அந்தி வானம் சிவந்தது போல் 
என்னவள் சிரித்தாள். 
கதிரவன் வரவு கண்டு கமல 
முகம் மலர்ந்தது போல் என் 
வரவு கண்டு முகம் மலர்ந்தாள். 
அந்தப் புர குயில் ஓசை போல்  
அத்தான் என்று ஒலி எழுப்பி 
என்னை அழைத்தாள். 
முல்லைக் கொடி போல் 
அருகே  வந்து பிண்ணிக் 
கொண்டாள். 
முத்தங்கள் நான் கொடுக்க. 
சத்தம் இன்றி பெற்றுக்கொண்டாள். 
வெட்கம் நாணம் அச்சம் 
இவைகளை கட்டி விட்டாள். 
நான் கணவன் என்ற 
உரிமையில் ஒட்டிக் கொண்டாள்.  
வேகமாக வந்த தென்றலில் 
சிக்கிய கூந்தல் மழை மேகம் 
கண்ட மயில் தோகை விரித்தாடுவது 
போல் விரிந்தது  
கூந்தலின் நடுவே என் 
கரங்கள் நுழைந்தது 
மீன் விழி மெல்ல மயங்கி 
இமைக் கதவு சாத்தியது  
சேர்த்து அணைத்துக் கொண்டேன் 
அன்பே என்று செந்தமிழ் சொல்லால் 
அழைத்தாள்  
 
  
No comments:
Post a Comment