மதி அழகி என்றான்
மயங்கிப் போனேன்
விழி அழகி என்றான்
கிறங்கிப் போனேன் .
பொடலங்காய் கை அழகி என்றான் 
நான் மெதுவாகத்  தொட்டுப் பார்த்தேன் .
கடலோரமா இருக்கும் திறந்த சிப்பி 
போல் வாய்  அழகி என்றான்
என் இதழைக் கடித்தேன் .
கோலிக் குண்டு கண் அழகி என்றான் 
கண்னை நானும் அங்கும் இங்கும்
உருட்டிப் பார்த்தேன் .
மீனாச்சிஅம்மன் போல் மூக்கு அழகு என்றான்
மெதுவாகச் சிரித்தேன் .
என் சிரிப்பைப் பார்த்து அடடா இந்தப் 
பல்  வரிசையைப் பார்த்த பின்தான் சோளன்
வரி தவறாமல் விதை பதிக்கின்றதோ என்று
கேலியாக் கேட்டான் .
வெட்கம் கொண்டு நச்சென்று தும்மியும்
விட்டேன் 
அப்போது அவன் ஆஹ இது அத்தனையும் 
உண்மை என்பதை தும்மல் சொல்கிறதே என்றான் .
அவன் பழமையான. சிந்தனையைப் 
பார்த்து உள்ளம் பூரித்தேன்
நைஸ்சாக என் விரலைக் கடித்தேன் 
அய்யய்யோ. எங்க வீட்டுத் தோடடத்து
வெண்டைக் காய் போல் அல்லவா
இருக்கின்றது உன் விரல் என்று பொய்யான 
புகழ் பாடினான் .
ஆசையின் பக்கம் என் மனம் எட்டிப் பார்த்தது
மொத்தத்தில் நிலாப் பெண் தத்தெடுத்த 
பெண் நீ என்றான் .
என் மனம் தாவத்தான் செய்தது 
என்னை அவன் வர்ணித்த விதம் பார்த்து
ஆயிரம் ஆயிரம் ஆசை பூக்களாக மலர 
ஆரம்பித்த பின்தான் .
அவன் கண்ணில் பட்டது என் கால்
அரை குறைக் காலைப் பார்த்ததும்
மெதுவாக திரும்பி மௌனமாக  முகம்
சுழித்து  நின்றான் .
அப்போதுதான் எனக்கும் நினைவு வந்துவிட்டது
நாம் நொண்டி அல்லவா என்று என் காலைப் போல்
மனமும் ஊனமாக இருந்து இருந்தால் 
நகராமல் இருக்கும் .
ஆனால் அது நகர்ந்து விட்டதே காதல் கடல் வரை 
உடலை ஊனமாகப் படைத்த கடவுள்
உள்ளத்தையும் ஊனமாகப் படைத்து 
இருந்தால் சில நொடிக்கு முன் நான் ஏமாந்து
இருக்க மாட்டேன் .
போலியான உலகத்தில் நிலை இல்லாத 
அழகுக்குத்தான் மதிப்பு  உள்ளத்துக்கு 
இல்லை சிலருக்கு உடலை நன்றாகப் படைத்து 
உள்ளத்தை ஊனமாக்கி விட்டான் ஆண்டவன்  
எனக்கோ அங்கத்தை ஊனமாக்கி விட்டான்
இனிமேல் நான் ஆசையை  ஊனமாக்கி விட்டால்  
ஏமாற்றம் காண்பதேன் உள்ளம் .
 
No comments:
Post a Comment