நீ மலர் என்றால்  பூவுக்குள் 
வாசமாக நான் இருப்பேன் .
நீ நெருப்பு என்றால்  மெழுகு
பத்தியாக வந்து நிற்பேன்.
நீ கடல் நீர் என்றால் உப்புச்
சுவை நானாவேன்.
நீ காற்று என்றால்  உன்னையும்
சேர்த்து இழுக்கும் காற்றாடியாவேன் .
நீ மின்னல் என்றால்  பின்னாடி 
தொடர்ந்து வரும் இடியாவேன்.
நீ தென்றல்  என்றால்  உரசி
செல்லும் ஜன்னல் ஆவேன்.
நீ உறங்க நினைத்தால் 
நான் இமைக் கதவாக ஆவேன். 
நீ உயிர்  என்றால் நான்
மூச்சாக இருப்பேன்.
நீ உடல் என்றால் நான் 
உடையாகிப் போவேன்.
நீ  பிணம்  என்றால்  நான்
பாடையாவேன்.
நீ புதைக்குழி சென்றால் 
கல்லறை நானாவேன்.
நீ என்னைக் கலங்க வைத்தது போதும்.
கரைத்து விடு உன் கல் நெஞ்சத்தை.
கனிய விடு காதல் கனியை காத்திருக்கேன்
காதல் கனி பறிக்கவே உன் இதயத் தோப்பிலே.
 
  
No comments:
Post a Comment