Thursday 28 April 2016

சித்திரை மகளே வருக


சித்திரை மகளே வருக.
என் சித்தம்  தெளியவே நீ வருக.
சித்திரைக்கு உத்தமம்
என்று பெயர் உண்டு நீ வருக.
முட்டாள்தனம்  வகுத்த
சித்திரை மகளே வருக.

தமிழரின் புத்தாண்டு மகளே நீ வருக.
தரணியிலே வறட்சியை
உணர்த்திய மகளே வருக.
நித்திரையை பறித்து சித்திரவதை
செய்யும் மகளே நீ வருக.
உடை மீது உடல் வெறுப்படையச்
செய்யும் மகளே நீ வருக.

மதுரையை எரித்த கண்ணகியை
நினைவுறுத்தும் மகளே வருக.
கதிரவனின் அனல் வேகத்தை
கனல் பரப்ப செய்யும் மகளே நீ வருக.
குளிர்ந்த. நீர் தேடி விழுந்து குளிக்க
பாதம் நகர்த்தும் மகளே நீ வருக.
இளநீரின் மகுத்துவத்தை புரிய
வைக்கும் மகளே  நீ வருக.

எத்தனையோ பௌர்ணமி வந்து போகும்
சித்திரை பௌர்ணமிக்கு
சிறப்பளிக்கும் மகளே நீ வருக.
சேர்த்து வைத்தவன் சொத்தை எடுத்து
நாடு சுற்றி வர நாள் பார்க்க வைக்கும்
சித்திரை மகளே நீ வருக.

முந்திரியை பூத்து சிரிக்க வைக்கும்
மந்திரி மகளே நீ வருக.
முற்றத்திலே உற்றாரோடு நிலாச் சோறு
சேர்ந்து உண்டு முன் வாசலில் படுத்து
உறங்கி விழிக்க ஏங்கும் மனிதர்களுக்கு
ஏக்கம்  தவிக்கும் சித்திரை மகளே நீ
வருக வருக.......////

         

No comments:

Post a Comment