Saturday 30 April 2016

தொளிலாளர் தின நல் வாழ்த்துக்கள்

தொழிலாளர் கை ஓங்க. வேண்டும்
முதலாளி  கை நீள வேண்டும் .

வறுமை ஒழிய வேண்டும்
வரவு சிறக்க வேண்டும்
அன்பு நிலைக்க வேண்டும் .

ஆரோக்கியமான வருமானம் பெருக வேண்டும்
குழந்தை தொழிலாளியின் கொடுமை மறைய
வேண்டும் .

ஒற்றுமையே பலம் என குரல் ஒலிக்கவேண்டும்
பணக்காரன் ஏழை முதலாளி தொழிலாளி .
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் எண்ணம்
மறையவேண்டும் நாடும் வீடும் மக்களும்
என்றும் நலமாக மகிழ்வாக  வாழ வேண்டும் .

அன்பு உறவுகள் அனைவருக்கும்
எனது தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள் .

குறிப்பாக. ...ஏழைத் தொழிலாளிக்கு என்
உள்ளம் நிறைந்த. வாழ்த்துக்கள்

 

வலைப்பூ

நீ யாரோ நான் யார அறியேன் ஆனால்
வளைத்துப் போட்டது வலைப் பூக்கள்
அறி முகம் மட்டும் வைத்துக் கொண்டு
வலைக்குள் மாட்டியது நமது அன்பு .

நூல் கொண்டு பின்னாத வலைப் பூக்கள்
தடைகள் பல வந்தாலும் கணினியைத்
தட்டித் தட்டிப் பேச வைக்கும் வலைப் பூக்கள்
வாசணை இல்லாது போனாலும் பாசமாக
உலகையே தன் வசம் எடுத்த பூக்கள்   .

ஆண்கள்  பெண்கள் வேற்றுமை இன்றி
தன் நினைவில் சூடிக் கொள்ளும் பூக்கள்
சிரமமும் கொடுக்கும் சிரிப்பும் கொடுக்கும் .

வீட்டில் திட்டும் வாங்கிக் கொடுக்கும்
புது தென்பும் கொடுக்கும் கனியாத
கணினிக்குள் கலையாத வலையாக 
வலைப்பூக்கள்  .

கவிஞர்களின் கவிதைகளையும்
கலைஞர்களின் கதைகளையும்
கில்லாடிகளின் கிலு கிலுப்புக்களையும்
அருளானந்தத் தாண்டவங்களையும்
ஆங்கில நடனங்களையும்
பல கிசு கிசு செய்திகளையும் .

இவைகளை விரித்த வலையில்
சிக்க வைத்து காட்டிக் கொடுக்கும்
வலைப்பூக்கள் மாற்றங்கள் பல
வந்தாலும் மாறாமல் வளர
வேண்டும் வலைப் பூக்கள்.

  
   

Friday 29 April 2016

வந்து நில் அன்பே

ராஜா எங்கிறான்
ராஜாங்கம் கொடுப்பேன் எங்கிறான்.
ராத்திரிப் பொழுதுக்கு
ராகம் பாட வா என அழைக்கிறான்.

மந்திரி எங்கிறான்
தந்திரி இல்லை எங்கிறான்.
மாந்திரிகம் செய்யப் போவதில்லை.
அமர்ந்திரி வந்து என்னோடு எங்கிறான்.

எவன் எவனோ எதை எதையோ சொல்லி
எனை அழைக்கிறான்.
எதுகும் சொல்லாது உன் மௌன மொழியே
என்னை மயக்குதடா.

கண்டுக்காது  நீ விட்டு விட்டு ஒதுங்குவது
கண்டு கலங்குகின்றது கண்ணுமடா.

உறவும் இல்லை பிரிவும் இல்லை
உனக்காக என் மனம் புலம்புகிறது நின்று.

பனிக்காற்றும் வந்து கொல்லாது
பனிப்போர் செய்து குளிர்த் தொல்லை கொடுக்குது.

நெருப்பாக நீ எரித்தாலும் உனை
நெருங்கவே நெஞ்சம் ஏங்குது.

தாங்காது இந்த பூவை மனம்
புரியாதது போல் பிரியாதே  அன்பே என்
பிரியத்தைப் புரிந்து வந்து நில் என் முன்பே.

          

Thursday 28 April 2016

சித்திரை மகளே வருக


சித்திரை மகளே வருக.
என் சித்தம்  தெளியவே நீ வருக.
சித்திரைக்கு உத்தமம்
என்று பெயர் உண்டு நீ வருக.
முட்டாள்தனம்  வகுத்த
சித்திரை மகளே வருக.

தமிழரின் புத்தாண்டு மகளே நீ வருக.
தரணியிலே வறட்சியை
உணர்த்திய மகளே வருக.
நித்திரையை பறித்து சித்திரவதை
செய்யும் மகளே நீ வருக.
உடை மீது உடல் வெறுப்படையச்
செய்யும் மகளே நீ வருக.

மதுரையை எரித்த கண்ணகியை
நினைவுறுத்தும் மகளே வருக.
கதிரவனின் அனல் வேகத்தை
கனல் பரப்ப செய்யும் மகளே நீ வருக.
குளிர்ந்த. நீர் தேடி விழுந்து குளிக்க
பாதம் நகர்த்தும் மகளே நீ வருக.
இளநீரின் மகுத்துவத்தை புரிய
வைக்கும் மகளே  நீ வருக.

எத்தனையோ பௌர்ணமி வந்து போகும்
சித்திரை பௌர்ணமிக்கு
சிறப்பளிக்கும் மகளே நீ வருக.
சேர்த்து வைத்தவன் சொத்தை எடுத்து
நாடு சுற்றி வர நாள் பார்க்க வைக்கும்
சித்திரை மகளே நீ வருக.

முந்திரியை பூத்து சிரிக்க வைக்கும்
மந்திரி மகளே நீ வருக.
முற்றத்திலே உற்றாரோடு நிலாச் சோறு
சேர்ந்து உண்டு முன் வாசலில் படுத்து
உறங்கி விழிக்க ஏங்கும் மனிதர்களுக்கு
ஏக்கம்  தவிக்கும் சித்திரை மகளே நீ
வருக வருக.......////

         

வாழ்க்கை வரமா சாபமா??,

வாழ்க்கை  ....வரமா? சாபமா? ஆராய்ச்சியில்
                  இறங்கியோர் பலர் இன்று இல்லை
வாழ்க்கை ....வரம் என ஆணித்தனமாக சொல்லும்
                     மனிதர்களும் இல்லை
வாழ்க்கை ... சாபம் தான் என்று சட்டசபையில்
                        ஓங்கி குரல் ஒலிக்கவும் இல்லை
வாழ்க்கை ...என்பதை இறுதி வரை வாழ்ந்து
                       முடிக்கலாம் என உறுதி மொழியும் இல்லை.

வாழ்க்கையை ... எப்படியும் வாழலாம் என்பவனுக்கு வரம்.
வாழ்க்கை ..... என்றால்  இப்படித்தான் வாழ
                               வேண்டும் என்பவனுக்கு சாபம்.
வாழ்க்கைக்கு..... வரை அறை வகுத்து வாழ்வபனுக்கு
                                     அது இன்பம்.
வாழ்க்கையில் ... வலிகளை சுமப்பவனுக்கு அது துன்பம்.
வாழ்க்கையிலே ... சாதித்துப்பார் சாதனையை
                                         யோசித்துப் பார்.
வாழ்க்கை .... வரம் எனப் புரியும் அழகாய் தெரியும்.

வாழ்க்கையில் .. எல்லாம் அனுபவிப்பவனுக்கு
                                     அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ....நல்ல நட்பின் உறவு கிடைத்தால்
                                     அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ..நினைப்பதெல்லாம் நடந்து முடிந்தால்.
                                   அது சொர்க்கம்.
வாழ்க்கையில் ...நமக்கு என்று ஓர் இடம் மக்கள்
                             கிடைத்தால் அது சொர்க்கமோ சொர்க்கம்.

வாழ்க்கையில் ...நினைப்பது ஒன்று நடப்பது
                              ஒன்றாக அமைந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோகமே நிரந்தரம் என்றால்
                                 அது துக்கம் .
வாழ்க்கையில் ...விரத்தி துரத்தி வந்தால் அது துக்கம்.
வாழ்க்கையில் ...சோதனையே தொடர் கதையானால்
                                    அது துக்கம் .

வாழ்கையில் ... அனைத்தும் கிடைத்து பிள்ளை
                                செல்வம் கிடைக்கா விட்டால் துக்கத்தின் மேல் துக்கம்.
வாழ்க்கை  .... வரம் என்பான் துன்பம் நெருங்காதவன்
வாழ்க்கை .... சாபம்  என்பான் வேதனையில் மூழ்கிப்போனவன்.
வாழ்க்கை ....வரமா? மாபமா? என்றால் விடிவு
                            இல்லாச் சாபம்  முடிவு இல்லா வரம்.
வாழ்க்கைக்கு .. விடை தேடி புறப்பட்டால் இறுதி
                                வரை கிடைப்பது கேள்விக்குறி போன்   நாமம் .
வாழ்க்கையில் ... நாம் பெற்ற வரம் மனிதனாக பிறப்பு எடுத்த
                              வரம் ஒன்றேதான் என்பேன்  நான்.
                                    

Wednesday 27 April 2016

இது நிஜம்

இனிக்க இனிக்க. உரையாடி
இள நெஞ்சங்களை கொள்ளை
கொண்டு  இழிச்ச வாய்
மக்களடா இவர்கள்  என்று  பச்சை
குத்தி விட்ட எம். பியடா நம்
மாவட்ட எம்பி .

ஓட்டுக்கு ரோட்டுப் போட்டான்
ஓட்டுப்போட்ட மை போலே
களைந்து விட்டதடா  அவன்
போட்டுத் தந்த ரோட்டும் .

பாதை போட்டவனே பாவமாக்கி
விட்டானடா சுயநலக் கரன்
செய்த செயலாலே சவுக்கடிப்
பாதை. சிதையுண்டு போனதடா.

   
(தளவாய் பாதை இவை  இலங்கை )

மேலோக உரையாடல்

பூ உலகிலே பூமிமேலே வாழும்
மனிதர்கள் எப்படி என்று கால
தேவைனைக் கேட்டேன்.

காலத்தால் கணிக்க முடியாத
கொடியவர்களே வாழ்கிறார்கள்
காலம் முடியும் தறுவாயிலும்
கொடுமைகள் புரிகின்றார்கள்  (என்றான் )

செல்வந்தர்களின் சொல்
வாக்கு எப்படி  என்றேன்.

சொல்லச் சொல்ல இனிக்கும்
சொல்லி முடிப்பார்கள் என்றான்.

சொன்ன வாக்கை நிறைவேற்றி
வைத்தது உண்டா என்றேன்.

சொன்ன வாக்குறுதியை காற்றில்
விட்டு விட்டு தன் இல்லத்தை
சொர்க்கம் ஆக்கியவர்களே
அதிகம் உண்டு என்றான்.

அறிவு என்று ஒன்று இல்லாத
மனிதர்களா அவர்கள் என்றேன்.

அறிஞர்களும் கவிஞர்களும்
விஞ்ஞானினியும் அஞ்ஞானியும்
உண்டு ஆனாலும் மடையர்களைத்
தான் நான் அதிகம் கண்டேன் என்றான்.

வேறு என்ன கண்டு வந்தீர்
கூறும் அனைத்தையும் என்றேன் .

நீர் இன்றி ஆகாரம் இன்றி
தெருவோரமாக மழலைத்
தொழிலாளியைக் கண்டேன்
கண்ட நொடி மனம் நொந்தேன்.

கவலை கண்ணீரோடு காதலர்களைக்
கண்டேன் சாதி மத வெறியர்களின்
பொல்லாத கடும் கோபம் கண்டேன்.

திட்டித்தீர்க்கார்கள் பாதை ஓரம்
நின்று கால தேவனாகிய என்னையும்
உயர்ந்த. ஜாதியின் மரண நேரத்தில்
கீழ் ஜாதியையும் இணைத்து காலத்தை
முடித்துக் கொண்டேனாம் .

உயர் ஜாதியின் உடல் அருகே
கீழ் சாதியின் உடலும் உண்டாம்
கையில் சிக்கினால் பக்கத்தில்
என் உடலும் உண்டு என்று முட்டி
மூதி ஓடி வந்து நின்றேன் உன்
முன்பு இதுதான் பூலோக வாழ்வு
என்னை நம்பு என்றான்...../////

       

இமை

உன்னை விட அழகு உன் இமை தானடி
உனக்கும் அது பெருமையடி.

அடிக்கடி துடிப்பது போல் என்னை
அழைக்காமல் அழைக்குதடி....

உன் இமைக்குள் நான் விழியாக
வர மனசும் தவிக்குதடி....

அது முடியாது என்பதால் உன்
இமை கொண்டு நான் போர்வை
யாகப் போர்த்த உன் அனுமதி தேவையடி.....

குயிலுக்குப் போட்டியாக கருமை நிறத்தில்
இமை உனக்கு மட்டும் ஏனடி..

உன் இரு இமையும் இணைவது உயிர்
இணையாக எனக்குத் தோணுதடி....

இணைந்த இமை திறக்கா விட்டால்
அதுதான் இறுதியடி....

அப்போதும் உனக்கு அது அழகுதானடி
நான் மட்டும் ரசிக்காமல்
நின்று தவிப்பேனடி...

     

கொலுசு

யம்மா  ராகினி அங்கே  ஏன் நின்று விட்டாயோ 
அடடா பார்த்து விட்டாயோ வெள்ளிக் கொலுசை.

நீ சிணுங்கி என்னை வதைப்பது போதாமல்
குலுங்கும் கொலுசும் போட்டு கிரங்கடிக்கப்
போராயோடி .

சில்லறை இருக்கா என்று கேட்காமலே
போட்டும் விட்டாயோ உன் கெண்டைக்
காலுக்கு எடுப்பாக உள்ளதடி....

இவன் இரவு வேளை தூக்கத்தில் உன்னை
கனவில் கண்டானோடி...
கச்சிதமாக செய்து இருக்கான் உன்
காலுக்கு அளவு  கனவில் எடுத்தானோ.

நீ மெத்தைக்கு  வரும் போது  நித்தமும்
விட்டு வந்தால் நல்லதடி....
சத்தம் எனக்கோ அது பெரும் தொல்லையடி..

இசை பாடும் கொலுசே என் அன்பை அள்ளிக்
கொள்ளவே  அவள் காலில்  பள்ளி  கொண்டாயோ
வெள்ளிக்  கொலுசே நீ சொல்லு கொலுசே .

     

பிள்ளைக்கு ஒரு தாலாட்டு

தெப்பக்குளத்து நீரிலே தாமரை மொட்டு.
இந்த அன்னை மடியிலே பிள்ளை சிட்டு.
காற்ரோடு நீரிலே மொட்டாடும்.
இந்த அன்னையின் காலிலே பிள்ளை தொட்டில்
ஆடும் ....ஆரிரீரிரீரிரீரிராரோ ... ஆராரிராரோ...//

ஆழ் கடல் சிப்பிக்குள் முத்து சிருக்கும்
ஆனந்தத்தில் என் பிள்ளை சிட்டுச் சிரிக்கும்.
கடலோரம் நண்டுக்கள் ஓடி விளையாடும்.
அன்னை மடியில் உறங்க வந்த பிள்ளை சிட்டு
கை கால் ஆட்டிவிளையாடும் .. ஆராரோ
.....ஆரிரரோ ..... ஆராரோ ..... ஆராரோ.

வானத்து நிலவு நின்று சிரிக்கும்
அதை வா என்று சொன்னாலும் அங்கே இருக்கும்
அன்னை மடியில் பூத்த நிலவு நித்தம்
சிரிக்கும் தலை முட்டி விளையாடும் போது
முத்தம்  கொடுக்கும் ..... ஆராரோ ...ஆரிரரோ
....ஆராரிரீரிரீரிராரோ .....ஆராராராராரோ.

மாலைப்பொழுதிலே மாலை மலர் கண் விழிக்கும்
இந்த மங்ஙையை அன்னையாக்கிய சின்ன
மலர் கண் உறங்கும் .
புது இதழ் பூத்த மலர் தேன் சுரக்கும்
புன்னகை பூத்த சிட்டின் இதழ் ஓய்வு எடுக்கும்
சுவைத்த பாலின் சுவை நாவில் இருக்கும்
அந்த சுவையோடு நீ உறங்க தாலாட்டும்
அன்னையடா ....ஆராரோ ... ஆரிரீரிரீரிவரோ

               

Tuesday 26 April 2016

ரதி தேவி

அடியே ரதிதேவி நீ தான் பிரம்மனுக்கு
படைக்கும் தொழிலுக்கு அங்கிகாரம்
வாங்கிக் கொடுத்தவளோ.

உன்னைப் படைத்த மறு கனமே மயங்கிய
காரணத்தால் தான் உன் கண்ணில்
வைத்தானோ திஷ்ரி  பொட்டாகக் கருவிழியை .

அடடா உன்னைச் செதுக்கிய மயக்கத்தில்
தான் அவன் படைப்பு  வேலையிலும்  சில தவறு
விட்டானோ அங்க. வினமாகப் படைக்கானோ
மனிதர்கள் முதல் மிருகம் வரையும் .

அலைமகள் மலைமகள் கலைமகள் மூவரின்
சிரிப்பினையைத் திருடிச் செய்த சிப்பமா
நீ இல்லை  கடல் அன்னையின் அன்பில்
கிடைத்த சிப்பியை  சுரண்டி செய்த
சிப்பமா நீயடி  பெண்னே.

பிரம்மனும் கொஞ்சம் ஓர வஞ்சனை உடைய
ஆண்தான் உனனைப் பார்த்ததும் அறிந்தேன்
நான் என்னிடம் இல்லையே இந்த அழகு.

திருமாலின் கையில் உள்ள தாமரைத் தண்டை
தானமாக வாங்கிச்  செய்தானோ உனக்கு விரல்
உன் அழகில் பொன் அழகும் மங்கியதால்
பெரும்  ஏமாற்றமடி நட்சத்திரத்துக்கு .

உன் தலையில் உள்ளது பனி மலையில் படர்ந்த
பனிமலரா இல்லை நீரில் மூழ்கி  மொட்டு விட்ட
அல்லி மலரா  முத்து முத்தாய் மழை நீர் எடுத்து செய்த
முத்து  மாலையா இல்லை அன்னப் பறவையின் காலில்
சிக்கிய குண்டு மணியா

உன் உடலுக்கு உடை கொடுத்தது வான்
மேகமா இல்லை தரை மயிலா இத்தனை
அழகையும் மொத்தமாக திரட்டி உன்னைச் செய்த
பிரமன் அன்றே இழந்து இருப்பான் அவன்
உறக்கத்தையடி  ரதிதேவியே ......///

      

Sunday 24 April 2016

துணிந்தேன்

கொஞ்சம் சோர்வு எடுத்தது என் நெஞ்சம்.
வஞ்சம் கொண்ட வார்த்தைகலோ உரமிட்டு
தூக்கி விட்டது இன்று.

விடியும் வரை இடி இடிப்பதுபோல் துடி துடிக்கிறது
பல சொற்கள் கவிதைகலாக வந்து.

எனக்குள்ளும் புயல்  அடிக்கும் என்று
உணரவைத்துச் சென்றது நன்று.

தொடர்ந்து கையில் எடுப்பேன் நான் என்றும்.
வெறும் வாய் மென்று வருவோருக்கு
நெருப்பாகப் பதில் கொடுப்பேன் நான்
எதிர்த்து நின்று.

வெள்ளாட்டுக் கூட்டத்திலே குள்ளநரி
நட்பூக்களே  அதை அடையாளம் கண்டு
அறுத்தெறி இனி என் சொல்லிலே பறக்கும்
தீப் பொறி.

ஆதங்கத்தின்  அரங்கத்தை தினமும்
அரங்கேற்றம்  செய்யப்போவதோ இனி 
என்  கரங்கள்  இது ஈயச்சுரங்கமடா
உன் இழுக்கான பேச்சு உருக்குலையுமடா.

என் இறுக்கமான முகமும் வறுத்தெடுக்கும்
வார்த்தைகளும் உன் கழுத்தை நெரிக்குமடா.

சொல்லாலே உனை அடித்து செல்லாக்காசு
போல் உனை மாற்ற புறப்பட்ட சொல்லாடல்
பெண் நானடா....../////

                  

Saturday 23 April 2016

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஏப்ரல் மாதம் 2016
----------------------------------------------------------------------------------
தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை

12

பாட்டெழுத வந்தேன் பாவையர்
என் கரங்கலாளே.
பார்த்த மட்டிலே சிரித்துக் கேலி
செய்தனர்  பாவலர் மன்றத்துப் பாடல் ஆசிரியர்.
சிலரின் கூற்ரோ அகப்பை பிடித்த கரங்கள் கவிதை

பிடித்து பாடல் சமைக்கப்போகின்றதாமே என்றனர்.
இது என்றோ நடந்தவை இன்று நினைக்கும்
போது எனக்குள்ளே எடுக்கின்றது கவியூற்று.

நுழைந்து ஓடும் காற்றுக்கு துழை விழுந்த வழி மூலம்
இசை கொடுப்பபை இறந்த மூங்கில்களே.
கம கம என மணக்கும் நெய்யும் ஒழிந்திருப்பதும் 
கறந்த பாலிலே அது சுரப்பதோ செங்குருதியிலே.
இறந்த மூங்கில்  என்று இருப்பிலே போட்டால்
இன்ப இசை உன்னை நாடி வந்து விடுமோ,?

வாடைக்குருதியின் வழியே கிடைத்த பாலில்
இருந்து பிரிந்த நெய் என்று நீ கூறி முகம் சுழித்து
நெய்ப்பதாத்தம் உண்ண மறுத்தால் நெய்யின் சுவையை
உன் நாவு அறிந்திடுமே,?

அகப்பை பிடித்த கரங்கள் என்று நீ தடுத்தால்
அக் கரங்களும் அடுக்கு மொழியில் பாடல் எழுதிட
எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விடலாமோ.
வடக்கு நோக்கி வணங்கினால் தவறு
கிழக்கு நோக்கி தூங்கினால் நன்மை

என்று இடக்கு முடக்கான கதைகளைப் பேசியே 
உலகை மடக்கி ஆழத் துடிக்கும் மடையர்களே.
பாட்டு ஒன்று நான் எழுதினால் அதில் பாதி வரி
பாரதி வரிகலாக வந்து உன் கழுத்தை நெரிக்குமடா.
மீதி வரிகள் வள்ளுவனின் காமத்து வரிகலாக வந்து

உன் காமத்தைப் பதம் பார்க்குமடா.
பாட்டு எழுத தேவை பாடசாலை இல்லையடா
பார்க்கும் நிகழ்வுகளிலே பாடல் பிறக்கும்.
காதல் கன்னியின் வரிகளிலே காந்தம் கலந்திருக்கும்.
கவலைக்காரன் பாடலிலே கண்ணீர் இசை இருக்கும்.

உணர்ந்து எழுதினால் எழுந்து நகர பாதம் மறுக்கும்.
செவி கொடுப்போருக்கு கவலை பறக்கும் .
அவைதான் பாடலடா அது அடுகளளை பெண்ணாலும்
எழுத இயலுமடா பாவையர் கரங்களும் பாட்டுப் புனையுமடா.

Friday 22 April 2016

நீயேதான் என் வித்தகன் ஆகவேண்டும்

உன் வீட்டு வேம்பு மரத்துக் கூட்டுக்கு
சொந்தமான காகமாக வேண்டும்.
உன் மந்தோப்புக் குயிலாக வேண்டும்.
உன் மார்வினிலே சாய்ந்தாடும்
மயிலாகவேண்டும்.
இத்தனை வித்தையும் புரியும்
பாவை நானாக வேண்டும்
அவை உன்னோடு தான் மீண்டும்
மீண்டும்  என்றாக. வேண்டும்.

பந்தோடு விளையாடும் கரமாக நீயாக வேண்டும்.
மணப்பந்தலுக்கு மாப்பிள்ளையாக நீ வரவேண்டும்.
நீ பூவுக்குள் நுழையும் தென்றலாக வேண்டும்.
தேனோடு உறவு கொள்ளும் வண்டாக வேண்டும்.
நீயே நீயாக வேண்டும் என்றென்டும்
என் இதழ் முத்தம்  திண்டாக வேண்டும்
அவை நீ தான் என்றாக வேண்டும்

தூறல் மழை தூறவேண்டும்
தூரத்து நிலவு மறையவேண்டும்
கார் மேகம் ஒன்று சேரவேண்டும்
அறை எங்கும் இருள் பரவவேண்டும்
இருளிலும் பெண்மையின்  நாணம் எழவேண்டும்.
நாணத்தோடு அமர்ந்து இருக்கும் பெண்
நானாக வேண்டும்.
என்றென்றும் அது உன் துணைவியாகவே
அமரவேண்டும் 
உன் துணையோடுதான் என்றாகவேண்டும்.

என் வெட்கம் உடைக்கும் உளி நீயாகவேண்டும்
என் பக்கம் உறங்கும் உடல் நீயாக வேண்டும்
என் பெண்மைக்கு காவலன்  நீயாக வேண்டும்
என் மூச்சுக்காற்றின் சூட்டை அறியும் விஞ்ஞானி
நீயாக வேண்டும்
அவை தொடர்ச்சியாக வேண்டும்
நமக்குள் இடைவெளி  குறைந்து கொண்டே
போகவேண்டும்  நித்தமும்  இத்தனைக்கும்
அது நீ தான் நீயேதான் என்றாக வேண்டும்.

     

இயற்கை அழகு

இயற்கையைப் பார்க்கும் கண்  அழகு
உண்மையை பேசும் வாய்  அழகு.

இயற்கை ஒலியைக் கேட்கும் காது அழகு
உயந்த மரத்துக்கு குயில்  ஓசை  அழகு.

மலர் பறிக்கும் கை அழகு
மலருக்கு பல வண்ணக் கலர் அழகு.
 
தரைப் புல்  வெளிக்கு பனித் துளி அழகு
படரும் கொடிக்கு காய்  அழகு.

பாதை ஓரம் மின் விளக்கு அழகு
இதமான காற்று தழுவும் போது
சுகமான சுகம் காணும் இதயம் அழகோ அழகு

  

ஊனப் பெண்

மதி அழகி என்றான்
மயங்கிப் போனேன்
விழி அழகி என்றான்
கிறங்கிப் போனேன் .

பொடலங்காய் கை அழகி என்றான்
நான் மெதுவாகத்  தொட்டுப் பார்த்தேன் .

கடலோரமா இருக்கும் திறந்த சிப்பி
போல் வாய்  அழகி என்றான்
என் இதழைக் கடித்தேன் .

கோலிக் குண்டு கண் அழகி என்றான்
கண்னை நானும் அங்கும் இங்கும்
உருட்டிப் பார்த்தேன் .

மீனாச்சிஅம்மன் போல் மூக்கு அழகு என்றான்
மெதுவாகச் சிரித்தேன் .

என் சிரிப்பைப் பார்த்து அடடா இந்தப்
பல்  வரிசையைப் பார்த்த பின்தான் சோளன்
வரி தவறாமல் விதை பதிக்கின்றதோ என்று
கேலியாக் கேட்டான் .

வெட்கம் கொண்டு நச்சென்று தும்மியும்
விட்டேன்
அப்போது அவன் ஆஹ இது அத்தனையும்
உண்மை என்பதை தும்மல் சொல்கிறதே என்றான் .

அவன் பழமையான. சிந்தனையைப்
பார்த்து உள்ளம் பூரித்தேன்
நைஸ்சாக என் விரலைக் கடித்தேன்

அய்யய்யோ. எங்க வீட்டுத் தோடடத்து
வெண்டைக் காய் போல் அல்லவா
இருக்கின்றது உன் விரல் என்று பொய்யான
புகழ் பாடினான் .

ஆசையின் பக்கம் என் மனம் எட்டிப் பார்த்தது
மொத்தத்தில் நிலாப் பெண் தத்தெடுத்த
பெண் நீ என்றான் .

என் மனம் தாவத்தான் செய்தது
என்னை அவன் வர்ணித்த விதம் பார்த்து
ஆயிரம் ஆயிரம் ஆசை பூக்களாக மலர
ஆரம்பித்த பின்தான் .

அவன் கண்ணில் பட்டது என் கால்
அரை குறைக் காலைப் பார்த்ததும்
மெதுவாக திரும்பி மௌனமாக  முகம்
சுழித்து  நின்றான் .

அப்போதுதான் எனக்கும் நினைவு வந்துவிட்டது
நாம் நொண்டி அல்லவா என்று என் காலைப் போல்
மனமும் ஊனமாக இருந்து இருந்தால்
நகராமல் இருக்கும் .

ஆனால் அது நகர்ந்து விட்டதே காதல் கடல் வரை
உடலை ஊனமாகப் படைத்த கடவுள்
உள்ளத்தையும் ஊனமாகப் படைத்து
இருந்தால் சில நொடிக்கு முன் நான் ஏமாந்து
இருக்க மாட்டேன் .

போலியான உலகத்தில் நிலை இல்லாத
அழகுக்குத்தான் மதிப்பு  உள்ளத்துக்கு
இல்லை சிலருக்கு உடலை நன்றாகப் படைத்து
உள்ளத்தை ஊனமாக்கி விட்டான் ஆண்டவன் 
எனக்கோ அங்கத்தை ஊனமாக்கி விட்டான்
இனிமேல் நான் ஆசையை  ஊனமாக்கி விட்டால் 
ஏமாற்றம் காண்பதேன் உள்ளம் .