நான் நல்லவன் என்றும் சொல்லவில்லை 
கெட்டவன என்றும் சொல்ல வில்லை 
இந்த இரண்டுக்கும் துணைவன் நான்தான் .
இருந்தும் என்னை வெறுப்பது போல்
விரும்புவதும் விரும்புவது போல் வெறுப்பதும்
அனைத்து உயிர்களது  வேலையாகப்போய் விட்டது.
பகல் பொழுது அதிஷ்ரக் காரன்அவன் 
ஆட்சியில் எத்தனையோ தவறு நடக்கும் 
யாரும் அவனைத் திட்டியது இல்லை  .
என்னிடம் ஒப்படைத்து விட்டு அவன் சென்றால்
எத்தனை உயிரினம் எத்தனை விதமாக
என்னை சபிக்கின்றது .
அப்பப்பா ஏனோ தெரியாமல் இறைவனிடம்
கேட்டுப் பெற்று விட்டேன் இந்த வரத்தை 
இப்போது வருந்தி என்னாகப் போகிறது.
இரவு என்று நான் வந்த பின்தான் அமைதி காண்பது
ஊர் என் துணையோடு தான் வட்ட நிலா
எட்டிப் பார்ப்பதும் நட்சத்திரம் ஒளி கொடுப்பதும் 
அதைப் பார்த்து எத்தனை மாந்தர்கள்  கவிஞர்
ஆனார்கள் .
என் துணையோடு  என் சீடர்களான நிலா நட்சத்திரம்
இவைகளை ரசித்துக் கொண்டு என்னை எதிரியாகப் 
பார்க்கும் அநியாயக் காரர்கள் மனிதர்கள்  .
உழைப்பவர் அசதி போகத் தூங்க நான் தேவை 
திருடன் திருடி உண்ண நான் தேவை ஆண் பெண்
கூடலுக்கு என் உதவி தேவை அவர்கள் 
சந்ததி பெருக நான் தேவை இத்தனைக்கும்
என் துணை தேவை .
 இருந்தும் அவர்கள் குழந்தை அழுதால்
பூச்சாண்டி வாரான் என்பதும் கும்மிருட்டில்
பேய் உலாவும் நேரம் என்று பழி போடுவதும்
என் துணையோடு உறவு வைத்து உருவெடுத்த 
குழந்தைக்கு  என்னைக் காட்டியே பயம் காட்டும்  
இரக்கமற்ற மனிதர்கள் அப்பா இவர்கள் .
பகல் பொழுது அதிஷ்ரம் அதிகம் செய்தவன்
எத்தனை அதிசயம் பார்த்து இருப்பான்
குடிகாரன் கூட்டத்தை நான் தவறாமல் பார்ப்பேன் 
மழலை விளையாடிப் பார்த்தது இல்லை.
 பெண்கள்  கூடி வதந்தி பேசியதைப் பார்த்ததில்லை 
வீட்டுக் கஸ்ரம் என்று பலர் புலம்பல் கேட்டதமில்லை
மாமி மருமகள் சண்டை பார்த்ததுமில்லை  
இத்தனை அசம்பாவங்களும் அவன்
தினமும் பார்ப்பான் என்று பகல் பொழுதுக்கு வழி
விட்டு ஏக்கத்தோடு விரைகிறது இரவு .
 
  
No comments:
Post a Comment