருண்ட நீலம்.
உருண்டு ஓடுது வெள்ளை மேகம்.
பார் மேகலா நீயும் வந்து நின்று
நிமிர்ந்து பார் மேகலா ....!!

அம்மா வச்ச பொட்டுப் போல
வட்ட நிலா ஒட்டி உள்ளதை
பார் மேகலா நீயும் உற்று நோக்கி
பார் மேகலா......!!!

அந்தரத்தில் விமானம் சென்று
தொந்தரவு செய்யுது என்று
ஓடி நிலா ஒழிவதை பார் மேகலா
அதை தேடி கண்டு பிடிப்போம்
வா மேகலா .....!!!!

மொட்டை மாடியில் நின்று
விமானத்தை தட்டி விடுவோம்
குட்டிக் குச்சியும் கையோடு
கொண்டுவா மேகலா
விரைந்து வா மேகலா.....!!!!

No comments:

Post a Comment