Friday 22 April 2016

புத்தகம்

யாரும் இல்லாத நேரத்தில் புத்தகம்
படிக்க ஆசை உண்டு.
அதை ரசித்துப் படிக்கத் தேவை சிந்தனை
இல்லாத மனம் கொண்டு.

தாயின் பாசத்தையும் தந்தையின் கண்டிப்பையும்
வரி வரியாக கூறும் சில பக்கங்கள்  அதை
சலிப்பு  இன்றி படிக்கத்தேவை தெளிவான மனம் ஒன்று.

கரும்பொருள் இல்லாக் கிறுக்கள்கலும்
அதில் சேர்ந்தே இருக்கும் அதை தேர்ந்து
எடுத்துப் படிக்க வேண்டும் கற்பூரப் புத்தி கொண்டு.

விரித்துப் படிக்கும் நூல் அனைத்தும்
நூதன வார்த்தை இல்லை உணர்ந்து
படித்தால் புரிந்து கொள்ள உண்மை அதில் உண்டு.
அறிந்து கொண்டால்  நன்மை நமக்குண்டு.

                  

No comments:

Post a Comment