Sunday 28 April 2019

மண்ணில் உலாவும் விண்ணகத் தேவதை

மண்ணிலே பெண்ணனெ உரு எடுத்து
கன்னியென உலா வரும் தேவதையே
பெண்ணியம் போற்றும் தமிழ் மகளே
தமிழர் உடை காத்து விடு என் மகளே.../

சரிகை தாவணி உடுத்தி உச்சி பொட்டிட்டு நேர் உச்சி எடுத்து சடை போட்டு சரமிட்ட பூ சூடி நாணம் கொண்டு நீ நடக்கையிலே நாணி விடும் காணும் காளை மகன் கண் அல்லவோ.../

விண்ணுலக தேவதைகள் என்னழகடி பெண்ணே.
மண்ணில் உலாவும் உன் அழகு பெருமையடி.
கெண்டைக்கால் மறைய நீ  உடை உடுத்தி கண்ட இடம் காட்டாமல் நடை பயின்றால் இந்திரலோகத்து மந்திரிக்கும் புத்தி மங்கிப் போகுமடி பெண்ணே..../

மஞ்சள்  இட்ட முகத்துடன் நீர் சொட்டும்
கூந்தலுடன் நீ கோலம் போடையிலே
நீர் எடுக்க வரும் மேகமும் மயங்கித்தான் போகுமடி மண் உலக தேவதை உன் போல்
அழகு விண்ணில் உண்டா -?
விண்ணை விட்டு மண் ஆள வந்த
தேவதை நீயடி என் மகளே .../

என்னவென்று சொல்வேனடி

புரட்சி  வசனம் பேசி
பாச மழை பொழிவதில்
எம்.ஜி.ஆர். போல்.

இழுத்து வளைத்து தீப்
பிடிக்க முத்தம் கொடுப்பதில்
ஆரியா போல்.

கல் நெஞ்சையும் கரைய
வைத்து கண்ணீரை
வரழைப்பதில்  சிவாஜி போல்.

கறுப்புக் கட்டழகன்
ஒரு தினிசாய்
நடை போடுவதில்
சூப்பஸ்ரார் ரஜனிபோல்.

பல சாகாசங்கள்
புரிவதில்  கமலஹாசன்
போல்.

நாக்கைக்  கடித்து பின்னங்
காலால் உதைப்பதில்
விஜயக்காந்து போல்,

ஒரு தடவை முடிவு எடுத்த
பின்னர் யார்   பேச்சுக்கும்
செவி மடுக்காமல் இருப்பதில்
விஜய் போல்.

கேலி கிண்டல் பேசி
என்னம்மா கண்ணு என்று
கண் அடிப்பதில்
சத்தியராஜ் போல்.

அடுக்கு மொழி பேசி
கடுப்பேற்றுவதில்
ராஜேந்திரன்  போல்.

முத்தத்தால்இதழை
சுத்தம் செய்வதில்
சிம்பு போல்.

வால் இல்லாக்குரங்கு
போல் வலைந்து நெளிந்து
குதித்தாடுவதில் பிரவு
தேவா போல்.

பந்தையம்  கட்டி மங்காத்தா
ஆடுவதில்  அஜித் போல்.

கூடவே இருந்து குறி
வைத்து தாக்குவதில்
பரத் போல்.

இன்னும் ஏராளமாகக்
கூறலாம்
என்னவனைப் பற்றி .

இத்தனை
அம்சங்களையும்
உள்ளடைக்கியவர்தான்
என்  கரம்  பிடித்த மன்னன்.....♥